முதியவர் இளைஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லாமல் பார்த்து கொள்வது எப்படி? அதற்கான வழிகள் என்ன?

Old man and youngster talking
Old man and Youngster

இணக்கமான சமூகத்தை வளர்ப்பதற்கு தலைமுறை தலைமுறையாக ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும், பிறரை மதிப்பதும் அவசியம். வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் இடைவெளியைக் குறைத்து அர்த்தமுள்ள பந்தங்களை உருவாக்க சில வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்

தெளிவாக கேட்பது:

இரு தலைமுறைகளும் ஒருவருக்கொருவர் பற்றிய புரிதலுக்கு முதலில் வர வேண்டும். அதற்கு இருதரப்பினரும் பொறுமையுடன் கேட்டுக்கொள்வது அவசியம். ஒருவருக்கொருவர் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கேட்டறிவதன் மூலம், அவர்கள் இடையே இருக்கும் ஒரு பொதுவான சூழ்நிலையை கண்டுபிடித்து அதற்கேற்ப கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

தொழில்நுட்பப் பயிற்சி:

முதியவர்கள் புதிய தகவல் தொடர்பு வடிவங்களைப் பயன்படுத்த தொழில்நுட்பங்களை கற்று பயனடையலாம். குறுஞ்செய்தி அனுப்புதல், சமூக ஊடகங்கள் மற்றும் உடனடிச் செய்தி அனுப்புதல் போன்ற அடிப்படை விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் இளைய நபர்கள் முதியவர்களுக்கு உதவினால் அது நல்ல தொடர்பை உண்டாகி தரும்.

பாதுகாப்பான சூழல்:

இரு தலைமுறைகளும் எளிதில் தொடர்பு கொள்ளும்படியான பாதுகாப்பான மற்றும் மரியாதையான சூழலை உருவாக்குங்கள். ஒருவர்மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல் இயல்பாக கருத்துக்களை பகிருங்கள்.

கலாச்சார சூழல்:

முதியவர்கள் வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகள் மற்றும் கலாச்சார மாற்றங்களில் வாழ்ந்துள்ளதால், அவர்களின் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் வேறு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மறுபுறம், இளைய நபர்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கலாச்சாரங்களில் ஈடுபட்டு வேகமாக மாறிவரும் உலகில் வளர்ந்து வருவதால் இந்த மாற்றம் அவசியம் என்று முதியவர்களும் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

மரியாதை உணர்வு:

ஒருவருக்கொருவர் தங்களுக்குரிய மரியாதையை பரிமாறி கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் ‘வயதில் சிறியவன் நீ என்பதால் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், அல்லது வயதில் பெரியவர் என்பதால் நீங்க சொல்றத தான் கேட்கணுமா’ போன்ற முரண்பாடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
Summer Vacation தொடங்கியாச்சு! குழந்தைகள் டைம் பாஸ் செய்ய என்ன செய்யலாம்?
Old man and youngster talking

பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை:

வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் இருவரும் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு தலைமுறையும் மாற்றத்திற்கு ஏற்பவும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் என்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பகிரப்படும் கதைகள்:

வயதானவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள், மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். மற்றும் தற்போதைய போக்குகள், தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து இளையவர்கள் தங்கள் ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

பரஸ்பர கற்றல்:

கற்றல் என்பது இருவழிப் பாதை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். பெரியவர்கள் இளைஞர்களின் புதிய கண்ணோட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியும்; அதே நேரத்தில் இளைஞர்கள் தங்கள் பெரியவர்கள் பகிரும் அனுபவப் பாடங்கள் மற்றும் வரலாற்று சூழல்களை தெரிந்து கொள்ளலாம்.

அனுதாபம்:

ஒருவருக்கொருவர் மற்றொருவரின் சூழ்நிலையில் இருந்து யோசித்து பாருங்கள். வயதானவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் (உடல்நலப் பிரச்சினைகள், தனிமை மற்றும் ஓய்வு பெறுவதற்கு ஏற்றவாறு) மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் (தொழில் அழுத்தம், சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் வரப்போகும் உறவுகள் போன்றவைகளை பரஸ்பரம் புரிந்துகொண்ட ஒருவருக்கொருவர் அனுதாபங்களை பகிருங்கள்.

வேறுபாடுகளைக் கொண்டாடுங்கள்:

தலைமுறை வேறுபாடுகளைத் தடைகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அவற்றைக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு தலைமுறையும் சமூகத்திற்கு தனித்துவமான பலம் மற்றும் அடையாளத்தை வழங்குகின்றது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com