.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
பெரும்பாலான நாட்களை வீட்டிற்குள்ளேயே செலவிடுவது 70+ சூப்பர் சீனியர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தலாம், குறிப்பாக அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அது அவர்களுக்கு நடக்கவோ அல்லது நகரவோ கூட கடினமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
1. உடல் ஆரோக்கியத்தில் நிகழும் சரிவு:
வீட்டிற்குள்ளேயே இருப்பது பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக தசைச் சிதைவு, மூட்டு விறைப்பு மற்றும் இருதய ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுகின்றன.
சூரிய ஒளியில் குறைவாக வெளிப்படுவது ‘வைட்டமின் டி’ குறைபாட்டை ஏற்படுத்தும், இதனால் எலும்புகள் பலவீனமடைந்து, சிறு அடிபட்டாலே எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் அதிகம்.
உடல் செயல்பாடு மற்றும் மோசமான ஊட்டச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். தனிநபர்கள் பிற நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுவர்.
2. மனநலப் பிரச்சனைகள்:
பெரும்பாலான நேரத்தை வீட்டிற்குள் செலவிடுவது சமூக தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கும், இது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் அறிவாற்றல் போன்றவற்றை அதிகரிக்க வாய்ப்புண்டு.
உங்களை எதிலும் ஈடுபடுத்தி கொள்ளாமல் அல்லது சமூக தொடர்புகள் இல்லாமல் இருந்து வந்தால், அறிவாற்றல் செயல்பாடுகள் மோசமடைந்து டிமென்ஷியா(dementia) நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.
நீடித்த தனிமையான வாழ்வு சோகத்தின் உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அது ஒட்டுமொத்த உணர்ச்சி நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்கும்.
வெகு நாட்கள் சூரிய ஒளி மற்றும் உடல் செயல்பாடு இல்லாதது பருவகால பாதிப்புக் கோளாறு (Seasonal Affective Disorder (SAD) போன்ற மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
3. வாழ்க்கை முறை மற்றும் தினசரி செயல்பாடு:
காலப்போக்கில், தனிநபர்கள் அன்றாடப் பணிகளுக்காக மற்றவர்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வழக்கமான நடைமுறைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாதாது, தூக்க முறைகளை சீர்குலைத்து, தூக்கமின்மை அல்லது ஒழுங்கற்ற தூக்க பழக்கத்திற்கு வழிவகுக்கும்.
உடல் ரீதியாக எளிதில் நகர முடியாத பிரச்சனை உள்ளவர்களுக்கான தீர்வுகள்
1. வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள்:
வீட்டைச் சுற்றி எளிதாகவும் பாதுகாப்பாகவும் செல்ல ஹேண்ட்ரெயில்கள்(handrails), கைப்பிடிகள் (Grab Bars) மற்றும் தேவையான படிக்கட்டுகளை நிறுவலாம் .
மேஜை, நாற்காலி போன்றவைகளை நாம் நடப்பதற்கு வசதியாக ஓரம் தள்ளி வைக்கலாம். இதனால் நடக்க சிரம படுபவர்கள் சுலபமாக நடக்க முடியும்.
2. உடல் பயிற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்:
கால் தூக்குதல், கைகளை உயர்த்துதல் மற்றும் நீட்டுதல் போன்ற உட்கார்ந்திருக்கும் போது செய்யக்கூடிய பயிற்சிகளை செய்யவும்.
வீட்டிற்குள் பயன்படுத்தக்கூடிய நிலையான பைக்குகள்(stationary bikes), டிரெட்மில்லை (treadmills) பயன்படுத்தலாம்.
3. சமூக தொடர்புகளைப் பேணுதல்:
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க வீடியோ அழைப்புகள், சமூக ஊடகங்களை பயன்படுத்தலாம்.
4. மன மற்றும் அறிவாற்றலுக்கான ஊக்கம்
மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதிர்கள், குறுக்கெழுத்துக்கள் மற்றும் பலகை விளையாட்டுகள்(puzzles, crosswords, and board games) போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
அறிவாற்றல் செயல்பாடுகளைத் தூண்டுவதற்கு புத்தகங்களைப் படிக்கலாம் அல்லது ஆன்லைன் படிப்புகளுக்கான சில கல்வி வீடியோக்களை பார்க்கலாம்.
5. ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து:
பழங்கள், காய்கறிகள், கம்மியான புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவை எடுத்து கொண்டு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
ஒரு சுகாதார வல்லுனருடன் கலந்தாலோசித்த பிறகு, சூரிய ஒளி வெளிப்பாடு குறைவாக கிடைக்கும் பட்சத்தில் ‘வைட்டமின் டி’ க்காண சில ஊட்டச்சத்து நிரம்பிய சப்ளிமெண்ட்ஸை எடுத்துக் கொள்ளலாம்.
6. தொழில்முறை ஆதரவு:
அன்றாடப் பணிகளுக்கு உதவுவதற்கும் துணையை வழங்குவதற்கும் வீட்டு சுகாதார உதவியாளர்கள் அல்லது பராமரிப்பாளர்களை நியமிக்கலாம்.
வழக்கமான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மனநல ஆதரவுக்காக டெலிஹெல்த் சேவைகளைப் பயன்படுத்தலாம்.