செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

Are you going to buy a second hand car? A few things to note
Are you going to buy a second hand car? A few things to notehttps://tamil.goodreturns.in
Published on

ண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கிட்டத்தட்ட எல்லா கார் ஷோரூம்களிலும், அதற்கு முந்தைய ஆண்டு மாடல் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும். சிலர் நேரடியாக விற்பார்கள். உங்களின் தேவையை பொறுத்து என்ன கார் வாங்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து செயல்படுங்கள். மூன்று ஆண்டுகளுக்கு மேலான வண்டிகளை வாங்கும்போது, அதன் பரமாரிப்பு செலவு அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பழைய மார்க்கெட்டில் பெரும்பாலும் சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது.

பெரிய கார்களை வாங்கும்போது டீசல் கார்களை வாங்குவதே நல்லது. ஏனெனில், அதை மறுபடியும் விற்கும்போது நல்ல விலைக்கு விற்கலாம். உங்கள் முதுகின் நலத்திற்கு தகுந்த இருக்கை கொண்ட காரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பழைய கார்களை வாங்கும்போது நேரடியாகவே வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு வாங்குவதே நல்லது. பழைய கார் வாங்க ஷோரூம் செல்லும்போது நல்ல வெளிச்சம் இருக்கும்போது போய் கார்களை நன்றாக சுற்றி பார்த்து வாங்குங்கள். ஒருபோதும் மழை பெய்யும் நேரத்தில் கார் பார்க்கச் செல்லாதீர்கள்.

பொதுவாக, சிட்டியில் ஓடிய கார்களை பார்த்து வாங்குவது சிறந்தது. காரணம் அந்த மாதிரி கார்கள் டீலர்ஷிப்களில் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் பராமரிக்கப்பட்டிருக்கும். எப்போதும் அந்த மாதிரி கார்களை பார்த்து வாங்குவது நல்லது. டிரைவர் இல்லாத செல்ப் டிரைவ் கார்களை பார்த்து வாங்குவது நல்லது. பொதுவாக, கார்களை விற்பனை செய்யும் புரோக்கர்கள் அவர்கள் கார்களுக்கு தனியாக ஒரு மார்ஜின் வைத்து விற்பார்கள். அதேபோல், சில மைனர் வேலையை பார்த்து நல்ல முறையில் இருப்பதாகக் காட்டி விற்பார்கள்.

கார்களின் வெளித் தோற்றத்தைக் கண்டு மயங்கக் கூடாது. அது எவ்வளவு மைலேஜ் கி.மீ. ஓடியிருக்கிறது, என்ஜின் ஏதாவது வித்தியாசமாக ஓடுகிறதா என்பதை காரின் பானெட்டை தூக்கிப் பாருங்கள். வண்டியை முழுவதும் பார்த்து ஏதாவது ஆக்ஸிடன்ட் ஆகி டிங்கர் வேலை பார்க்கப்பட்டுள்ளதா? ரீ பெயின்ட் செய்யப்பட்டதா என பாருங்கள். குறிப்பாக, கார்களை ஓட விட்டு ஏதாவது லீக் (என்ஜின் ஆயில், ரேடியேட்டர் தண்ணீர், பெட்ரோல் அல்லது டீசல் பைப்களில்) உள்ளதா என பாருங்கள். முக்கியமாக கார் டயர்களை பாருங்கள். அதன் தேய்மானம் மற்றும் கன்டிஷன்கள். கார்களின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளின் இயங்கும் விதத்தை பாருங்கள். கார்களை இயக்கி அதிக புகை வருகிறதா என பாருங்கள். கார்களின் ஹெட் லைட், பேட்டரி, சீட்கள், கார் மேற்கூரை என அனைத்தையும் நன்கு சோதித்து பார்க்க வேண்டும். காரின் கண்ட்ரோல்கள் அனைத்தையும் சரியாக சோதித்து பார்க்க வேண்டும்.

