அடிக்கடி மறதியால் பாதிக்கப்படுகிறீர்களா? இனி நீங்களே அதை திறம்பட சமாளிக்கலாமே…

memory loss
memory loss
Published on

மறதி என்பது ஒரு குறுகிய காலத்திற்கு அல்லது பொதுவாக வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள இயலாமை நிலையைக் குறிக்கிறது. அதாவது சமீபத்திய உரையாடல்கள், நிகழ்வுகள் அல்லது பணிகளை மறந்துவிடுவது போன்றது. இது தூக்கமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு, மருந்தின் பக்க விளைவுகள் அல்லது அல்சைமர் நோய் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதை எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மறதி வராமல் எவ்வாறு  தடுக்கலாம்? 

வழக்கமான உடல் செயல்பாடு: வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இது நினைவகம் உட்பட அறிவாற்றல் செயல்பாடுகளை நன்கு ஆதரித்து அவற்றை திறம்பட செயல்பட வைக்கிறது.

ஆரோக்கியமான உணவு: காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த  உணவை உட்கொள்வது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதும் மூளை செயல்பாட்டிற்கு நல்லது..

போதுமான தூக்கம்: நீங்கள் போதுமான தரமான தூக்கத்தைப் பெறுவதை உறுதிசெய்வது நினைவக ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது.

அறிவை தூண்டுதல்: புதிர்கள் அடங்கிய விளையாட்டுகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும் மற்றும் புதிய விஷயங்களை படிப்பது அல்லது புதிய திறன்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் அறிவாற்றல் திறன்களை நன்றாக பராமரிக்க உதவும்.

மன அழுத்த மேலாண்மை: தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற உடலுக்கு தளர்வு தரும் நுட்பங்களைப் பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து, உங்கள் நினைவாற்றலைப் பாதிப்படையாமல் வைத்திருக்கும்.

அடிக்கடி மறதியால் அவதிப்படுபவர்கள் அதை எப்படி சமாளிக்கலாம்

மறதியை அனுபவித்து கொண்டிருப்பவர்கள், அந்த நிலைமையை நிர்வகிக்கவும் அதிலிருந்து மீளவும் பல அணுகுமுறைகள் உள்ளன:

அறிவாற்றல் சிகிச்சை: ஒரு நரம்பியல் உளவியலாளரின் (neuro psychologist) வழிகாட்டுதலால் உங்கள் மறதியை சமாளிக்கலாம். அவர்கள் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி மற்றும் சிகிச்சை நுட்பங்களால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி உங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்க முடியும்.

மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு: நினைவாற்றல் பிரச்னைகள் சில நேரங்களில் நாம் அன்றாடம் அல்லது என்றைக்காவது உட்கொள்ளும் மருந்துகளாலும் நிகழலாம். அதனால்  நம்முடைய மன திருப்திக்காக மருந்துகளை பற்றிய சரியான புரிதலை ஒரு சுகாதார வல்லுனரரிடம் கலந்தாலோசித்து அதை மதிப்பாய்வு செய்வது சில நேரங்களில் நமக்கு இந்த பிரச்னையில் இருந்து மீள உதவும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை: வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் போதுமான தூக்கம் உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ந்து பின்பற்றுவது முக்கியம்.

நினைவக உதவிகள்: காலெண்டர்கள், குறிப்புகள் மற்றும் அலாரங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது தினசரி பணிகளை நிர்வகிக்கவும் நினைவக இழப்பின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல; சமயோசிதத்துக்கும் அறிகுறி!
memory loss

சமூக ஈடுபாடு: சமூகத்தில் சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் உரையாடல்களில் ஈடுபடுவது மூளையைத் சுறுசுறுப்பாக இருக்க செய்து உங்கள்  நினைவக செயல்பாடுகளை பிரச்னையின்றி பராமரிக்க உதவும்.

ஆக, காரணங்களைப் புரிந்து கொள்வதன் மூலமும், இந்த தடுப்பு மற்றும் மேலாண்மை உத்திகளைச் செயல்படுத்துவதன் மூலமும், பாதிக்கப்பட்டவர்கள்  மறதி  இழப்பை சிறப்பாகச் சமாளிக்கலாம். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com