வீட்டில் தேன்கூடு அமைவது அதிர்ஷ்டமா? வாஸ்து சொல்லும் உண்மை!

வீட்டில் தேன்கூடு இருந்தால் என்ன நடக்கும், எது நல்லது என்பதை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.
தேன்கூடு வாஸ்து - Bee Hive Vastu
தேன்கூடு வாஸ்து - Bee Hive VastuImage credit - Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தேன்கூடு வாஸ்து:

தேனீக்கள் கடின உழைப்பின் சின்னமாக கருதப்படுகின்றன; அவை தோட்டம், மரங்கள், பால்கனி போன்ற வெளிப்பகுதிகளில் கூடு கட்டினால் பொருளாதாரம் உயரும், தொழில் வளர்ச்சி, சுப நிகழ்வுகள், நல்ல செய்திகள் வரும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் வீட்டின் உள்பகுதிகளில் கூடு கட்டினால் வாஸ்து தோஷம், மனக்கசப்பு, வறுமை, பாதுகாப்பு ஆபத்து ஏற்படும் என்பதால், அவற்றை சேதமின்றி வெளியே மாற்றுவது அவசியம்.

தேன்கூடு என்பது தேனீக்கள் தங்கள் தேனை சேமிக்கவும், குட்டிகளை பாதுகாக்கவும் மெழுகினால் உருவாக்கும் அறுகோண வடிவிலான ஒரு இயற்கை அமைப்பாகும். தேனீக்கள் தமது உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் மெழுகினை உற்பத்தி செய்து இந்த அறுகோணக் கூடுகளை கட்டுகின்றன.

இதில் தூய தேன் சேமிக்கப்படுகிறது மற்றும் தேனீக்களின் முட்டைகளும், குட்டிகளும் பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன. தேன்கூட்டின் மேல் பகுதியில் பெரும்பாலும் தேனும், கீழ் பகுதியில் முட்டைகள் மற்றும் புழுக்களும் (அடைகாக்கும் பகுதி) பராமரிக்கப் படுகின்றன.

சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்துபடி, வீட்டுத்தோட்டம் அல்லது வெளிப்பகுதியில் தேனீ கூடு கட்டுவது நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் தரும்; ஆனால் வீட்டிற்குள் கூடு கட்டுவது வாஸ்து தோஷத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும். வீட்டில் தேனீ கூடு கட்டுவது ஆன்மீக ரீதியில் நன்மை மற்றும் ஐஸ்வர்யத்தைக் குறிப்பதாக நம்பப்பட்டாலும், பாதுகாப்பு கருதி அவற்றை வீட்டிற்குள் இருக்க அனுமதிக்கத் தேவையில்லை.

சாஸ்திர ரீதியாக:

தேனீக்கள் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவை. இவை வீட்டில் கூடு கட்டுவது தனவரவு, ஐஸ்வர்யம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பதன் அறிகுறியாக ஆன்மீகத்தில் பார்க்கப்படுகிறது. தேனீக்கள் வசிக்கும் இடம் நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும், சுறுப்பான சூழலாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தேன்கூடு வாஸ்து - Bee Hive Vastu
தேன்கூடு வாஸ்து - Bee Hive VastuImage credit - Gemini

தேனீக்கள் தேனை சேகரிப்பதுபோல வீட்டில் செல்வம் மற்றும் வளம் பெருகும் என்பதற்கான நேர்மறையான அறிகுறியாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. தேனீக்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரங்களில் கூடு கட்டினால் பொருளாதாரம் உயரும் என்றும், பணவரவு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல புறா தங்குதா.. அப்போ உங்களுக்கு அடிக்க போகுது பெரிய ஜாக்பாட்!
தேன்கூடு வாஸ்து - Bee Hive Vastu

தேனீக்கள் நல்ல காற்றோட்டமும் அமைதியான சூழலும் உள்ள இடங்களில்தான் கூடு கட்டும். எனவே நம் வீட்டுத் தோட்டத்தில் தேனீக்கள் கூடு கட்டினால் வீட்டின் சூழல் அமைதியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கும் என்றும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதுடன் விரைவில் நல்ல செய்திகள், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும் என்பதன் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

சாஸ்திரப்படி, இவை சனி பகவானின் காரகத்துவம் பெற்றவை. தோட்டம் அல்லது பால்கனி போன்ற வெளிப் பகுதிகளில் தேனீ கூடு கட்டினால், குடும்பத்தில் செல்வ செழிப்பும், தொழில் வளர்ச்சியும், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

வாஸ்து மற்றும் நடைமுறை சாஸ்திரம்:

தேனீக்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது மரங்களில் கூடு கட்டுவது மிகவும் நல்லது. ஆனால் அவை வாழ்க்கை நடத்தும் வீட்டிற்குள் (ஹால், அறை போன்ற பகுதிகள்) கூடு கட்டுவது நல்லதல்ல. வாஸ்து சாஸ்திரங்களின்படி, தேனீக்கள் சமையலறை, பூஜை அறை அல்லது படுக்கையறை போன்ற வீட்டின் உள்பகுதியில் கூடு கட்டுவது நல்லதல்ல. இது குடும்ப உறுப்பினர்கள் இடையே மனக்கசப்பு, பண விரயம் அல்லது வறுமையை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது.

இது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை. தேனீக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கொட்டக்கூடும் என்பதால் ஆபத்தை விளைவிக்கலாம். எனவே தேனீக்கள் வீட்டுக்குள் இருந்தால் தேனீக்களை அழிக்காமல், பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் அடிக்காமல், அவற்றுக்கு எந்தவித தீங்கும் செய்யாமல், புகையை காட்டியோ அல்லது உரிய பாதுகாப்புடன் வெளியேயோ அல்லது தோட்டப்பகுதிக்கு அருகிலோ அப்புறப்படுத்துவது நல்லது. இதற்கு தொழில்முறை தேனீ வளர்ப்பவர்கள் அல்லது மீட்பவர்களை அழைத்து கூட்டை பத்திரமாக அப்புறப்படுத்துவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல அடிக்கடி சண்டை வருதா... அப்போ இந்த இலையை வச்சு இப்படி செய்யுங்க!
தேன்கூடு வாஸ்து - Bee Hive Vastu
logo
Kalki Online
kalkionline.com