எந்த காரையும், ஓட்டிப் பார்த்து டெஸ்ட் செய்யாமல் வாங்கவே கூடாது. உங்களுக்கு அனுபவம் இல்லாமல் இருந்தால் விபரம் தெரிந்தவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள். குறைந்தபட்சம் பதினைந்து நிமிடங்களாவது நீங்கள் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும். குண்டும், குழியுமான சாலைகள், நெடுஞ்சாலை, நகர நெருக்கடி மிகுந்த சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் ஓட்டிப்பார்க்க வேண்டும். நெடுஞ்சாலையில் காரை ஓட்டும்போது, கார் ஸ்டேபிளாக இருக்கிறதா அல்லது அலைபாய்கிறதா என்றும், அதிக வேகத்தில் செல்லும்போது ஸ்டியரிங் கிரிப்பாக இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும்.

பழைய கார்களை வாங்கும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒடோ மீட்டர் ரீடிங். பெட்ரோல் கார் என்றால், ஆண்டுக்கு 12,000 கிலோ மீட்டர் வரை ஓட்டியிருக்கலாம். டீசல் கார் என்றால் 15000 கிலோ மீட்டர் வரை ஓட்டியிருக்கலாம். மூன்று ஆண்டுகளான பழைய கார் 50,000 கிலோ மீட்டர்க்கு மேல் ஓடியிருக்கிறது என்றால், அந்தக் காரை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. எப்போதெல்லாம் காரை சர்வீஸ் செய்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை கூறும் சர்வீஸ் ஹிஸ்டரி இல்லாத கார்களை தவிர்ப்பது நல்லது.

பழைய கார் டீலரிடம் வாங்குவதில் உள்ள ஒரே பயன், அவர்கள் கொடுக்கும் வாரண்டிதான். ஒரு வருடத்திற்குள் ஏதாவது பிரச்னை வந்தால் அவர்கள் சர்வீஸ் செய்து தந்துவிடுவார்கள். சேல்ஸ்மேன்கள் பேசுவதை எல்லாம் கண்முடித்தனமாக நம்பாமல் சரியான தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காரில் பயணமா? சோர்வு இல்லாத பயணத்திற்கான சில டிப்ஸ்!
Are you going to buy a second hand car? A few things to note

பழைய கார்களை வாங்கும்போது மறக்காமல் அதன் ஆர்.சி. புத்தகத்தை வாங்கி நன்கு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒரிஜினலை சரிபார்ப்பதுதான் நல்லது. இன்சூரன்ஸ் பயன்பாட்டில் உள்ளதா, பைனான்ஸ் வில்லங்கம் என பல சம்பந்தப்பட்டவைகளை சரி பார்க்க வேண்டும். சாலைப் போக்குவரத்து அலுவலகத்துக்கு (RTO), சென்று அந்தக் கார் மீது எந்த குற்றப் பத்திரிகையும் இல்லை என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில் பலவித பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கார்களை விலை பேசும்போது அந்த கார் வாங்கிய ஆண்டு, ஓடிய மைலேஜ் மற்றும் காரின் தற்போதைய நிலை, காரின் தற்போதைய விலை என அனைத்தையும் கவனத்தில் கொண்டு பேச வேண்டும். சில நேரங்களில் திருட்டு கார்களை சிலர் இணையத்தளம் மூலம் விற்கிறார்கள். எனவே, கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில், சிறு குறைபாடு இருந்தால், அதை பின்னால் சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்து வாங்கினால் அந்தப் பிரச்னை நின்று விடாது. மேலும் நமக்கு செலவினை அதிகப்படுத்தி விடும்.

செகண்ட் ஹேண்ட் காரை வாங்கினால் எந்த நாளில், எத்தனை மணிக்கு வாங்கிக் கொண்டேன் என்பதோடு இந்த நேரம், இந்த தேதிக்கு முன்னால் அந்தக் கார் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் அதன் பழைய உரிமையாளர்தான் பொறுப்பு என்றும் எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com