பழசாகிவிட்ட உங்க பாத்ரூம் டவலின் பல்வேறு உபயோகங்கள் தெரியுமா?

Bathroom towel
Bathroom towel
Published on

நீங்கள் பாத்ரூமில் உபயோகிக்கும் காட்டன் டவல்கள் (Bathroom towel) அவற்றின் புதுப்பொலிவிழந்து, மிருதுத்தன்மை குறைந்து காணப்படும்போது நீங்கள் அவற்றை மாற்றிவிட்டு புதிய டவல்களை வாங்கி உபயோகிக்க ஆரம்பிப்பீர்கள். அந்த பழைய டவல்கள் பீரோவின் அடித்தட்டில் ஓரமாய் மடித்து வைக்கப்பட்டு உபயோகமற்று உட்கார்ந்திருக்கும். அவற்றை எவ்வாரெல்லாம் மறுபடியும் பயன்படுத்தலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. அவற்றை கால் மிதி அளவுக்கு நீள அகலத்தை மடித்து, உங்க வீட்டு விருந்தினர் அறை அல்லது குழந்தைகள் அறையின் குளியல் அறை கால் மிதியாக பயன்படுத்தலாம். அதன் நீரை உறிஞ்சும் திறன், கால்களை விரைவில் உலரச் செய்துவிடும்.

2. உங்கள் வீட்டில் செல்லப்பிராணி இருக்கிறதா? அப்படியானால் இந்த டவலை உபயோகித்து அது ஓய்வெடுக்கவும், உறங்கவும் ஒரு வசதியான படுக்கை அமைத்துக்கொடுக்கலாம். செல்லப் பிராணி குளித்தவுடன் அதன் கால்களை துடைக்கவும், வெளியில் சுற்றிவிட்டு வரும்போது அதன் பாதங்களை சுத்தப்படுத்தவும், அதை காரில் அழைத்துச் செல்லும்போது டவலை போட்டு அதில் உட்காரச் செய்து கூட்டிப்போக பழைய டவல் உதவும்.

3. தினமும் நாம் அதிக நேரத்தை கிச்சனில் செலவழிக்கிறோம். அப்போது காலுக்கு அடியில் உண்டாகும் பிசுபிசுப்பு மற்றும் ஈரத்தை துடைக்க பழைய டவலை உபயோகிக்கலாம். ஊறவைத்த அரிசி போன்ற உணவுப் பொருட்களை பழைய டவல் மீது பரத்தி உலர்த்தியெடுக்கவும், பிரட் தயாரிக்க மாவு பிசைந்து புளிக்க வைத்திருக்கும்போது பழைய டவல் வைத்து மாவை மூடி வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வீடு குப்பை மேடா இருக்கா...?இந்த பிளாஸ்டிக் டப்பா மேஜிக் தெரிஞ்சா அசந்துடுவீங்க!
Bathroom towel

4. தையல் மெஷினில் தைக்கத் தெரிந்தவர்கள் பழைய டவலை பை போல தைத்து காய்கறி, சில மளிகை சாமான் வாங்க செல்லும்போது எடுத்துச் செல்லலாம்.

5. அட்டைப் பெட்டி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் கண்ணாடி ஜார் போன்றவற்றை எடுத்து செல்லும்போது, பழைய டவலில் சுற்றி வைத்து எடுத்துச் சென்றால் ஜார் உடையாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

6. உங்களிடம் விரைந்து துடைக்கும் கருவி (swiffer) இருந்தால் அதில் பொருத்துவதற்கு பாட் (pad) வாங்குவதற்கு பதில் பழைய டவலை சுற்றி வைத்துக்கட்டி சுத்தப்படுத்தலாம். இதனால் காசும் மிச்சமாகும்.

7.பழைய டவலை மூன்று நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டு பேப்பர் டவலுக்குப் பதில், தூசி மற்றும் தரையில் சிந்திவிட்ட குழம்பு, ரசம் போன்றவற்றை துடைக்க பயன்படுத்தலாம். அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்க அவ்வப்போது அதை துவைத்து வைப்பது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com