பாத்ரூம் டிசைன்: இந்த 8 'NO-NO' விஷயங்களை மீறினால் கஷ்டம்தான்!

8 Bathroom mistakes
8 Bathroom mistakes
Published on

வீட்டில் உள்ள எல்லோருமே முக்கியமாக பயன்படுத்தக் கூடிய இடம் என்றால், அது பாத்ரூம் தான். பாத்ரூமை ஒருநாளைக்கு ஒருமுறையாவது பயன்படுத்தி விடுவோம். நம் வீட்டிற்கு வரும் விருந்தினரும் பாத்ரூமை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். எனவே, கண்டிப்பாக பாத்ரூமில் எந்த தவறுகளும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவால் காண்போம்.

1. பாத்ரூமில் Low roof என்று பொருட்களை சேமிப்பதற்காக இடம் விட்டு வைப்போம். அப்படி வைத்திருக்கும் போது பெரியவர்கள் உள்ளே சென்று பயன்படுத்திவிட்டு வரும் போது தலையில் இடிக்கும். அதுமட்டுமில்லாமல் குளிக்கும் போது அசௌகரியமாக இருக்கும். இதனால் பாத்ரூமில் Ventilation அவ்வளவாக இருக்காது. எனவே, பாத்ரூமிற்கு மேலே அதை வைப்பதை தவிர்த்துவிடுவது சிறந்தது.

2. பாத்ரூம் ஜன்னல் வைக்கும் போது 2 க்கு 2 என்ற அளவில் வைக்க வேண்டும். அதற்கு கீழே போகக்கூடாது. பாத்ரூமில் ஜன்னலில் வைக்கப்படும் கிளாஸ் வெளிப்பக்கம் இறங்கியதுப் போல இருக்க வேண்டும். இதுவே உள்பக்கம் இறங்கியதுப்போல வைத்தால் வெளியிலிருந்து பார்த்தால் தெரியும்.

இதுப்போல Ventilation க்கு ஜன்னல் வைக்கும் போது பக்கத்தில் Exhaust Fan இருப்பது போல ஒரு ஆப்சென் இருக்கும். அப்படியும் வைக்கலாம் பாத்ரூம் உள்ளேயிருக்கும் கெட்ட வாடைகளை வெளியேற்ற இது உதவும். பாத்ரூமில் இருக்கும் சூட்டைக் குறைக்கவும் இது உதவும்.

3. வீடு கட்டும் 90 சதவீதம் பேர் பாத்ரூமில் இந்த தவறை செய்து விடுகிறார்கள். அது தான் Water proofing. பாத்ரூமில் டைல்ஸ் போடுவதற்கு முன்பாகவே Water proofing கோட்டிங் போட்டுவிட்டு பிறகு டைல்ஸ் போட்டால் தான் நாளடைவில் சுவரில் தண்ணீர் படிவதை தடுக்க முடியும்.

4. பாத்ரூமில் ஹீட்டர் இப்போது வைக்கிறீர்களோ இல்லை எதிர்காலத்தில் வைக்கப்போகிறீர்களோ, அதற்கான பவர் பாயின்டை இப்போதே வைத்திவிடுவது சிறந்தது. பிளம்பரிடமும் பைப் கனெக்ஷனை இப்போதே வைத்துவிட சொல்வது எதிர்காலத்தில் உதவும்.

5. பாத்ரூமில் வாஷ்பே சின் வைக்கும் போது அங்கே டிரிம், ஷேவ், ஹேர் டிரையர் போன்றவற்றை கண்ணாடியை பார்த்து பயன்படுத்த வேண்டி வரும் என்பதால் அங்கே ஒரு பிளக் பாயின்ட் வைப்பது பயனுள்ளதாக அமையும்.

6. வீட்டின் Living Room பக்கத்தில் பாத்ரூம் வைக்கும் போது சற்று தாழ்வாக வைக்க சொல்வார்கள். அப்போது தான் குளிக்கும் போது தண்ணீர் வெளியே வராது என்பதற்காக சொல்வதுண்டு. இதுவே மாடியில் பாத்ரூம் வைக்கும் போது Floor உயரம் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
டாய்லெட்ல உப்பைப் போட்டா என்ன ஆகும் தெரியுமா? காலையில நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
8 Bathroom mistakes

7. பாத்ரூமில் டைல்ஸ் போடும் போது கிளாஸ் போன்று இருக்கும் டைல்ஸை தரையில் போடக்கூடாது. சுவர்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். தரைக்கு போடக்கூடிய Mat finish tiles இருக்கிறது அல்லது பாத்ரூமுக்கு போடக்கூடிய ஸ்பெஷலான டைல்ஸ்கள் இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளலாம். வயதானவர்கள் செல்லும் போது வழுக்கி விழாமல் இருப்பதற்காக இதுப்போன்ற டைல்ஸை பயன்படுத்துவது நல்லது.

இதையும் படியுங்கள்:
ஜாக்கிரதை! உங்க வீட்டுல இந்த 4 வாசனை வந்தா, பாம்பு விருந்தாளியா வரலாம்!
8 Bathroom mistakes

8. பாத்ரூமின் சுவரில் கீழிருந்து இரண்டு அடி மட்டும் Dark colour பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அழுக்குப் பட்டால் நன்றாக தெரிந்துவிடும். மேலே இருக்கும் இடத்தில் Light colour பயன்படுத்துவது நல்லது.

இனி, நீங்கள் பாத்ரூம் கட்டும் போது இந்த விஷயங்களை நினைவில் வைத்து, தவறுகளை செய்யாமல் தவிர்த்து விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com