தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தின் பலன்!

Benefits of onion soaked in honey
Benefits of onion soaked in honey

ணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவக் குறிப்புகள் உண்டு. ஊட்டச்சத்து நிபுணர்களும் உணவில் சின்ன வெங்காயம் சேர்க்க பரிந்துரைப்பர். அந்த வகையில் சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் அதிக நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.

இரத்தத்தைச் சுத்திகரிக்கும்: சின்ன வெங்காயம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது.

செரிமானத்தைத் தூண்டும்: சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆற்றல் கூடுகிறது. தேன், சின்ன வெங்காயம் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் செரிமான அமைப்பிற்கு கூடுதல் பலம் கிடைக்கிறது.

நச்சு நீக்கி: காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்து சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படுகிறது.

தூக்கமின்மை குறைபாடு நீங்கும்: தினமும் நீங்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில், தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்களுக்குக் கைகொடுக்கும். தினம் ஒன்று சாப்பிட்டு பாருங்கள் பலனை நீங்களே உணர்வீர்கள்.

நெஞ்சு சளியை போக்க உதவும்: எப்போதுமே நெஞ்சு சளியை சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது நுரையீரலுக்குப் பாதிப்பை உண்டாக்கும். இதற்கு தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்களுக்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
இரத்த நாளங்களில் படிந்த கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் இயற்கை உணவுகள்!
Benefits of onion soaked in honey

தொப்பையை குறைக்க உதவும்: உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் சிறந்தது. அப்படியெனில் தொப்பையைக் குறைப்பதற்கு தேனில் ஊற வைத்து சின்ன வெங்காயம் உதவியாக இருக்கும்.

சின்ன வெங்காயத்தை எப்படி தேனில் ஊற வைப்பது?: சின்ன வெங்காயங்களை தோல் உரித்து அதை ஒரு டப்பாவில் போட்டு மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றி இரண்டு நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். பின்னர் அதை தேனுடன் ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com