Are there so many types of laughter?
Smiling women

சிரிப்பில் இத்தனை வகைகளா? அடடா… இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

Published on

சிரிப்பு என்பது பல வடிவங்களில் வெளிப்படும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். இதில் பல வகைகள் உள்ளன. சிரிப்பு என்பது இயற்கையாகவே வெளிப்படும் விஷயமாக இருந்தாலும், சில நேரங்களில் வேண்டுமென்றே உருவாக்கப்படுவதாகவும் உள்ளது. சிரிப்பு மனதையும் உடலையும் வலிமையாக்கி புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

1. புன்சிரிப்பு: புன்சிரிப்பு என்பது உதடுகள் மட்டும் விரிந்து மென்மையான புன்னகையாக வெளிப்படும். எந்தவிதமான ஓசையும் இல்லாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் உணர்ச்சி இது. அதாவது, ஒலி எழுப்பாமல் உதடுகள் மட்டும் அசையும் ஒரு வகை சிரிப்பு இது. ஆங்கிலத்தில் smile என இது அழைக்கப்படும். இதனை இளநகை, குமிண்சிரிப்பு, புன்னகை, புன்முறுவல், முகிழ்நகை எனவும் குறிப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
வீடுகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளுக்கான காரணம் தெரியுமா?
Are there so many types of laughter?

2. சிரிப்பு: சிரிப்பு என்பது மகிழ்ச்சி, உல்லாசம் அல்லது கேளிக்கை உணர்ச்சிகளை குறிக்கும் வெளிப்பாடு. சிரிக்கும் பொழுது உடலில் உள்ள பல தசைகள் அசைவதால் உடல் வலிமைக்கு இது உதவும். அத்துடன் ஆக்ஸிஜனை அதிக அளவில் உள்ளிழுக்கவும் வழி வகுக்கும். ‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பார்கள். ஆரோக்கியமாக இருப்பதற்கு சிரிப்பு மிகவும் அவசியம்.

3. அசட்டுச் சிரிப்பு: ஒருவிதமான முட்டாள்தனமான அல்லது அர்த்தமற்ற சிரிப்பு இது. பெரும்பாலும் கூச்சம், முரட்டுத்தனம் அல்லது அறியாமையால் வெளிப்படும் சிரிப்பு இது. ஒரு நபர் ஒருவருடன் பேசும்பொழுது அவர்களது பேச்சை புரிந்து கொள்ளாமல் சிரித்தால் அது அசட்டு சிரிப்பாகக் கருதப்படும்.

4. ஆணவச் சிரிப்பு: மற்றவர்களை இழிவுபடுத்தும் அல்லது கேலி செய்யும் விதமாக வெளிப்படும் சிரிப்பு. இது பொதுவாக ஆணவம், கர்வம் அல்லது அலட்சியம் போன்ற  உணர்ச்சிகளை குறிக்கும். இது ஒருவகையான மேலாதிக்க உணர்வைக் காட்டுவதைக் குறிக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர்கள் ஏன் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிறார்கள் தெரியுமா?
Are there so many types of laughter?

5. ஏளனச் சிரிப்பு: ஏளனச் சிரிப்பு என்பது பரிகாசம் செய்வது, அவமதிப்பது அல்லது கேலி செய்யும் வகையில் நமுட்டு சிரிப்பு சிரிப்பது. ஒருவரைக் கேவலமாக அல்லது இகழ்வுபடுத்தும் நோக்கத்துடன் சிரிக்கும் சிரிப்பு இது.

6. மழலைச் சிரிப்பு: மழலைச் சிரிப்பு என்பது அப்பாவித்தனமான, மகிழ்ச்சியான சிரிப்பை குறிக்கும். இது ஒரு அழகான, மனதிற்கு இதமான ஒரு உணர்வை தரக்கூடியது. கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பாக இது இருக்கும். இதனை அனைவரும் விரும்புவார்கள்.

7. நையாண்டி சிரிப்பு: இதுவும் ஒரு வகையில் ஏளன சிரிப்புதான். நக்கல், நையாண்டி தனத்துடன் ஒருவரைப் பார்த்து சிரிக்கும் சிரிப்பு இது. ஆங்கிலத்தில் இதனை sarcastic laughter என்று குறிப்பிடலாம். ஒருவரது கருத்தை அல்லது நம்பிக்கையை கேலி செய்வது அல்லது ஒருவரைப் பார்த்து பரிகாசமாக சிரிப்பது.

இதையும் படியுங்கள்:
வெப்பத்தை வெல்லும் வெட்டிவேர் திரைச் சீலைகள்!
Are there so many types of laughter?

8. வெடிச் சிரிப்பு: வெடிச் சிரிப்பு என்பது உரத்த குரலில் சத்தமாக சிரிப்பது. இதனை ஆங்கிலத்தில் guffaw or belly laugh என்று சொல்லலாம். கலகலவென்று பெரிய சத்தத்துடன் சிரிப்பது வெடி சிரிப்பாகும்.

9. கேலிச் சிரிப்பு: ஒரு நபரின் செயல்களையோ அல்லது தோற்றத்தையோ கேவலமாக அல்லது நகைச்சுவையாக சித்தரிக்கும் சிரிப்பு. இது பெரும்பாலும் ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும்.

10. பரிகாச சிரிப்பு: ஒருவரை இழிவுபடுத்தும் எண்ணத்துடன் சிரிப்பது அல்லது அவமானப்படுத்தும் வகையில் சிரிப்பது இந்த வகையைச் சேரும்.

11. விரக்தி சிரிப்பு: விரக்தி சிரிப்பு என்பது மன அழுத்தத்திலோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாமல் போகும் பொழுதோ அல்லது ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் போகும்பொழுதோ ஏற்படும் ஒரு வெளிப்பாடுதான் இது. சில நேரங்களில் இது சோகத்தின் ஒரு  வடிவமாகவும் இருக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com