
எறும்பின் தலைப்பகுதியில் ஆண்டனா Antenna போன்ற இரண்டு அமைப்புகள் உள்ளன. இவற்றின் வழியாக இனிப்பு பண்டங்கள் இருக்கும் இடத்தை எறும்புகள் உணர்கின்றன.
இத்தகைய Chemoreceptors மூலம் இனிப்பு பண்டங்கள் சுவையையும் , மணத்தையும் எறும்புகளால் அறிய முடிகின்றன.
இவைகளால் எந்த திசையில் இருந்து மணம் வருகிறது என்பதை அறிய முடியும் .
இந்த இனிப்பு பண்டங்கள் ஏதேனும் காகிதங்களை சுற்றப்பட்டு இருந்தாலும் சரி, பாத்திரங்களை வைத்து மூடப்பட்டிருந்தாலும் சரி, இவைகளால் அறிந்து கொள்ள முடியும்.
அதுக்கு தகுந்தாற்போல் அவை சிறு துவாரங்கள் வழியே உள்ளே சென்று இனிப்பைச் சுவைக்கின்றன. சுமந்து செல்கின்றன
உங்களுக்கு தெரியுமா, ஒரு எறும்பு தன் எடையை போன்று 50 மடங்கு எடையை சுமந்து செல்ல இயலும் என்று? இவ்வாறு அறிவியல் அறிவியலாளர் கண்டறிந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பூச்சிகளுடைய சிறு உடலில் ஏறக்குறைய 1000 வகையான தசைகள் உள்ளன. ஆனால் மனித உடல்நிலை தசைகள் வகையில் 800 மட்டுமே. அடுத்து பூச்சிகளுடைய தசைகள் அயர்வு சோர்வு தளர்ச்சிகளுக்கு உட்படுவதில்லை.
மனிதனுக்கும் எறும்புக்கும் இடையே உள்ள மற்றொரு முக்கியமான வேறுபாடு என்னவெனில், எறும்புக்கு மூன்று ஜோடி கால்கள் உண்டு இதனால் சுமந்து செல்லும் சுமையின் எடை முழுவதும் எறும்பின் ஆறு கால்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுகிறது . மாறாக மனிதனின் இரு கால்கள் மட்டும் எடை அனைத்துமே சுமந்து செல்ல வேண்டிய நிலைமை.
எறும்புகள் நமக்கு போதித்திடும் உன்னத வாழ்க்கை நெறிமுறைகள் நிறைய. ஆனால், அந்த எறும்புகளுக்கான உணவை நாம் உரிய முறையில் அளிப்பதில்லை.
தற்போது கல்லால் ஆன மாவை வாசலில் போடும் கோலத்துக்கு உபயோகப்படுத்துகிறோம். இது ஜீவராசிகளுக்கு இழைக்கப்படும் பெருத்த அநீதி ஆகும்.
எறும்புகள் தம் புற்றை விட்டு இரை தேடுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக கூட்டம் கூட்டமாக செல்கின்றன. இரை தேடுவதற்கு முன்பு அவற்றில் Scout ஸ்கவுட் எறும்புகள் எனப்படும் சில எறும்புகள் கூட்டை விட்டு வெளியே சென்று, எங்கே அதிக அளவில் தேவையான உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன என்பதை நோட்டமிட்டு வரும் .
அவ்வாறான இடத்தை இந்த ஸ்கவுட் எறும்புகள் கண்டுபிடித்த பின் சில மாதிரி உணவு துகள்களை தம்முடன் எடுத்து வந்து புற்றில் உள்ள மற்ற எறும்புகளிடம் காண்பிக்கும்.
தன்னுடைய புற்றுக்கு திரும்பி வரும்போது இந்த ஸ்கவுட் எறும்புகள் தாம் ஊர்ந்து வரும் பூமியின் மீது தன்னுடைய அடிவயிற்றை அழுத்தி, Defour's Glandலிருந்து Trial Pheromone என்ற வேதியல் திரவத்தைச் சுரக்கும். இவ்வாறு சுரக்கப்பட்ட திரவமானது உணவு பொருள் இருக்கும் இடத்தில் இருந்து புற்று வரை காணப்படும்.
புற்றுக்கு திரும்பி வந்த scout எறும்புகள் மற்ற எறும்புகளைத் துரிதப்படுத்த, உணவு இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
எறும்புகளப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்...