மனிதர்களாகிய நாம் எப்போதும் ஒரே இடத்தில் இருக்கப்போவதில்லை. ஏதோ ஒரு வேலை விஷயமாக அல்லது பொழுதுபோக்கிற்காக ஒரு பயணத்தை மேற்கொள்வோம். எது எப்படியோ, போகும் காரியம் இனிமையாக இருக்கவேண்டும். அதுதான் அடிப்படையான ஒன்று. அதற்கு என்னென்ன விஷயங்களைப் பின்பற்றலாம் என்பதைக் காண்போம்.
ஓட்டுனரின் ஸ்டைல்:
நல்ல ஓட்டுநர் என்றைக்கும் தான் ஓட்டும் வாகனத்தையும் மற்றும் தன்னுடன் பயணிக்கும் பயணிகளையும் கவனத்தில் வைத்துதான் ஓட்டுவார். ஏனென்றால் கரடுமுரடான பாதையில் போகும்போது அதில் உணரும் குலுங்கல்களிலேயே நம்முடைய mood spoil ஆகிவிடும். அந்தச் சமயத்தில் ஒரு நல்ல ஓட்டுநரின் கையில் வாகனம் இருந்தால், நிலைமையை உணர்ந்து வாகனத்தை மெல்ல இயக்குவார். நாமும் சுகமாகப் பயணிக்கலாம்.
Brake அடிப்பதில் அனுபவம்:
பொதுவாக வாகனத்தில் brake அப்ளை செய்யும்போது அனைவரும் முன்னோக்கிச் செல்வோம். அது இயல்பான ஒன்றுதான். ஆனால், அதிலும் எவ்வாறு impact ஆகிறது என்பதைப் பார்க்கவேண்டும். நெடுந்தூரப் பயணத்தில் ஓட்டுனரைத் தவிர்த்து அனைவரும் வேறு ஒரு கவனத்தில் இருப்போம். திடீரென்று brake அடிக்கும்போது உடல் ரீதியாக சில அசௌகரியத்தை உணர்வோம். அது போறபோக்கில் வாந்தி, தலைவலி போன்ற விஷயங்களை ஊக்குவிக்கும். முட்டிக்கொண்டு அடிபடுவதும் உண்டு.
Body roll கண்ட்ரோல்:
ஒரு பேருந்தில் போகும்போதோ அல்லது காரில் போகும்போதோ ஒரு வளைவான ரோட்டில் வாகனத்தை வேகமாக செலுத்தும்பொழுது உள்ளே இருக்கும் அனைவரும் ஒரு பக்கமாக சாய்வோம். எடுத்துக்காட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை சாலையில் இதை உணரலாம். அல்லது நாம் அன்றாடம் பயணிக்கும் நெடுஞ்சாலையிலும் சில இடங்களில் இதை உணர்வோம். இதுவும் ஒரு வகையில் உடல் சோர்வை ஏற்படுத்தும். நல்ல ஓட்டுநர் என்றைக்கும் இதுபோன்ற இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைத்துத்தான் திரும்புவார்.
சௌகரியமான இடவசதி:
இப்போது புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் முக்கியமாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுவது Legroom. அதாவது பின்னிருக்கையில் உட்காருபவர்களின் மூட்டு இடிக்காதவாறு இருக்க வேண்டும். ஏனென்றால் கால் நீட்டி உட்காரும்போது அது ஒரு வகையில் relaxation ஆக இருக்கும். மற்றும் அருகில் இருப்பவர்கள் மீது இடிக்காமல் இருந்தால் free ஆக எவ்ளோ தூரம் வேணாலும் புத்துணர்ச்சியாகப் பயணிக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே நாம் விரும்பும் பயணம் இனிமையாக அமையும். இதோடு சேர்த்து வாகனத்தின் பராமரிப்பு, டயரில் காற்று நிரப்புதல், வானிலை மற்றும் கள நிலவரங்களைக் கவனித்து பயணத்தை பிளான் செய்தல் என்று எல்லாமே மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியவை.
ஒரு அசௌகரியமான பயணத்தை நாம் உணர்ந்துவிட்டாலே அது காலம் முழுக்க நம் நெஞ்சில் மறக்காத ஒன்றாக இருந்து, பின் வரும் எல்லா பயணத்தையும் புறக்கணிக்க காரணமாக அமைந்துவிடும். ஆகையால் மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றினாலே பயணம் என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்றாக அமையும்.