மழைக்காலத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்கான சிறந்த குறிப்புகள்! 

Mom and Baby in Rain
Baby Care Tips in Rainy Season

என்னதான் மழைக்காலம் கடுமையான வெப்பத்திலிருந்து நமக்கு நிவாரணம் அளித்தாலும், மழையும் சில பாதிப்புகளை நமக்கு கொடுக்கத்தான் செய்கிறது. குறிப்பாக மழைக்காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது சவாலானதாக மாறுகிறது. இந்த பருவத்தில் ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்பதிவில் மழைக்காலத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்கான சில அத்தியாவசிய குறிப்புகள் பற்றி பார்க்கலாம். 

மழைக்காலத்தில் உங்கள் குழந்தைகள் தவறுதலாக மழையில் நனைந்துவிட்டால், அவர்களுக்கு சருமப் பிரச்சனை ஏற்படலாம். எனவே மென்மையான உறிஞ்சக்கூடிய துண்டுகள் அல்லது போர்வைகள் பயன்படுத்தி உங்கள் குழந்தையை நன்கு துடைக்கவும். அவர்களது சருமம் வறண்டு இருப்பதை உறுதி செய்யவும். டயப்பர் ராஷ் ஏற்படுவதைத் தடுக்க அடிக்கடி அவற்றை மாற்றவும்.

உங்கள் குழந்தைகளுக்கு மழை காலத்தில் லேசான மற்றும் காற்று ஊடுருவக்கூடிய ஆடைகளை அணியவும். விரைவாக உலரக்கூடிய துணிகளைத் தேர்ந்தெடுத்து, அதிக உடை அணிவதை தவிர்க்கவும். வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவுக்கு ஏற்ப அவர்களது ஆடைகளை அவ்வப்போது சரியாக அணிவிக்கவும். 

மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகமாக இருக்கும், குறிப்பாக தூங்கும் நேரத்தில். குழந்தைகளை கொசுக்கள் கடிப்பதைத் தவிர்க்க, கொசுவலைகளைப் பயன்படுத்தவும். இது அவர்களை கொசுக்கள் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். மழைக்காலங்களில் நோய்த்தொற்று எளிதாக பரவும் என்பதால், அவர்களது தூய்மை மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். மேலும் நீரினால் பரவும் நோய்களைத் தவிர்க்க, ஆரோக்கியமான தண்ணீரை குழந்தைகளுக்குக் கொடுக்கவும். முடிந்தவரை தண்ணீரை சூடுபடுத்தி குழந்தைகளுக்கு கொடுக்க முயலுங்கள். 

குழந்தைகளுக்கு மழைக் காலங்களில் சளி, இருமல் போன்றவை வருவது சகஜம்தான். எனவே உங்கள் குழந்தையை எப்போதும் சூடாக வைத்திருக்கவும். அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை கண்காணித்து, ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்துக் கொண்டே கோடீஸ்வரன் ஆவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Mom and Baby in Rain

உங்கள் குழந்தையை பருவ கால நோய்களிலிருந்து பாதுகாக்க, அவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் போடவும். இது உங்களது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி மழைக்கால நோய்த் தொற்றுக்களை தடுக்க உதவும். 

பெற்றோர்கள், மேலே குறிப்பிட்டுள்ள எல்லா விஷயங்களையும் புரிந்துகொண்டு, மழைக்காலங்களில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இது உங்களது குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு பெரிதளவில் உதவும். கோடை காலத்தைவிட மழைக்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு கூடுதல் கவனிப்பு வேண்டும் என்பதை பெற்றோர்கள் புரிந்து நடந்துகொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com