Students staying in the hostel
Students staying in the hostel

ஹாஸ்டலில் தங்கப்போறீங்களா? இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

Published on

ங்கள் ஊரில் இருந்து வெளியூருக்குச் சென்று கல்வி பயில, பயின்றுவரும் மாணவர்கள் விடுமுறை முடிந்து, மீண்டும் ஹாஸ்டலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருவார்கள். அவர்கள் விடுதிக்குச் செல்லும்பொழுது கொண்டுபோக வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

பெட்டி போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்திருப்பது அவசியம். பிரீப் கேஸ் வாங்கும்போது நம்பர்லாக் உள்ளது என்றால் நம்பரை சரிவர ஏதாவது நோட்டு புத்தகத்தில், டைரியில், செல்லில் பதிந்து வைத்திருப்பது, மனப்பாடம் செய்து வைத்திருப்பது அவசியம். கூடவே பூட்டு சாவி இருப்பது அவசியம். தங்கும் அறைக்கானது இது.

பெட்டியில் தேவையான அளவு துணிமணிகளை எடுத்து அழகாக அடுக்கி வைத்திருப்பது நல்லது. அதில் மழைக் காலத்திற்கு ஏற்ற துணிமணிகள் மற்றும் குடை போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியம். சீருடைகளை எடுத்து அடுக்க மறவாதீர்கள். தேவையான அளவு உள்ளாடைகளை வாங்கிச் செல்லுங்கள். ஊசி, நூல் கைவசம் இருக்கட்டும்.

சாப்பாட்டு தட்டு, டம்ளர், கிண்ணம் முதலியவற்றை  முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாட்டில்களில் ஊறுகாய், இட்லி பொடி, எண்ணெய் வகைகள், தேவையான அளவு பிடித்த தின்பண்டங்களை வீட்டிலிருந்து செய்து எடுத்துச் செல்லுங்கள்.

மேக்கப் சாதனங்களான சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர், பொட்டு, கிரீம் வகைகள், பல் துலக்க பேஸ்ட், பிரஷ் முதலியவற்றையும் சேகரித்து வைத்திருக்க வேண்டும். சில மெழுகுவர்த்திகளையும் எடுத்துச் சென்றால் பவர் கட் ஆகும் சமயங்களில் உதவியாக இருக்கும்.

படுக்கைக்கு பாய், தலையணை மெத்தை, போர்வை, பெட்ஷீட் என்று எதை விரும்புகிறீர்களோ அதை நீங்கள் சேரச் செல்லும் ஊர்களிலேயே பள்ளி, கல்லூரி அருகிலுள்ள உள்ள கடைகளில் வாங்கிக் கொண்டால் எடுத்துச் செல்லும் சுமை குறையும். பக்கெட், மக்கு கூட அப்படியே வாங்கிக் கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு பெரிய பைகளில் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் அனைத்துக்கும் அழகாக அட்டை போட்டு, லேபிள் ஒட்டி, பெயர் எழுதி, பேனா, பென்சில் பாக்ஸ், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஓவியம் வரைவதற்கான கலர் பேனா, பென்சில்கள் முதலியவற்றை சேகரித்து வைத்து விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
பெட் டைம் ஸ்டோரீஸ் சொல்வதன் கிளைமாக்ஸ்!
Students staying in the hostel

செஸ், கேரம் போர்டு போன்றவற்றை இருக்கும் ஊர்களில் உள்ள கடைகளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரங்களில் அவ்வப்போது தோழி அல்லது தோழர்களுடன் சேர்ந்து விளையாட வசதியாக இருக்கும் .அதுபோல் இசைக்கருவிகள் ஏதாவது பழகி இருந்தால் அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். படித்து முடித்து ஹோம் ஒர்க் எல்லாம் செய்த பிறகு பிடித்ததை இசைக்கலாமே.

தேவையான மருந்து பொருட்கள், களிம்புகள், சாதாரண காய்ச்சலுக்கான கை மருந்துகள், பருவமடைந்த பெண்களாய் இருந்தால் தேவையான நாப்கின்கள் போன்றவற்றை கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும். துணிகளை காயப்போடுவதற்கான கிளிப்புகளையும் வைத்திருப்பது நல்லது.

இதுபோன்ற அத்தியாவசியமான பொருட்களை முன்கூட்டியே லிஸ்ட் போட்டு எடுத்து வைத்து விட்டால் போகும்போது சிரமம் இல்லாமல் புறப்பட்டுப் போகலாம்.

logo
Kalki Online
kalkionline.com