மனிதனின் உடல் இயக்கத்திற்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒரு உணவு பொருள் அது முட்டைதான்.
முட்டை என்பது உயர்தர புரதம் அத்தியாவசிய கொழுப்புகள் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்டது.
தசைகளின் இயக்கத்திற்கு, மூளையின் செயல்பாட்டிற்கு கண்களின் பார்வைக்கு, இதயத்தில் சீரான இயக்கத்திற்கு என்று ஒட்டுமொத்த உடலின் சீரான செயல்பாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் முட்டையில் உள்ளது.
தினமும் ஒரு முட்டை உட்கொள்ளும்போது சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பல உடல் பாதிப்புகள் தடுக்கப்படும்.
கால்சியம் வைட்டமின் ஏ பி 1 தயா மின் வைட்டமின் பி2 என்னும் ரிபோப்ளின் குரோமியம் வைட்டமின் பி 5எனும் பாந்தோயோனிக் பொட்டாசியம் உள்பட பல்வேறு சத்துக்கள் முட்டையில் உள்ளன.
முட்டையில் உள்ள வெள்ளை கருவையும் சிறிது கடலை மாவையும் ஒன்றாக சேர்த்து பசை போல் செய்து முகத்திலும் கழுத்திலும் நன்றாக தடவி சிறிது நேரம் ஊறிய பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் வாடிய தோல் நாளடைவில் புது மெருகு பெறும்.
எண்ணெய் பசை இல்லாமல் உலர்ந்த முகமுடையவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அத்துடன் பாலாடையையும் பன்னீரையும் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் நன்றாக தடவி சிறிது நேரம் ஊறிய பின் முகத்தை இளஞ்சூடான வெந்நீரில் கழுவினால் தோல் பளபளப்பாக இருக்கும்.
முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள் முதலில் மஞ்சள் கருவை முகத்திலும் கழுத்திலும் தடவி ஊறிய பின் வெள்ளை கருவுடன் சிறிது கிளிசரின் பன்னீர் ஆகிவை கலந்து முகத்திலும் கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊறியபின் பச்சை தண்ணீரால் முகத்தை கழுவினால் நாளடைவில் சுருக்கம் மறைந்து விடும்.
பாதாம் பருப்புகளை தோல் உரித்து நன்றாக அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவையும் சில சொட்டு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தை அலம்பினால் முகத்தில் உள்ள கரும்புள்ளி செம்புள்ளி மறைந்து விடும்.
முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்று தலைமுடி கருமையாக அடர்த்தியாக வளரும்.
பொடுகு விழுந்து இருந்தால் சிலருக்கு அரிப்பு ஏற்படும், அவர்கள் முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் பொடுகு மறைந்து விடும்.
பிறந்த குழந்தைகளுக்கு முட்டையின் வெள்ளை கருவை தேய்த்து குளிக்க வைத்தால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காது, குழந்தையின் நிறமும் பொன்னிறமாக இருக்கும்.