
1. ஆரஞ்சு தோல் பயன்பாடு: ஆரஞ்சு தோல்களை வெயிலில் காயவைத்து, வெந்நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் உடல் மிகவும் fresh ஆக இருக்கும். அல்லது பவுடராக்கி வைத்துக்கொண்டு face pack ஆகவும் இதைப் பயன்படுத்தலாம்.
2. Flaskகளின் பாதுகாப்பு: Flaskகளை பயன்பாடு முடிந்ததும் நன்றாக சுத்தம் செய்து உலர்த்திய பின், அதில் ஒரு news paper சுருட்டி உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும். இதனால் கெட்ட வாடை வராமல் இருக்கும்.
3. இட்லி, உப்புமாவை உதிரியாக செய்ய: இட்லி, உப்புமா தாளிக்கும்போது, இட்லிகளை அரை மணி நேரம் முன்பே fridgeல் வைத்து, பிறகு எடுத்து உப்புமா செய்தால் உதிரியாக வரும்.
4. பச்சை வேர்க்கடலை: பச்சை வேர்க்கடலையை அரை உப்பில் வேக வைத்து, சிறிது மிளகுத்தூள் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மேலும், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
5. அடை மாவு: அடைக்கு மாவு அரைக்கும்போது, ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து அரைத்தால் சுவையாக வரும்.
6. பாத்ரூம் சுத்தம்: பாத்ரூமில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீருடன் சிறிது floor cleaner மற்றும் dish wash liquid கலந்து வைத்து, அதை spray செய்து கழுவினால், டைல்ஸில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கி, வாடை இல்லாமல் இருக்கும்.
7. பல் துலக்கும் பிரஷ்கள்: நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ்களை வாங்கும்போது, அதன் இழைகள் மென்மையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
8. புதிய பிரஷ்கள் உபயோகம்: Hotelகளில் தரப்படும் travel kitல் உள்ள புதிய பிரஷ்களை ஒன்று அல்லது இரண்டு எடுத்து, பூஜை அறையில் வைத்துக்கொண்டால், புகைப்பட framesஐ சுத்தம் செய்ய உதவும். மேலும். சமையலறையில் பாத்திரங்கள் துலக்கும்போது, தட்டுகளின் விளிம்புகள் மற்றும் மிக்ஸி ஜாரின் உட்புறங்களில் உள்ள அழுக்குகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.
9. பழைய ஹாட் பாக்ஸ்: பழைய ஹாட் பாக்ஸ்களை தூர எறியாமல், சப்பாத்தி மாவு பிசையவும், காய்கறிகள் கழுவி எடுத்து வைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனுடன் சிறிது கோகோ ஃபீட் மற்றும் மண் கலந்து, புதினா மற்றும் கொத்தமல்லி போன்றவை வளர்க்கவும் உபயோகிக்கலாம்.
10. சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ்: சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களை தோல் உரித்து, அதன் சுளைகளை கொட்டை நீக்கி மிக்ஸியில் juicer jarல் போட்டு ஜூஸ் தயாரித்தால், கைகளால் பிழிவதை விட அதிக அளவில் ஜூஸ் கிடைக்கும்.