'சைபர் புல்லியிங்’ என்னும் கொடிய நோயைக் குணப்படுத்த வழிமுறைகள் இருக்கிறதா?

How to prevent Cyberbullying?
How to prevent Cyberbullying?Image Credits: Iberdrola
Published on

ன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால், எண்ணற்ற நன்மைகளை நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் இருப்பது போலவே, சில தீமைகளும் இருக்கின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

முதலில் சைபர் புல்லியிங் என்றால் என்னவென்று பார்க்கலாம். முன்பெல்லாம் ஒரு பிரச்னை ஏற்பட்டால், அது ஒரு வாக்குவாதமாக மாறி, சண்டை வரை முற்றி அத்துடன் அது முடிந்துவிடும். ஆனால், தற்போது டெக்னாலஜியின் வளர்ச்சியில், இணையத்தில் ஏற்படும் பிரச்னை, சண்டை, வாக்குவாதம் போன்றவை எல்லை மீறி செல்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இணையத்தில் நாம் ஒருவரைப் பற்றி பேசக்கூடியதை கேள்வி கேட்க யாருமில்லை.

இணையத்தில் ஒருவரை சரமாரியாக தகாத வார்த்தைகளால் தாக்க முடியும். நாம் யார், என்ன என்பது யாருக்கும் தெரிய போவதில்லை என்ற தைரியத்தில் இணையத்தில் அதிகமான தகாத வார்த்தைகள், கொச்சை சொற்கள், தனிநபர் தாக்குதல், இழிவான பேச்சு போன்றவை தினம் தினம் வாடிக்கையாகிவிட்டது.

ஒருவருடைய கருத்தை, புகைப்படத்தை ஏளனம் செய்வது போன்ற விஷயங்கள் அன்றாடம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. எனினும் ஒரு தனி நபரை அதிக எண்ணிக்கையில் ஏளனமோ அல்லது வார்த்தைகளால் இழிவாக பேசும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் பெரும்பாலும் பிரபலமாக இருப்பவர்களுக்கே அதிகம் ஏற்படும்.

ஒரு தனிநபரை தொடர்ந்து இழிவாக பல பேர் பேசும்போது, அது அவர்களை மனதளவில் பெரிதும் பாதிக்கும். இதை ‘சைபர் புல்லியிங்’ என்று கூறுவார்கள். பலர் இதைக் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். ஆனால், சிலரோ இதனால் விபரீத முடிவு எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உடல் ரீதியாக இங்கு யாரும் யாரையும் காயப்படுத்தவில்லை. ஆனால், மனரீதியாக அதிகமாகக் காயப்படுத்துகிறார்கள். இதனால் காயப்பட்ட அந்த நபர் தற்கொலை வரை சென்றுவிடும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு சைபர் புல்லியிங்கால் இறந்த பல பிரபலங்களின் மரணங்கள் உதாரணமாக இருக்கின்றன.

‘இதிலென்ன இருக்கிறது? இதையும் கடந்து செல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்பவர்கள் நன்றாக ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், ‘வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு'.

இதையும் படியுங்கள்:
நாம் ஏன் வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும்?
How to prevent Cyberbullying?

ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுபவகள் பேசிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், அதைக் கேட்கும் நபருக்கு அது நரக வேதனையாக இருக்கும். இதுபோன்று ஆயிரக்கணக்கில் ஒரு தனிநபரைப் பற்றி பேசும்போது அந்த நபரின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். மன ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கக்கூடும். என்னதான் சைபர் புல்லியிங்கிற்காக பாதுகாப்பு சட்டங்கள் இருந்தாலும் அதெல்லாம் அவ்வளவு வலுவாகயில்லை என்றே சொல்ல வேண்டும்.

எனவே, ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரியாமல், அவர்களின் சூழ்நிலையை புரிந்துக்கொள்ளாமல், முழு கதையையும் தெரிந்துக்கொள்ளாமல் வெறும் கண்களால் ஒருவரை சோஷியல் மீடியாவில் பார்ப்பதை மட்டும் வைத்து, அரைகுறையாக கதைகளைத் தெரிந்துக் கொண்டு அவர்கள் மீது வன்மத்தை கொட்டுவதை நிறுத்துவது நல்லது. நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com