மற்றவருக்காக இல்லாவிட்டாலும் செய்யும் வேலைக்கு உண்மையாக இருங்கள்!

Be true to the work you do, even if it's not for others!
Be true to the work you do, even if it's not for others!
Published on

ணிபுரியும் இடங்களில் மட்டுமல்ல, வீட்டில் என்றாலும், சுற்றுப்புறங்களில் என்றாலும் நாம் திருப்தியாக ஒரு வேலை செய்தால் அதில் கிடைக்கும் வெற்றியும் திருப்தியும் மிகப்பெரியது. ஒரு வேலையை மன நிறைவோடு செய்ய வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.வெற்றிகள் உங்களை அணிவகுத்து வரும். மற்றவர்களுக்கு உண்மையாக இருக்கிறோமோ இல்லையோ, நாம் செய்யும் வேலைக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

ஒரு கோயிலில் கல் தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கல் தச்சர் ஒருவர் சிலை ஒன்றை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரது அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்த அந்த இரு சிலைகளைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” எனக் கேட்டார்.

அதற்கு கல் தச்சர், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால், முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்”’ என்றார்.

அந்த வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டு, “எனது கண்ணுக்கு எந்த சேதமும் தெரியவில்லையே அய்யா” என்றார்.

தனது வேலையில் முழு கவனத்துடன் இருந்த அந்த கல் தச்சர் சொன்னார், “அந்த சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது” என்றார்.

அதற்கு அந்த வழிப்போக்கர், “இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்க இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஐம்பது அடி உயரத்தின் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” என்றார் தச்சர்.

ஐம்பதடி உயரத்தில் நிர்மாணிக்கப்போகிற இந்த சிலையின் மூக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்களா?” என்று கேட்டார் வழிப்போக்கர்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் திசுக்களை அழிக்கும் காய்கறிகள் எவை தெரியுமா?
Be true to the work you do, even if it's not for others!

உடனே தனது வேலையைச் சற்று நிறுத்தி விட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல் தச்சர் சொன்னார், “யார் கவனிக்கப்போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள். அய்யா, வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிறியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலை இல்லை. செய்யும் தொழிலில் பிழை ஏற்படலாம். ஆனால், பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்” என்றார் அந்த கல் தச்சர்.

உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வர வேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வர வேண்டும். அடுத்தவருக்காக வேலை செய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட, தன் மனத் திருப்திக்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அதிகம். இதுவரை எப்படி இருந்தோமோ விட்டுவிடுங்கள். இனி செய்யும் வேலையை முழு திருப்தியுடன் செய்யுங்களேன். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com