நச்சு நீக்கியாகப் பயன்படும் அன்னாசிப்பூ டீடாக்ஸ் வாட்டரின் 7 நன்மைகள்!

7 Benefits of Pineapple flower Detox Water
7 Benefits of Pineapple flower Detox Waterhttps://www.detoxwater.com

டீடாக்ஸ் வாட்டர் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறது. இது குடலில் உள்ள நச்சு நீக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க இது பயன்படுகிறது. பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கலாம். அன்னாசிப் பூவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீடாக்ஸ் வாட்டரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. அன்னாசிப் பூ கலந்த டீடாக்ஸ் வாட்டரை தினமும் பருகுவதால் உடல் முழுவதும் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது இதய நோய், கீல்வாதம் போன்ற உடல்நலப் பிரச்னைகளை சரி செய்கிறது.

2. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. இது வளர்சிதை மாற்றத்தையும் செரிமானத்தையும் அதிகரிக்கிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் சர்க்கரை நோயாளிகளின் அதிகப்படியான பசியை தீர்ப்பதற்கும் இது உதவுகிறது.

3. இருமல், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் வளர்ச்சி போன்ற சுவாசக் கோளாறுகளை நீக்கும் சக்தி இந்த அன்னாசிப்பூ டீடாக்ஸ் வாட்டரில் உள்ளது.

4. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் தசைப்பிடிப்பு, வீக்கம் போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. மேலும், சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கிறது.

5. இந்த டீடாக்ஸ் வாட்டரை தினமும் பருகி வந்தால் இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுகின்றன. இதனால் வயதான அறிகுறிகளை குறைக்கிறது. இளமையான தோற்றத்திற்கு உதவுகிறது. தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை அளிக்கிறது.

6. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நோய் தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

7. இந்த டீடாக்ஸ் வாட்டர் மன அழுத்தத்தை குறைத்து அமைதியை தருகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒரு டம்ளர் அன்னாசிப்பூ டீடாக்ஸ் வாட்டரை பருகினால் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும். நல்ல நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வரும்.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க சில யோசனைகள்!
7 Benefits of Pineapple flower Detox Water

அன்னாசிப்பூ டீடாக்ஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். மூன்று அன்னாசிப் பூக்களை அந்த நீரில் சேர்க்கவும். 15 நிமிடங்கள் அதைக் கொதிக்க விடவும். அது ஆறியவுடன் வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். அதில் கூடுதல் சுவைக்காக சில எலுமிச்சை துண்டுகள் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் இலவங்கப்பட்டை 2, புதினா இலைகள் போன்றவற்றை சேர்க்கலாம். இந்த கலவையை இரவு முழுவதும் மூடி வைக்கவும். மறுநாள் எழுந்து குடிக்கவும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் இதை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com