snake
snake

ஜாக்கிரதை! உங்க வீட்டுல இந்த 4 வாசனை வந்தா, பாம்பு விருந்தாளியா வரலாம்!

Published on

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே போதும், மனசுக்குள் ஒருவித படபடப்பு வந்துவிடும். பூச்சி, பொட்டுகள் தொல்லை ஒருபக்கம் என்றால், பாம்பு பயம் இன்னொரு பக்கம். குறிப்பாக, கோயம்புத்தூர் மாதிரி பசுமையான இடங்கள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பெரிய கவலை. பாம்புகளை நம் வீட்டிலிருந்து தள்ளி வைக்க என்னென்னவோ செய்வோம். 

வீட்டு வாசலில் மருந்துகளைத் தெளிப்பது, ஓட்டைகளை அடைப்பது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால், நாம் அறியாமலேயே, நம் வீட்டில் இருந்து வரும் சில சாதாரண வாசனைகள், பாம்புகளுக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்புவதைப் போல. 

பாம்புகள் நேரடியாக அந்த வாசனைக்கு வருவதில்லை, ஆனால் அந்த வாசனைகள் பாம்புகளின் இரையை ஈர்க்கும். அப்படிப்பட்ட 4 அன்றாட வாசனைகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டால், நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கலாம்.

1. செல்லப் பிராணிகளின் உணவு மற்றும் பறவை தானியங்கள்!

நம்மில் பலருக்கு வீட்டில் நாய், பூனை வளர்க்கும் பழக்கம் இருக்கும். அவற்றுக்கு வைத்த உணவை அவை முழுவதுமாக சாப்பிடாமல் விட்டுவிடும்போது, அல்லது இரவு நேரங்களில் பாத்திரத்தை வெளியே வைத்துவிடும்போது, அதிலிருந்து வரும் வாசனை எலிகளையும், பெருச்சாளிகளையும் ஈர்க்கும். 

இதேபோல, பறவைகளுக்காக நாம் வைக்கும் தானியங்கள் சிதறிக் கிடந்தாலும், அது எலிகளுக்கு ஒரு கொண்டாட்டம்தான். சுருக்கமாகச் சொன்னால், எலிகள் எங்கே உண்டோ, பாம்புகள் அங்கே அவற்றின் வாசனை பிடித்து விருந்துக்கு வந்துவிடும். எனவே, செல்லப் பிராணிகளுக்கு உணவு வைத்தவுடன் அந்த இடத்தைச் சுத்தம் செய்வது, மீதமுள்ள உணவை மூடி வைப்பது மிக அவசியம்.

2. குப்பை மற்றும் உணவுக்கழிவுகள்!

திறந்து வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் இருந்து வரும் வாசனை, எலிகளுக்கு ஒரு ஹோட்டல் திறந்தது போலத்தான். குறிப்பாக, சமைத்த உணவுக்கழிவுகள், அழுகிய காய்கறிகள் போன்றவற்றின் வாசனைக்கு எலிகள் கூட்டம் கூட்டமாக வரும். உங்கள் வீட்டுக்கு அருகில் குப்பைத் தொட்டி சரியாக மூடப்படாமல் இருந்தாலோ, அல்லது வீட்டுத் தோட்டத்தில் உணவுக்கழிவுகளைக் கொட்டினாலோ, நீங்கள் எலிகளை வரவேற்பதோடு, பாம்புகளையும் மறைமுகமாக வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம். 

இதையும் படியுங்கள்:
முட்டை - பால் - இறைச்சி - ஒரு கப் சோயா... நோய்களில் இருந்து தப்பிக்க எது பெஸ்ட்?
snake

3. ஈரப்பதம் மற்றும் அவிந்த வாடை!

பாம்புகளுக்கு ஒளிந்துகொள்ள குளிர்ச்சியான, ஈரமான, இருட்டான இடங்கள் மிகவும் பிடிக்கும். உங்கள் வீட்டில் எங்காவது தண்ணீர் குழாய் கசிந்து, அந்த இடத்திலிருந்து ஒருவித ஈரமான, அவிந்த வாடை வருகிறதா? ஜாக்கிரதை. வீட்டுக்கு வெளியே தேங்கிக் கிடக்கும் தண்ணீர், ஈரமான இலைக் குவியல்கள், சரியாகப் பராமரிக்கப்படாத சாக்கடைகள் போன்ற இடங்கள் பாம்புகளுக்கு ஒரு சொர்க்கம். 

இந்த ஈரப்பதமான சூழல், தவளைகள் மற்றும் பூச்சிகள் போன்ற பாம்புகளின் பிற இரைகளையும் ஈர்க்கும். எனவே, வீட்டில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வதும், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும் மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
இறைச்சி உண்ணும் தாவரங்கள் பற்றி தெரியுமா?
snake

4. வறுக்கப்பட்ட இறைச்சி மற்றும் அதன் கழிவுகள்!

இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். நீங்கள் வீட்டில் சிக்கன் வறுக்கும் வாசனைக்கோ அல்லது BBQ செய்யும் வாசனைக்கோ பாம்புகள் நேரடியாக வராது. ஆனால், சமைத்த பிறகு மீதமாகும் இறைச்சிக் கழிவுகள், கிரில்லை சரியாக சுத்தம் செய்யாமல் விடும்போது அதிலிருந்து வரும் கொழுப்பு வாசனை போன்றவை எலிகளையும், மற்ற விலங்குகளையும் ஈர்க்கும். 

கோழிப் பண்ணை இருக்கும் இடங்களுக்குப் பாம்புகள் அடிக்கடி வருவதற்கு காரணம் இதேதான். அந்த விலங்குகளின் உடல் வாசனை பாம்புகளுக்கு அவற்றின் இரை இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும். எனவே, இறைச்சி சமைத்த பிறகு அந்த இடத்தையும், கழிவுகளையும் சுத்தமாக அகற்றிவிடுவது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com