
சிலருக்கு கனவுகள் காணுவதன் மூலமாக எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் காட்சியாக வரும். அது வெறும் கனவாக கருதாது கூர்ந்து கவனித்தால், அதில் இருக்கும் உண்மை புரியும். அதுப்போல தான் ஜப்பானில் இருந்த ஒரு பெண்ணுக்கு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பேரழிவுகள் பற்றிய கனவுகள் அடிக்கடி வந்துக் கொண்டிருந்தது. அதைப்பற்றி அந்த பெண் தன்னுடைய டைரியிலும் குறிப்பு எடுத்து வைத்திருந்தார்.
Ryo tatsuki என்ற ஜப்பானிய பெண்மணி 1999 ஆம் ஆண்டு, தான் எழுதிய 'The future i saw' என்ற புத்தகத்தில் எதிர்காலத்தில் நிகழுவிருக்கும் பேரழிவுகள், பிரபலங்களின் மரணம் போன்ற சம்பவங்களை முதலே கணித்து எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் இவரை 'ஜப்பானின் பாபா வாங்கா' என்று அழைக்கிறார்கள்.
இவர் இதற்கு முன்பு பல நிகழ்வுகளை கணித்துள்ளார். Freddy mercury யின் இறப்பு, இளவரசி டையானாவின் இறப்பு, கோவிட் 19, ஜப்பானில் 2011 நடந்த சுனாமி போன்றவற்றை இவர் புத்தகத்தின் மூலமாக தெளிவாக கணித்து சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 30 2025 ஆம் ஆண்டு மிக பெரிய பூகம்பம் ரஷ்யாவில் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கைகள் ரஷ்யா மற்றும் ஜப்பானில் விடுக்கப்பட்டன. இந்த நிகழ்வு காரணமாக திரும்பவும் Ryo tatsukiயின் கணிப்புகள் உண்மை என்று மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு மிகபெரிய பூகம்பமும், சுனாமியும் ஜப்பானில் ஏற்படும் என்று கணித்திருந்தார்.
அதுப்போலவே ஏற்பட்டு ஜப்பானில் மிகபெரிய அழிவை ஏற்படுத்தியதை நாம் அறிவோம்.'ஜப்பானுக்கும் பிலிப்பையன்ஸ் கடலுக்கு அடியில் உள்ள தரையில் வெடிப்பு ஏற்பட்டு சுனாமி ஏற்படும். இந்த சுனாமி 2011 ஜப்பானில் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்' என்று கூறியுள்ளார். எனினும், அவர் கூறியது போல July 5 இது நிகழவில்லை என்றாலும் தற்போது பெரிய அளவிலான பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதை பார்த்த மக்கள் அவர் கணித்தது சரியே என்று நம்பத் தொடங்கியுள்ளனர்.
இதுப்போன்ற எதிர்காலத்தை பற்றிய கணிப்புகளை நம்புவதும் நம்பாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், இது மக்களுக்கு விழிப்புணர்வை தர வேண்டுமே தவிர பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பது பலருடைய கருத்தாக உள்ளது.