ஆப்பிள் பழத்தில் உள்ள அற்புதப் பயன்களை அறிவோம்!

Amazing benefits of apple fruits
Amazing benefits of apple fruitshttps://www.health.harvard.edu
Published on

ப்பிள் பழத்தை உண்ண விரும்பாதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணும் அருமையான பழம் ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும், மருத்துவமனை பக்கம் செல்ல வேண்டாம் என்றொரு ஆங்கிலப் பழமொழியே உண்டு.

ஆப்பிள் பழம் பார்க்க மிகவும் அழகாக இருப்பதாலும், சாப்பிட மென்மையாக இருப்பதாலும் விலை அதிகமாக இருந்தாலும் இதனை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதில் வைட்டமின் பி1, பி2, சி சத்துக்கள் சிறிதளவு இருக்கின்றன.

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆப்பிள் பழத்தை சிறு சிறு துண்டுகளாகி தேனில் நனைத்து காலை, மாலை என இரு வேளை ஐந்து துண்டுகளை ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நோயைப் போக்கலாம்.

இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து நோஞ்சனாகக் காட்சி அளிப்பார்கள். எப்போதும் இவர்கள் சோகமாக இருப்பார்கள். இப்படி உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் பழத்தை சாறு பிழிந்து அதில் சிறிதளவு குங்குமப்பூ, சிறிதளவு ஏலக்காய் கலந்து சாப்பிட்டு வர, இரத்த சோகை நோய் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணிப் பெண்கள் இரவில் நன்றாகத் தூங்குவதற்கான வழிகள்!
Amazing benefits of apple fruits

குழந்தைகள் புஷ்டியாக வளர வேண்டுமா? அப்படி வளர வேண்டுமானால் சத்துள்ளவர்களாக துடிப்புள்ளவர்களாக இருக்கவேண்டுமானால் ஆப்பிள் பழத்தை இரண்டு துண்டுகளாக்கி இட்லி பாத்திரத்தில் ஏழு நிமிடங்கள் வேக வைத்து பின்னர் எடுத்து நன்கு மசித்து குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

சிலர் எப்பொழுதும் சோர்வுடனேயே காணப்படுவார்கள். முகத்தில் சிறிதளவு தெளிவு கூட காணப்படாது. இப்படிப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நல்ல டானிக்காக உள்ளது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் இல்லை என்றாலும், ஆரோக்கியமான, உடம்புக்குத் தேவையான சத்துக்கள் உள்ளதால், இந்தப் பழத்தை வாங்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வாங்கி உண்டு பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com