பார்க்கிங் சண்டையினால் நிம்மதி போச்சா? இந்த டெக்னிக் தெரிஞ்சா உங்களை யாரும் அசைக்க முடியாது!

Parking fights solutions
Parking fights solution
Published on

கார் பார்க்கிங் காரணமாக உங்களுக்கும், உங்கள் தெருவில் வசிப்போருக்கும் இடையே நிறைய பிரச்னைகள் ஏற்படுகிறதா? அப்போ முதலில் இதை பின்பற்றுங்கள் Parking fights solution.

பிரச்னையை முன்கூட்டியே உணருங்கள்:

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில், கார், பைக்கிற்கான பார்க்கிங் பிரச்னைகள் பெரும்பாலும் பல மோதலுக்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கின்றன. குறுகிய தெருக்கள், அதில் கொடுக்கப்படும் குறைவான இடவசதி(limited designated spaces) மற்றும் வளர்ந்துகொண்டு வரும் வாகன உரிமம் எண்ணிக்கைகள் ஆகியவை, மக்களுக்குத் தினசரி சவால்களை உருவாக்குகின்றன.

குறிப்பாக முரட்டுத்தனமான அல்லது ஆக்ரோஷமான நபர்களுடன் தகராறுகள் ஏற்படும்போது, முதலில் நாம் அமைதியாக இருந்து, நிலைமை மோசமாவதைத் தவிர்ப்பது நல்ல முடிவைப் பெற்றுத் தரலாம். இல்லையேல் அதனால் ஏற்படும் மோதல் பல சேதாரங்களை விளைவித்து விடும். எனவே, அமைதியுடன் பதிலளிப்பது, முடிந்தால் பிரச்னையை ஆவணப்படுத்துவது (document the issue if possible), தேவைப்படும்போது உள்ளூர் அதிகாரிகளை ஈடுபடுத்துவது நமக்கு நல்ல முடிவை பெற்றுத் தரலாம்.

துணை நிற்கும் சட்டங்கள்:

பார்க்கிங் தகராறுகள் வெறும் தனிப்பட்ட சண்டைகள்(personal issue) அல்ல. அவை நகராட்சி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் உள்ளூர் நகராட்சி அமைப்புகள் (Local municipal bodies) பார்க்கிங்கிற்கு எனக் குறிப்பிட்ட மண்டலங்களை நியமிக்கின்றன. அதையும் மீறி தடைசெய்யப்பட்டப் பகுதிகளில் மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்படாத பார்க்கிங் அபராதம் அல்லது அபகரிப்புக்கு (towing) வழிவகுக்கும்.

குடியிருப்புப் பகுதிகளில் இந்திய உச்ச நீதிமன்ற ஆணைப்படி திறந்த மற்றும் கீழ்தளப் பார்க்கிங் என்று தனித்தனியாக விற்க முடியாது (open and stilt parking spaces cannot be sold separately for individual BHK apartments) என்று தீர்ப்பளித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் (RERA) கீழ் நியாயமான பார்க்கிங் ஒதுக்கீட்டைப் பொதுமக்களுக்குத் தர உறுதி செய்கிறது. இந்தத் தீர்ப்பு பல இடங்களில் பார்க்கிங் பிரச்னைகளைக் குறைக்கிறது. தேவைப்பட்டால் நமக்கான இடத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது. வாடகை வீட்டில் வசிப்போரும் இதற்கானத் தீர்வை அந்தந்த வாடகை ஒப்பந்தத்தின் (rental agreement)படி பெற்றுக் கொள்ளலாம்.

சிக்கலை எப்படிச் சமாளிக்கலாம்:

பார்க்கிங் தொடர்பான பேச்சுவார்த்தையில் எதிர்தரப்பு ஆக்ரோஷமாகச் செயல்பட்டால் முதலில் நீங்கள் மோதலைத் தவிர்த்திடுங்கள். அதற்குப் பதிலாக குடியிருப்பாளர் நலச் சங்கங்கள், நகராட்சி அதிகாரிகள் அல்லது காவல்துறையினரின் உதவியை நாடலாம்.

உள்ளூர் போக்குவரத்து விதிகள் அல்லது நகராட்சி துணைச் சட்டங்களின் (local traffic rules or municipal bylaws) கீழ் புகார் அளிப்பது இந்த விஷயத்தைத் தீர்க்க ஒரு சட்டப்பூர்வமான வழியாகும். வணிகப் பகுதிகளில் கடைக்காரர்களும், எதேச்சையாக வரும் வாகன உரிமையாளர்களும் இந்தப் பிரச்னையால் மோதிக்கொள்ளும்போது, இங்கும் நகராட்சி விதிமுறைகள் தான் தீர்வுகளை வழங்குகின்றன.

பார்க்கிங் பிரச்னைகளைத் தைரியமாக கையாள்வது என்பதை சிலர் ‘ஆக்ரோஷமாகச் செயல்பட்டால்தான் சாத்தியமாகும்’ என்று நினைப்பார்கள். ஆனால், அமலில் இருக்கும் சட்ட கட்டமைப்பு (legal framework) மற்றும் குடிமை வழிமுறைகள்தான் இதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
சுகமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பவை எவை தெரியுமா?
Parking fights solutions

எனவே, இந்தியாவின் நெரிசலான நகர்ப்புற நிலப்பரப்பில் சட்டம் பற்றிய அறிவு மற்றும் நம் தரப்பில் உள்ள அமைதியான பேச்சு வார்த்தைகள் தான் பார்க்கிங் மோதல்களைத் தீர்ப்பதற்கு மிகவும் பயனுள்ள கருவிகளாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com