இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

Happy family
Happy family
Published on

படுக்கை நேரம் என்பது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான ஒரு சிறப்புப் பிணைப்பை வலுப்படுத்தும் அருமையான நேரம் ஆகும். அமைதியான சூழலில் குழந்தைகளின் மனதில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த தருணம். இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சில குறிப்பிட்ட கேள்விகளை கேட்கலாம். இது குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அவர்களின் உணர்வு சார்ந்த அறிவையும் மேம்படுத்த உதவும்.

1. இன்று நீங்கள் என்ன சுவாரஸ்யமான விஷயத்தைக் கண்டுபிடித்தீர்கள்?

இந்தக் கேள்வியை குழந்தைகளிடம் கேட்பதினால் அவர்கள் தங்கள் நாளின் நிகழ்வுகளைப் பற்றி சிந்திக்கவும், ஏதேனும் புதிய கற்றல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஊக்குவிக்கிறது. இது அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, அறிவுத்திறனை வளர்க்க உதவுகிறது. மேலும், தங்கள் நாளைப் பற்றி நேர்மறையாக சிந்திக்கவும், தினசரி கற்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும் இது உதவுகிறது.

2. இன்று நீங்கள் மிகவும் சிறப்பாக என்ன செய்தீர்கள்?

இந்தக் கேள்வி, குழந்தைகள் தங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து (Comfort Zone) வெளியேறிய அல்லது புதிதாக ஏதாவது முயற்சித்த தருணங்களைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கிறது. இது தன்னைத்தானே சவால் செய்யும் திறனை வளர்த்தெடுக்கவும், தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

3. இன்று நீங்கள் ஏதாவது தவறு செய்தீர்களா? அவற்றிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

தவறுகள் என்பவை வாழ்க்கையின் ஒரு அங்கம். இந்த கேள்வி, குழந்தைகள் தவறுகளை கற்றல் வாய்ப்புகளாகக் கருதவும், தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளவும் உதவுகிறது. இது குழந்தைகள் தோல்வியை எதிர்கொள்ளும் திறனை வளர்த்தெடுக்கவும், மனோபலத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

4. இன்று உங்களைப் பற்றி நீங்கள் பெருமைப்பட ஏதேனும் காரணம் உள்ளதா?

குழந்தைகள் தங்கள் சாதனைகளைப் பற்றி சிந்திக்கவும், சுய மதிப்பை அதிகரிக்கவும் இந்தக் கேள்வி உதவுகிறது. இது நேர்மறையான அனுபவங்களை அடையாளம் காணவும் அவர்களின் சொந்த சாதனைகளை அடையாளம் காணவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
கர்ப்பப்பை இறக்கமா? கர்ப்பப்பை அகற்றாமலே கர்ப்பப்பையை பாதுகாக்கலாம்... சிகிச்சை என்ன தெரியுமா?
Happy family

5. நாளை என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

இந்த கேள்வி, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கவும், உற்சாகத்தை ஏற்படுத்தவும் தூண்டுதலை உண்டாக்கும். இது ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் இலக்கை அமைக்கும் திறன்களை வளர்க்க உதவுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளைக் கேட்பதன் மூலம், பெற்றோர்கள் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அவர்களின் உணர்ச்சி நலனையும் மேம்படுத்த உதவலாம். இந்தக் கேள்விகள் குழந்தைகளுக்கு சுய-விழிப்புணர்வு, நேர்மறையான சுய-மதிப்பீடு மற்றும் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் திறன் போன்ற முக்கியமான திறன்களை வளர்க்க உதவும். எனவே, தினசரி உங்கள் குழந்தைகளிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டு அவர்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைய உதவுங்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com