
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
அப்படி சாணக்கியர் கூற்றுப்படி வாழ்க்கையில் வெற்றி அடைய எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பொதுவாகவே நமது வாழ்க்கையில் நிதி நிலையிலோ, கனவிலோ, லட்சியத்திலோ வெற்றி அடைந்து வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கும். ஆனால் அனைவராலும் வெற்றியை அடைந்துவிட முடியாது. அதற்கு காரணம் சில செயல்களை நம் தொடர்ந்து செய்வது தான். அப்படி சாணக்கியர் கூற்றுபடி நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
சோம்பல்:
வாழ்க்கையில் சோம்பல் என்பது பெரிய வியாதி என்றே சொல்லலாம். இதை தவிர்ப்பதே முதன்மையான ஒன்றாகும். பெரிய இலக்குகளையும் சோம்பல் சிரிதாக்கி விடும். நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணம் இலக்குகளை அடைவதை தாமதிக்கும்.
பாதுகாப்பின்மை:
ஒரு செயலை செய்வதற்கு முன்பு இது சரியா தவறா என்று நினைப்பது தவறல்ல. ஆனால் பாதுகாப்பின்மை காரணமாக அதை செய்யமுடியாமலேயே தாமதிப்பது வாழ்க்கையின் வெற்றியை தடுக்கும். துணிந்து முன்னேறினால் வெற்றி உங்கள் வசம். புதிய வாய்ப்புகளை ஏற்க தயங்காமல் இருக்க வேண்டும்.
பேராசை:
வாழ்க்கையில் ஆசைப்படுவது தவறல்ல. நமது தகுதிக்கும், தேவைக்கும் ஏற்ப ஆசைப்படுவது அவசியமாகும். பேராசை மற்றவர்களை காயப்படுத்தும். சுயநலமாக வாழ்க்கையை வாழ தூண்டும். அதனால் பேராசையை கைவிடுதல் அவசியமாகும். பல சமயங்களில் பேராசை தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.
கோபம்:
நாம் எடுக்கும் முடிவுகளை நிதானத்துடன் செயல்படுத்துவது அவசியமாகும். கோபத்துடன் செய்யப்படும் எந்த செயலும் தவறானதாகவே போய் முடியும். இது சில உறவுகளின் பிரிவுக்கும் வழிவகுக்கும். எனவே கோபத்தை குறைத்து நிதானத்தை கையாளவும்.
ஆணவம்:
பிறரிடம் ஏதேனும் புதிய விஷயங்களை கற்று கொள்வதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது. யாரும் உலகில் பெரியவர்களும் இல்லை, சிறியவர்களும் இல்லை. யாரிடம் கற்று கொண்டாலும் வாழ்க்கையில் வெற்றி கனியை சுவைக்கலாம். எனவே ஆணவத்தை தடுத்து மகிழ்ச்சியாக வாழ்வது அவசியமாகும்.