
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகக் கூடாது, ஐந்து வகையான மக்களிடம் நட்பு பாராட்டுவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சாணக்கியர் கூறிய கருத்துக்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...
பொதுவாகவே நம் வாழ்க்கையில் பார்த்து பழக வேண்டும் என்ற வார்த்தையை கேள்வி பட்டிருப்போம். ஆனால் எப்படி அறிந்து கொள்வது என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கும். பலரும் அவர்களது வாழ்க்கையில் சாணக்கியரின் வார்த்தைகளை பின்பற்றுவார்கள். தற்போது இந்த கேள்விக்கும் சாணக்கிய நீதி நூலில் உள்ள கருத்துக்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
போலியான நட்பு:
காலங்கள் மாறினாலும், சில விஷயங்கள் எப்போதும் மாறாது. அதில் குறிப்பிடத்தகுந்தது நட்பு பாராட்டுதலும், நண்பர்களும் தான். ஆனால், அனைவருடனும் தான் நட்பு பாராட்ட வேண்டும் என்ற மனநிலையில், யாருக்கும் உண்மையான நண்பனாக இல்லாத நபர்களிடம் நட்பு பாராட்ட வேண்டாம். சூழ்நிலைக்கேற்ற வகையில் பழகக்கூடிய நபர்களிடம் நட்பு கொள்ளாதீர்கள்.
வெற்றியை கண்டு பொறாமைப்படுபவர்கள்:
சிலர் உங்கள் மீது பொறாமை கொண்டாலும் கூட, வெற்றியில் உடன் இருப்பார்கள். ஆனால் வெகு சிலர் நம் முன்னேற்றத்தை கண்டு வயிற்றெரிச்சல் அடைவார்கள். அவர்களை உடனேயே வைத்திருப்பது உங்களின் வெற்றியை கெடுக்கும். அவர்கள் உண்மையானவர்களாகவும் இருக்க முடியாது.
பொறாமைப்படுபவர்கள்:
உங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் ஒருபோதும் உங்கள் நண்பர்களாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் உங்கள் முன் புன்னகைக்கக் கூடியவர்களாகவும், உங்கள் முதுகுக்குப் பின்னால் கிசுகிசுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இருந்து விலகுவது நல்லது.
அதிகமாகப் பேசுபவர்கள்:
இது சற்று விசித்திரமாக தோன்றலாம். ஆனால் சாணக்கிய நிதியின் படி, அதிகமாக பேசுபவர்கள் பல நேரங்களில் நம்பிக்கையானவர்களாக இருப்பதில்லை. இவர்கள் எதையாவது பேசிக் கொண்டே இருக்க நினைப்பதால், பல நேரங்களில் நாம் பிறரிடம் எதை மறைக்கின்றோமோ, அதை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் மனம் விட்டு பழக முடியாது. நம்பி எதையும் பேச முடியாது.
குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்:
குறுகிய மனப்பான்மை எப்படி நட்பை கெடுக்கும். அவர்களிடம் நட்பாக இருப்பதால் என்ன பிரச்னை என தோன்றும். ஆனால், பொதுவாக குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் மனநிலை எப்போதும் பெரியளவில் யோசிக்காது. பெரிய இடத்திற்கு முன்னேறுவதற்கான முயற்சியில் ஈடுபடாது. அதே போல தன் நண்பரும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.