

பொதுவாகவே வீடு வாசல்களை சுத்தம் செய்யவேண்டும். அப்படி சுத்தம் செய்யும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். அனேகமாக வீட்டை சுத்தம் செய்வதைவிட சுற்றுப்புறம் சுத்தம் செய்து வருவதை தொடர்பழக்கமாக கடைபிடிப்பதே நல்லது.
சுற்றுப்புறம் சுத்தம் செய்வதால் விஷ ஜந்துக்கள் வராமல் இருக்கும். மேலும் வாரத்தில் ஏழுநாட்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய், வெள்ளி, தவிர ஏனைய நாட்களில்வீட்டை சுத்தம் செய்யலாம்.
சாஸ்திரப்படியே செவ்வாய், வெள்ளி, ஆகிய இரு தினங்களிலும் விடியற்காலை பிரம்ம முகூா்த்த நேரத்தில் பூஜை அறையில் இலுப்ப எண்ணைய் துளி அளவு கலந்து விளக்கேற்றி வைப்பது நல்ல பலன்களையே தரவல்லது. அதனால்தான் செவ்வாய் வெள்ளி நாட்களில் வீட்டைக்கழுவி சுத்தம் செய்தல் தவிா்க்கவேண்டும்.
மேற்படி தினங்களில் மஹாலெட்சுமி வாசம் செய்யும் புனித நாளாக கருதப்படுகிறது. மேலும் நிலை வாசற்படிகளில் விளக்கமாறு கொண்டு பெருக்கி கழுவிவிடக்கூடாது. ஈரமான துணியைக் கொண்டு துடைப்பது நல்லது.
அதேபோல துடைத்து முடித்தபின் மஞ்சள் பொடி, மற்றும் ஜவ்வாது பவுடரையும் கரைத்து தெளிப்பதால் எதிா்மறை ஆற்றல் விலகும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. அதேபோல எண்ணைய்தேய்த்து குளிக்க நினைத்து தலையில் எண்ணையை தேய்த்துக்கொண்டு அதோடு அரிசி எடுப்பது பீரோவைத்திறப்பது, நிலைக் கண்ணாடியில் முகம் பாா்ப்பது, சமையல் வேலை செய்வதை தவிா்ப்பது நல்லது.
அதே எண்ணைய் தலையுடன் வீட்டை சுத்தம் செய்வதை தவிா்ப்பதும் நல்லது. மேலும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் குளித்துவிட்டு தீபம் ஏற்றி ஏதாவது ஒரு நைவேத்தியம் பால், கல்கண்டு, பாயசம், பழம், அல்லது ஏதாவது ஒரு வகை அன்னம் இப்படி நமது சக்தி மற்றும் வேலைப் பளுவிற்கேற்ப செய்து குலதெய்வம், இஷ்ட தெய்வம் கந்த சஷ்டிகவசம், அம்பாள் ஸ்லோகங்கள் சொல்லலாம். "ஓம் ஶ்ரீம் க்ரீம் ஶ்ரீீம் புவனேச்வர்யை நமஹ" எனவும் பாராயணம் செய்யலாம்.
அதுபோல செய்து காக்கைக்கு அன்னம் வைப்பதும் நல்லது.
நமக்கு தொியும் என நினைத்து சில அனுஷ்டானங்களை சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டு அதிகப்பிரசிங்கித்தனமான காாியங்களை செய்யவே கூடாது. அதுபோன்ற எதிா்மறையான செயல்பாடுகள் வரவே கூடாது. நமது செயல்பாடுகளால், இறை வழிபாடுகளால், வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருப்பதும், மகாலெட்சுமி வாசம் செய்வதும் தொடர்ந்து இருக்கும் என்பதை உணர்வோமாக. அதையெல்லாம் விட மனதை மற்றும் ஆன்மாவை சுத்தமாக வைத்திருந்து மனசாட்சிக்கும் தெய்வசக்திக்கும் பயந்து அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே நமக்கு எல்லாநாளும் சிறந்த நாளே!