ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களா நீங்கள்? அப்போ நீங்க இப்படித்தான்!

August born
August born
Published on

இந்த பூமியில் எத்தனையே வகையான உயிரினங்கள் வாழுகின்றன. அவற்றை நாம் அடையாளம் காண்பதற்கு பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என இனங்ளை கூறி தெரிந்துக்கொள்கிறோம். அதுபோல மனிதர்களை பற்றி நாம் பேசும்பொழுது ஒரு குறிப்பிப்பிட்ட நபரின் பெயரை கூறி, அவரா அவர் மிகவும் நல்லவர், அவரை போன்ற ஒரு மனிதரை நாம் பார்க்க முடியாது எனவும், அவர் மிகவும் கோபக்காரர் என ஒரு மனிதரின் குணாதிசயங்களை வைத்து இவர் இப்படி என்றும் நாம் முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

அந்தவகையில் மனிதாராகிய நாம் ஒருவரை போல மற்றவர்கள் இல்லை என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் உள்ளவர்களே ஒவ்வொரு குணாதிசயங்களில் இருப்பார்கள். ஒரே வீட்டில் உள்ளோம். ஆனால் குணாதிசயங்கள் மட்டும் ஏன் வேறுபடுகிறது என யோசித்து உள்ளீர்களா? காரணம் ஒவ்வொரு மனிதரும் அவரின் பிறந்த நேரம், தேதி, கிழமை போன்ற அமைப்புகளால் அவரின் தனித்துவம் மாறுப்படுகிறது.

ஒருவர் எந்த மாதத்தில், எந்த கிழமையில், எந்த நேரத்தில் பிறக்கிறார் என்பதை பொறுத்து குணாதிசயங்கள் மாறுபடும். அந்தவகையில், 'ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்ளை' பற்றி என்ன சொல்கிறார்கள் என்று இந்த பதிவில் காண்போம்.

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்:

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் சூரியன் மற்றும் சந்திரனால் ஆளப்படுபவர்கள். சூரியன் என்றால் ஆளுமை பண்பு கொண்ட கிரகம். எனவே இவர்களிடம் ஆளுமை பண்பு அதிகம் இருக்கும். பெரிய அதிகார பணியில் அமரக்கூடியவர்கள்.

இதையும் படியுங்கள்:
இனம் புரியாத மனப் பதற்றத்தை விரட்ட 6 யோசனைகள்!
August born
  • இரண்டு ஒளி பொருந்திய கிரகத்தால் ஆளக்கூடிய இவர்கள் சிம்மம் மற்றும் கன்னி ராசிகாரர்களாக இருப்பார்கள். இவர்களின் குணங்களும் ஒரு வித்தியாசமான குணங்களாக இருக்கும். மேலும்  இவர்கள் மற்றவர்களை அணுகுவது வித்தியாசமாக இருக்கும். அதனால் இவர்களின் குணம் மற்றவர்களை கவரும்.

  • பெரும்பாலும் இவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமையில் இருக்கும் போது சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த சிந்தனையும் ஆழமான சிந்தனையாக இருக்கும். அவர்கள் எடுக்கும் முடிவில் தெளிவாகவும், தைரியமாகவும் இருப்பார்கள்.

  • இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் குறைவு. மேலும் நண்பர்கள் ஒருசிலர் இருந்தாலும், அவர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பரிடம் மட்டுமே இவர்களை சார்ந்த அனைத்தையும் கூறுவார்கள்.

  • இவர்களுக்கு பொய் கூறுபவர்களை பிடிக்காது. மேலும் பொய் கூறினாலும் சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். மற்றவர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்களோ, அதை சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவார்கள்.

  • இவர்கள் மற்றவர்களிடம் அன்பை வெளிப்படையாக காட்டமாட்டார்கள். இவர்கள் காட்டும் அன்பு சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதனை புரிந்துக்கொள்வது கடினம்.

  • மற்றவர்கள் ஏமாற்றிவிட்டால் இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. முற்றிலும் உடைந்துவிடுவார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியே வர நாட்கள் ஆகும். யாரிடமும் கோபப்படமாட்டார்கள். ஆனால் கோபம் வந்துவிட்டால் இவர்கள் தங்களையும் மறந்து கோபத்தின் உச்சிக்கு சென்றுவிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
வளர்வதன் வெற்றி வளர்ப்பினிலே!
August born
  • உணர்ச்சிகரமான எழுத்துக்களை எழுதுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். கவிதை, கதை போன்றவற்றின் மூலம் தங்களை வெளிப்படுத்துவார்கள்.

  • தன்னம்பிக்கை மற்றும் உழைப்பாளிகளாக இவர்கள் இருப்பதால், சொந்த முயற்சியில் இவர்கள் முன்னேறுவார்கள்.

குறிப்பு: இந்த பலன்கள் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள். ஒருவர் தனிப்பட்ட பிறந்த நேரம், காலம் வைத்து சிறிதளவு மாறுபாடுகள் இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com