
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பழத்தில் அதிக நன்மைகள் இருப்பதாக மருத்துவம் கூறுகிறது. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. செரிமான கோளாறு, மூல நோய் என பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. எலுமிச்சம் பழம் வாந்தி, வாய் குமட்டல், மயக்கம், நீர்வேட்கை, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது. தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி தேய்த்தால் விஷம் முறியும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் எலுமிச்சை சாறை மட்டும் பயன்படுத்தி விட்டு எத்தனை கிலோவாக இருந்தாலும், எலுமிச்சை தோலை நாம் கீழே தான் போடுகிறோம். ஆனால் அதில் உள்ள நன்மைகளை தெரிந்து கொண்டால் நீங்கள் அதை தூக்கி எறிய மாட்டீர்கள்.
எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
என்னதான் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி இருந்தாலும், அதனின் தோலிலும் அந்த சத்து அதிகமாகவுள்ளது. மேலும், எலுமிச்சை தோல் பயோஃப்ளேவனாய்டுகளால் நிரம்பியுள்ளது. இது எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், சளி பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
செரிமான பிரச்சனை:
எலுமிச்சை தோலில் உள்ள நார்ச்சத்து மற்றும் எண்ணெய்கள் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. அதிக உணவுக்கு பிறகு ஏற்படும் வீக்கம், அஜீரணத்திற்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
சரும ஆரோக்கியம்:
இதன் ஆக்ஸிஜினேற்ற எதிர்ப்புகள் மற்றும் வைட்டமின் சி உள்ளடக்கம் உங்கள் உணவில் தொடர்ந்து உட்கொள்ளும் போது, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.
எப்படி பயன்படுத்தலாம்?
ஸ்மூத்திகளுக்கு சுவை கூட்டும்:
எலுமிச்சை தோல் பொதுவாக கசப்பாக இருக்கும் என பலரும் அதை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் உங்கள் ஸ்மூத்தியில் இதை சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாக கிடைக்கும்.
காய்கறிகள் மேல் தூவலாம்:
பொதுவாக பொரியல்களுக்கு தேங்காய் பூ சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். அதே போல் காய்கறிகளுக்கு இந்த லெமன் தோலை துருவி சேர்த்தால் சுவை கிடைக்கும்.
தேநீரில் சுவை கூட்டும்:
தேநீரில் லெமன் தோலை போட்டு கொதிக்க வைப்பது கூடுதல் சுவை கொடுக்கும்.
இப்படி இந்த தோலை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய பயன்களை பெறலாம்.