
பாபா வாங்கா, பல ஆண்டுகளுக்கு முன்பே, எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று கணித்துச் சொன்ன ஒரு புகழ்பெற்ற தீர்க்கதரிசி. அவர் சொன்ன பல விஷயங்கள் நிஜத்தில் நடந்திருப்பதால், மக்கள் அவருடைய கணிப்புகளைக் கேட்டு கொஞ்சம் ஆச்சரியமும், கொஞ்சம் பயமும் அடைவது வழக்கம்.
2025-ஆம் ஆண்டே பல போர்கள், இயற்கை பேரழிவுகளுடன் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டிற்காக அவர் சொன்ன கணிப்புகள் தான் இப்போது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
பொருளாதாரப் பேரழிவு: பாபா வாங்கா 2026-ல் கணிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான ஆபத்து, உலகளாவிய பொருளாதார நெருக்கடிதான். இதை அவர் "கேஷ் க்ரஷ்" (Cash Crush) என்று குறிப்பிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் பணத்தின் மதிப்பு திடீரெனச் சரிந்துவிடுமாம். வங்கிகளில் நாம் வைத்திருக்கும் பணம், டிஜிட்டல் நாணயங்கள் என எல்லாவற்றின் மதிப்பும் குறைந்து, ஒரு பெரிய நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர் கணித்திருக்கிறார்.
ஏற்கனவே, விலைவாசி உயர்வு, பல நாடுகளில் நடக்கும் போர்கள், பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு போன்ற காரணங்களால், பொருளாதாரம் கொஞ்சம் நிலையற்றதாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகிவிடுமோ என்ற கவலை எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அப்படி நடந்தால், ஏழை மற்றும் நடுத்தர நாடுகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மூன்றாம் உலகப் போரா?
பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, 2026-ல் ஒரு பெரிய உலகளாவிய மோதல் ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். இது ஒருவேளை மூன்றாம் உலகப் போராக இருக்கலாம் என்று பலர் அஞ்சுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள், ரஷ்யா-அமெரிக்கா மற்றும் சீனா-தைவான் போன்ற நாடுகளுக்கு இடையேயான பனிப்போர் போன்றவை, இந்த கணிப்பு உண்மையாகி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
இந்தக் கணிப்புகளை நம்பலாமா?
பல பொருளாதார வல்லுநர்கள், இது போன்ற கணிப்புகளை எல்லாம் நம்பத் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஆனாலும், உலகில் தற்போது நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அவர் சொன்னது நடந்துவிடுமோ என்ற சந்தேகம். ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடியவில்லை, பல நாடுகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதெல்லாம் பாபா வாங்காவின் கணிப்புக்கு வலு சேர்ப்பது போலவே இருக்கிறது.
பாபா வாங்காவின் கணிப்புகள் கேட்பதற்குப் பயமாக இருந்தாலும், இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இவை வெறும் கணிப்புகள்தான். எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எதுவாக இருந்தாலும், நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.