ஏசி மெக்கானிக் உங்களை ஏமாற்றுகிறாரா... கேஸ் அளவை வீட்டிலேயே 2 நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்!

ஏசியில் கூலிங் குறைந்தால் கேஸ் தீர்ந்துவிட்டதாக நினைத்து மெக்கானிக்கிடம் பணத்தை இழக்கும் முன், நீங்களே கேஸ் அளவை சுலபமாக சரிபார்க்கும் எளிய தந்திரம்.
AC gas checking at home
AC gas checking at home
Updated on

AC gas checking at home: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் ஏசியை நம்பி இருக்கும் அந்த நேரத்தில் திடீரென கூலிங் குறைந்தால் நமக்கு ஏற்படும் பதற்றம் மிக அதிகம். உடனே நாம் ஒரு உள்ளூர் மெக்கானிக்கை தொடர்பு கொண்டு வரச் சொல்வோம். அவர் வந்ததும் ஏசியில் கேஸ் இல்லை என்று மிகச் சாதாரணமாகக் கூறுவார். இது உண்மையா என்பதை எப்படி நாமே சுலபமாகக் கண்டறிவது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

ஏமாற்று வேலைகள்!

பல நேரங்களில் சில ஏமாற்று வேலை செய்யும் மெக்கானிக்குகள் நமது அறியாமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இயந்திரத்தை முழுமையாகச் சோதனை செய்யாமலேயே, கேஸ் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டது அல்லது லீக் ஆகிவிட்டது என்று பொய்யான காரணங்களைக் கூறுவார்கள்.

பின்னர் கேஸ் ரீ-ஃபில்லிங் செய்ய வேண்டும் என்று கூறி இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை நம்மிடம் இருந்து மிக எளிதாக ஏமாற்றிப் பறித்து விடுவார்கள். பெரும்பாலான வீடுகளில் கேஸ் அளவு சரியாக இருக்கும்போதே பொதுமக்கள் இந்த மோசடிக்குப் பலியாகி விடுகிறார்கள்.

பணத்தை சேமிக்க உதவும் பிரத்யேக கருவி!

இந்தத் தேவையற்ற பண விரயத்தைத் தடுக்க ஒரு சூப்பரான வழி உள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் மேனிஃபோல்ட் கேஜ் செட் (Manifold Gauge Set) என்றொரு பிரத்யேக கருவி மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த மீட்டரை நீங்கள் ஒரே ஒரு முறை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால் போதும். பல வருடங்களுக்கு உங்களை யாரும் ஏமாற்ற முடியாது என்பதுடன் ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தையும் நீங்கள் மிகச் சுலபமாக மிச்சப்படுத்தலாம்.

பரிசோதனை செய்யும் முறை!

உங்கள் ஏசியில் கூலிங் குறையும் பட்சத்தில் அவசரப்பட்டு மெக்கானிக்கை அழைப்பதற்கு முன்பாக நீங்களே ஒரு சிறு பரிசோதனை செய்யலாம். உங்கள் ஏசியின் அவுட்டோர் யூனிட் இருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு உள்ள கம்பிரசர் இயந்திரத்துடன் ஒரு சிறிய வால்வு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது நீங்கள் வாங்கிய அந்த மேனிஃபோல்ட் கேஜ் செட் கருவியின் குழாயை அந்த வால்வுடன் கவனமாக இணைக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
பல மாசமா மூலைல தூங்குற ஏர் கூலரை யூஸ் பண்ணப்போறீங்களா.. இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!
AC gas checking at home

இப்படி இணைத்த மறுகணமே அந்த மீட்டரில் உள்ள முள் கம்பிரசருக்குள் இருக்கும் அழுத்தத்தின் அளவைத் தெளிவாகக் காட்டிவிடும். அந்த அளவை உங்கள் ஏசி நிறுவனத்தின் கையேட்டில் உள்ள அளவோடு ஒப்பிட்டுப் பாருங்கள். முள் காட்டும் அளவும் கையேட்டில் உள்ள அளவும் சரியாக இருந்தால் உங்கள் ஏசியில் கேஸ் முழுமையாக உள்ளது என்று அர்த்தம். மெக்கானிக் உங்களிடம் பொய் சொல்லிப் பணம் பறிக்க முயல்கிறார் என்பதை நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

கசிவுகளைக் கண்டறிவதன் முக்கியத்துவம்!

ஒருவேளை நீங்கள் சோதனை செய்யும்போது நிஜமாகவே கேஸ் அளவு குறைவாக இருந்தால் உடனடியாக கேஸ் நிரப்பக் கூடாது. ஏசியில் உள்ள கேஸ் ஒருபோதும் தானாகவே தீர்ந்து போக வாய்ப்பே இல்லை. உள்ளே உள்ள பைப்புகளில் எங்காவது கசிவு இருந்தால் மட்டுமே கேஸ் அளவு குறையும். எனவே அந்த லீக்கேஜ் பாயிண்டைக் கண்டுபிடித்து முதலில் அடைக்கச் சொல்ல வேண்டும். அதைச் செய்யாமல் கேஸ் நிரப்பினால் சில நாட்களிலேயே மீண்டும் கேஸ் முழுமையாக வீணாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
பழைய ஏசி வெடித்து சிதறும் ஆபத்து.. இந்த 5 அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே மாற்றுங்கள்!
AC gas checking at home

இது போன்ற சில அடிப்படைத் தொழில்நுட்ப விவரங்களைத் தெரிந்து கொள்வது நம்மை ஒரு விழிப்புணர்வுள்ள ஸ்மார்ட்டான வாடிக்கையாளராக மாற்றும். வெறும் இரண்டு நிமிடங்கள் செலவழித்து இந்தச் சோதனையைச் செய்வதன் மூலம் உங்களின் உழைத்த பணத்தை நீங்கள் பாதுகாப்பாகச் சேமிக்க முடியும். 

logo
Kalki Online
kalkionline.com