ஒரு கைப்பிடி உலர் திராட்சையில் இவ்வளவு நன்மைகளா?

உலர் திராட்சை
உலர் திராட்சை

ணவுப்பொருளை பொறுத்தவரை ஒரு சில வகைகள் உலர்ந்த பிறகு விஷமாக மாறிவிடும். ஒரு சில உணவுப்பொருள் மட்டுமே உலர்ந்த பிறகும் அதீத நன்மைகளைக் கொடுக்கும். அப்படி எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும் ஒரு பழம்தான் உலர் திராட்சை.

உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான். சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனுக்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை பயன்படுத்தப்பட்டது. தற்போது உலர் திராட்சைகள் விரைவான ஆற்றலை அதிகரிக்க ஸ்மூத்திஸ், ஓட்ஸ் அல்லது யோகர்ட்டில் சேர்க்கப்படுகின்றன.

உலர் திராட்சை பெரும்பாலும் கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உலர் திராட்சை தற்போது அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. அதனைச் சாப்பிடுவதால் பல எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அதுவும் குறிப்பாக உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

உடல் எடையைக் குறைக்கும்: கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் அதனை யார் வேண்டுமானாலும் தொடர்ந்து சாப்பிடலாம். மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளும் குறையும்.

செரிமான கோளாறை தீர்க்கும்: மலச்சிக்கல் இருப்பவர்கள் உலர் திராட்சையை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் அதை நன்கு மசித்து சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

இரத்த அணுக்கள் அதிகரிக்கும்: இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும். இதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.

இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கும்: உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.

புற்றுநோய்: உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும், புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் திராட்சைகள் உதவுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com