மைக்ரோவேவ் அடுப்பின் பயன்களும் பயன்படுத்தும் வழிகளும்!

Benefits of a microwave oven
Benefits of a microwave oven
Published on

மைக்ரோவேவ் அடுப்புகள் தற்போது பல வீடுகளில் பிரதான இடம் பிடித்துள்ளன. அவை உணவை விரைவில் தயாரிக்க உதவுகிறது. மேலும், உணவு வகைகளை சூடுபடுத்துவதற்கு ஏற்றது. மைக்ரோவேவ் அடுப்பின் பயன்களையும் அவற்றை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மைக்ரோவேவ் அடுப்புகளின் பயன்பாடுகள்

மைக்ரோவேவ் அவன்கள் சூடுபடுத்துவதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. உணவை சூடாக்கும்போது அவற்றின் சுவை மாறாமல் இருப்பது இதன் சிறப்பம்சம். காய்கறிகள், அரிசி, பாஸ்தா நூடுல்ஸ் போன்ற உடனடி உணவுகளையும் இவற்றில் சமைக்க முடியும்.

கேக்குகள், குக்கிகள் மற்றும் ரொட்டி போன்ற பேக்கிங் செயல்பாடுகளை இவற்றில் செய்ய முடியும். காய்கறிகள், மீன் மற்றும் பிற உணவுகளை நீராவியில் வேக வைத்து அவற்றின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையை பாதுகாக்க முடியும்.

மைக்ரோவேவ் அடுப்புகள் சிட்ரஸ் பழங்களை ஜூஸாக மாற்ற உதவும். அழகு சாதனப் பொருட்களை சூடாக்கும். இதில் பூண்டை வறுக்கலாம், தேனை படிகமாக்கலாம்.

உறைந்த நிலையில் இருக்கும் இறைச்சி வகைகளை மிக விரைவாக சமைக்க உதவுகின்றன. மேலும், பாப்கான் செய்வதற்கும் ஏற்றது. மைக்ரோவேவ் கொள்கலனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முட்டைகளையும் இவற்றில் வேக வைக்கலாம். ஆனால், சிறிது எச்சரிக்கை தேவை.

தேநீர், காபி, சூடான சாக்லேட் பானங்கள், பால் போன்ற திரவங்களை சூடாக்க பயன்படுகிறது. உடனடி ஓட்ஸ் போன்ற உணவுகளை தயாரிக்கவும் பயன்படுகிறது.

சமைக்கும்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள்

1. மைக்ரோவேவ் அவனில் சமைக்கும்போது மிகவும் பாதுகாப்பான கொள்கலனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கண்ணாடிக் கொள்கலன்கள் ஏற்றவை. மேலும், பீங்கான் கொள்கலன்ளும் சிறந்தவையே. ஆனால், மெட்டாலிக் பெயிண்ட் அல்லது ஃபினிஷ் உள்ளவற்றை தவிர்க்க வேண்டும்.

2. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கொள்கலன்களைப் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிவிசி மற்றும் சில வகையான பிளாஸ்டிக்குகள் சூடாகும்போது ரசாயனங்கள் உருக வழி உண்டு. எனவே, மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான பிளாஸ்டிக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. சிலிக்கான் பாத்திரங்கள் பயன்படுத்த ஏற்றவை. சில காகிதத் தட்டுகள் மற்றும் உணவை வேக வைக்க அல்லது மூடுவதற்கு காகிதத் தோல்களை பயன்படுத்தலாம்.

தவிர்க்க வேண்டிய பாத்திரங்கள் மற்றும் செய்முறைகள்

1. உலோகக் கொள்கலன்கள் மற்றும் பாத்திரங்களைத் தவிர்க்க வேண்டும். அலுமினியத் தகடுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை தீப்பொறிகளை உண்டாக்கி விபத்தை ஏற்படுத்தி விடும்.

2. சமைக்கும்போது மூடி இல்லாமல் சமைக்கக் கூடாது. ஏனென்றால் இது உணவு சிதறுவதற்கு வழிவகுக்கும். முட்டைகளை சமைக்கும்போது அவை வெடிக்க வாய்ப்புண்டு. எனவே, பாதுகாப்பான கொள்கலனில் மூடியுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

3. திரவங்களை சூடாக்கும்போது அதிக வெப்பமடைவதை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதைத் தடுக்க ஒரு மரக்கரண்டி அல்லது பாதுகாப்பான பொருளை கொள்கலனில் வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பருவநிலை மாற்ற தொண்டை பிரச்னைகள் குணமாக எளிய வழிகள்!
Benefits of a microwave oven

4. தோலுடன் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தக் கூடாது உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றை மைக்ரோவேவ் அவனில் சமைக்கக் கூடாது. ஏனென்றால் அவற்றில் உள்ள நீராவியின் காரணமாக வெடிக்க வாய்ப்பு உண்டு. ரொட்டி அல்லது பீட்சா போன்ற உணவுகள் இவற்றில் சமைக்க ஏற்றதல்ல. அதற்கு டோஸ்டர்களைப் பயன்படுத்த வேண்டும்.

மைக்ரோவேவில் உள்ள வென்ட்டுகள் சரியான காற்றோட்டத்தை அனுமதிக்கும் வகையில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். சில வண்ண அல்லது அலங்கார மட்பாண்டங்கள் உலோக அடிப்படையில் ஆன மெருகூட்டல் பூச்சுக்களைக் கொண்டுள்ளன. எனவே, இவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com