

நாம் அனைவருமே வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை எங்கு வைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்போம். கடைகளில் விற்கும் விலை உயர்ந்த அலங்காரப் பெட்டிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம், ஆனால் அவை நடைமுறைக்கு ஒத்துவராது.
சில நேரங்களில் எளிமையான விஷயங்களே மிகப்பெரிய தீர்வைத் தரும். அந்த வகையில், உங்கள் வீட்டின் ஒழுங்கீனத்தை சரிசெய்ய மிகச்சிறந்த நண்பன் யார் என்றால், அது நம் எல்லோருக்கும் தெரிந்த பிளாஸ்டிக் டப்பாக்கள்தான் (Plastic box). இவை உறுதியானவை மட்டுமல்ல, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கக்கூடிய வசதியையும் கொண்டவை.
1. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஸ்வெட்டர்கள், கம்பளி ஆடைகள் அல்லது பழைய துணிகளை எங்கு வைப்பது என்பது பெரும் தலைவலியாக இருக்கும். துணி பைகளில் மூட்டை கட்டி வைத்தால் பூச்சி அரிக்கும் வாய்ப்பு அதிகம். இதற்கு பிளாஸ்டிக் டப்பாக்களே சரியான தீர்வு. நீங்கள் பயன்படுத்தாத உடைகளை மடித்து இதில் வைத்து மூடிவிட்டால், தூசி மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக, டப்பாவின் வெளியே லேபிள் ஒட்டி வைத்துவிட்டால், தேவைப்படும் நேரத்தில் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
2. வீட்டில் குழந்தைகள் இருந்தால் தரை முழுவதும் பொம்மைகள் சிதறிக்கிடப்பது வழக்கம். துணியால் ஆன கூடைகளைவிட பிளாஸ்டிக் டப்பாக்கள் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. ஏனெனில் குழந்தைகள் கிரேயான்ஸ் அல்லது இத்ர சாயங்களைக் கொண்டு அழுக்குப் படுத்தினால், பிளாஸ்டிக் டப்பாக்களைச் சுத்தம் செய்வது மிகவும் எளிது. லிகோ போன்ற சிறிய விளையாட்டுப் பொருட்களைத் தொலைக்காமல் பாதுகாக்கவும் இவை உதவுகின்றன. குழந்தைகள் விளையாடி முடித்ததும் அவர்களே எடுத்து உள்ளே போடுவதற்கு இவை வசதியாக இருக்கும்.
3. வீட்டின் பரண் மீதோ அல்லது கேரேஜிலோ பொருட்களை வைக்கும்போது தூசி படிவதுதான் பெரிய பிரச்சனை. சுத்தியல், ஸ்க்ரூ டிரைவர் போன்ற இரும்புச் சாமான்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தால் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் டப்பாக்களில் இவற்றை வைத்து மூடினால் காற்று மற்றும் ஈரம் உள்ளே போகாது. மேலும், இடம் குறைவாக உள்ள அறைகளில், இந்த டப்பாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பதன் மூலம் நிறைய இடத்தைச் மிச்சப்படுத்தலாம்.
4. சமையலறையில் கண்ணாடி பாத்திரங்களைப் பயன்படுத்துவது அழகாக இருந்தாலும், அவை கை தவறி விழுந்தால் உடைந்துவிடும் ஆபத்து உள்ளது. ஆனால் பிளாஸ்டிக் டப்பாக்கள் கீழே விழுந்தாலும் உடையாது. மேலும், இவை எடை குறைவாக இருப்பதால் கையாளுவது எளிது. மளிகைப் பொருட்களை இதில் கொட்டி வைக்கும்போது, உள்ளே என்ன இருக்கிறது என்பது வெளியிலிருந்தே தெளிவாகத் தெரியும். இதனால் தேவையில்லாமல் பொருட்களைத் தேடும் நேரம் மிச்சமாகும்.
5. விருந்தினர்கள் வரும்போது மட்டுமே பயன்படுத்தும் போர்வைகள் மற்றும் துண்டுகளை அலமாரியில் சும்மா வைத்திருந்தால், ஒரு விதமான மக்கு வாடை வீசத் தொடங்கும். அவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு, அதனுடன் நறுமணம் தரும் தாள்களையோ அல்லது நாப்தலீன் உருண்டைகளையோ போட்டு வைத்தால், எடுக்கும்போது புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஈரம் உள்ளே செல்லாது என்பதால் பூஞ்சை காளான் பிடிக்கும் கவலையும் இல்லை.
வீட்டை அழகாக மாற்ற இந்த பிளாஸ்டிக் டப்பாக்களே போதும். இவை பொருட்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நம் மனதிற்கும் ஒரு நிம்மதியைத் தருகின்றன. சரியான அளவில், சரியான வடிவத்தில் டப்பாக்களை வாங்கிப் பயன்படுத்தினால், உங்கள் வீடும் ஒரு மினி சூப்பர் மார்க்கெட் போலத் தெளிவாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.