சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவதில் இத்தனை நன்மைகளா?

solar Panel light
solar Panel light
Published on

சோலார் விளக்குகளின் பயன்பாடு இப்பொழுது எல்லாம் அதிகரித்து வருகின்றன. பெரிய அளவில் பேனல்கள் அமைத்து சோலார் லைட்டை பயன்படுத்துபவர்கள் பெருகி வருகிறார்கள். அதை விடுத்து வீடு, தோட்டம், சுற்றுப்புறம் மற்றும்  சில பகுதிகளில் இதை உபயோகிப்பவர்களும் உண்டு. அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

சோலார் லைட்டை ஸ்ட்ரீட் லைட் ஆக போட்டு வைக்கும்போது வீட்டிற்கு இரவில் நல்ல பாதுகாப்பு கிடைக்கிறது. இதனால்  அக்கம்பக்கத்தினர் வீட்டில் உள்ளவர்களுக்கும் சில நன்மைகள் கிடைக்கின்றன. சோலார் லைட் மிகவும் பிரகாசமாக எரிய வேண்டும் என்றால் அதனை ஒட்டிய இடங்களில் ஆள் மற்றும்  விலங்கினங்களின் நடமாட்டம் இருக்கும்பொழுது நன்றாக வெளிச்சமாக இருப்பதை உணரலாம்.

இதை வீட்டை சுற்றிலும் போட்டு வைத்துவிட்டு வெளியூர் சென்று வரும்போது வீட்டிற்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கிறது .மேலும், கார் ஷெட் போன்ற இடங்களில் அதன் வெளிச்சம் படும்படி வைத்து விட்டால் எலிகளின் நடமாட்டம் குறைந்து காரை எப்படி நிறுத்தி விட்டு சென்றோமோ அப்படியே பார்க்க முடியும். இல்லையேல் சில நேரங்களில் லைட்டை போட மறந்து இருட்டில் காரை நிறுத்தி விட்டால் எலி காரின் அடியில் சென்று சில ஒயர்களை கடித்து வைத்து விடும். பிறகு அதை ரிப்பேர் செய்துதான் ஓட்டுவது என்றால் அதற்கு தனியாக மெனக்கிட வேண்டி இருக்கும். .இந்த சோலார் லைட்டை போட்ட பிறகுதான் கார்  பாதுகாப்பாக இருப்பதை உணர முடிகிறது. பெருச்சாளியும் காருக்கு அதிகம் குடைச்சல் கொடுத்து கொண்டிருந்தது. சோலார் லைட் வந்த பிறகு அந்தப் பக்கமே இப்பொழுது வருவதில்லை.

இதையும் படியுங்கள்:
பெண் குழந்தைகள் பொம்மைகளுடன் அதிகமாக விளையாட விரும்புவது ஏன்?
solar Panel light

மேலும், லேண்டர்ன் டைப் லைட்டுகளால் தோட்டத்தில் இருக்கும் செடி, கொடிகளுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த லைட் வெளிச்சத்திற்கு பெருச்சாளி வருவதில்லை. இதனால் தோட்டத்தில் தொட்டிகளில் வளர்த்து வைத்திருக்கும் முள்ளங்கி போன்ற செடிகள் பாதுகாப்பாக இருக்கின்றன.

இல்லையேல், பெருச்சாளி தோட்டத்தில் நன்றாக வளர்ந்திருக்கும் செடிகளுக்கு அடியில் சென்று அதை பாழாக்கி விடும். இதனால் வளர்ச்சி குன்றி பிஞ்சு விட்டிருந்த காய்கள் கூட காய்க்காமல் இருந்தது. காரணம், பெருச்சாளி மண்ணை குவிப்பதுதான். அப்படி தோண்டி தோண்டி குவிக்கும்போது, செடிகள் நட்ட இடங்கள் எல்லாம் பள்ளமாகி வேர்கள் எல்லாம் வெளியில் தெரிய ஆரம்பித்து விடும். அதன் பிறகு செடி வளர்ச்சி குன்றிவிடும். பிறகு அந்த செடிகளை எல்லாம் களைந்துதான் போட வேண்டி இருந்தது. இந்த சோலார் லைட் போட்டவுடன் எலியும் வருவதில்லை. பாம்பு வகைகளும் அடியோடு வருவதை நிறுத்தி விட்டன. இது லேண்டர்ன் வகை லைட்டுகளால் கிடைக்கும் நற்பயன்கள் என்றால் மிகையாகாது.

அதிலும் தெருவுக்கு போடும் பிரைட்டான லைட்டை வாழை மரங்களை நோக்கி வைத்து விட்டால் வாழை மரங்கள் செழிப்பாக வளருவதை காண முடிகிறது. அவற்றை நன்றாக பூத்து காய்த்து குலுங்கிக் கொண்டிருந்த அவரை செடியின் பக்கம் திருப்பி வைத்தபோது அதிகமான வெளிச்சத்தின் காரணமாக அப்படியே பழுப்பேறி காய்ப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது.

அப்பொழுதுதான் இதுபோன்ற பிரைட்டான லைட்களை செடி, கொடிகளை நோக்கி வைக்கக் கூடாது என்பதை தெரிந்து கொண்டோம். ஆதலால் லேண்டர்ன் விளக்குகளை அங்கங்கே வைத்து விட்டால் காய்ப்பது பூப்பது என்று எதிலும் தடை ஏற்படுவதில்லை. எல்லாம் இயல்பாக நடக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் பால்கனியில் எளிதாக வளர்க்கக்கூடிய 5 பழச்செடிகள்!
solar Panel light

இப்படி வீட்டைச் சுற்றிலும் அதிக செலவில்லாத சோலார் லைட்டை போட்டு வைத்து விட்டோமானால் திருட்டு பயம் இல்லாமல் இருக்க முடியும். தேவையில்லாமல் மின்சார கட்டணம் எகிறுவதையும் தடுக்க முடியும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது வீட்டிற்கு இந்த லைட் நல்ல பாதுகாப்பு அளிப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, இரவு முழுவதும் கார் ஷெட்டில் மின் லைட்டை போட்டு வைத்துதான் எலி, பெருச்சாளி போன்றவற்றின் வரவை தடுக்க முடிந்தது. இப்பொழுது சோலார் லைட்டை போடுவதால் மின்சார தேவையின் பயன்பாடு குறைந்து வருவதுடன் விஷ ஜந்துக்களின் வருகையும் குறைந்து செடிகள் நன்றாக வளர வழி ஏற்பட்டுள்ளது.

தினசரி மாலை ஆறு மணியில் இருந்து இரவு 9 மணி வரை கொல்லைப் பக்க வாசல்கள், தெரு பக்கம் வாசல், தோட்டம், கார் ஷெட் என்று இன்னும் பல இடங்களில் இரவு முழுவதும் மின் விளக்குகள் எரிந்த பொழுது மின்சாரக் கட்டணம் அதிகமாக இருந்தது. இப்பொழுது குறைந்திருப்பது தெரிய வருகிறது. ஆதலால் இதுபோன்ற எளிமையான ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொண்டால் வெளியில் சென்று வரும் நாட்களில் வீடும் தோட்டமும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com