கணவன் - மனைவி ஒற்றுமைக்கு ஹாலில் வைக்க வேண்டிய 'சிறப்பு' படம் எது தெரியுமா?

living room vastu photos
living room vastu photos
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

வீட்டின் வரவேற்பு அறையில் வீட்டிற்குள் நுழைபவர்களை கவரும் வகையில் அலங்கார பொருட்களையும், சிலர் சுவாமி படங்களையும்  வைத்திருப்பர். அந்த வகையில் வரவேற்பறையில் வைப்பதற்கு உகந்த படங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்

ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக படத்தை ஹாலில் வைத்தால் குடும்ப ஒற்றுமை, அமைதி, தலைமை பண்பு, தைரியம் மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரித்து ராமரின் பாதுகாப்பு கிடைக்கும்.

மீனாட்சி திருக்கல்யாணம்

மீனாட்சி திருக்கல்யாண படம் வைப்பதால் திருமண தடை நீங்கி, கணவன், மனைவி ஒற்றுமை மேம்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை உபதேசம்

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்யும் படத்தை வரவேற்பு அறையில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைக்க ஞானம், கடமை உணர்வு மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரித்து செல்வ செழிப்பு உண்டாக்கும்.

தக்ஷிணாமூர்த்தி தனது சீடர்களுடன்

தட்சிணாமூர்த்தி தனது சீடர்களுடன் இருக்கும் படத்தை ஹாலில் தெற்கு நோக்கி வைக்க ஞானம், கல்வி மற்றும் குரு அருள் கிடைத்து வீட்டில் மங்களம் உண்டாகும் 

ஸ்ரீ பிரம்ம தேவர் சரஸ்வதி சமேத படம்

ஸ்ரீ பிரம்ம தேவர் சரஸ்வதி சமேத படத்தை வாழ்க்கை அறையில் வைப்பதன் மூலம் கல்வி, ஞானம், படைப்பாற்றல் மற்றும் கல்வித்திறன் அதிகரிக்கும்

அஷ்டலட்சுமி தேவியர் இணைந்திருக்கும் படம் அஷ்டலட்சுமிகள் இணைந்திருக்கும் படத்தை வைப்பதால் எதிர்மறை ஆற்றல் நீங்கி மகாலட்சுமியின் யோகத்தால் செல்வமும், மகிழ்ச்சியும் தெய்வீக அருளும் பெருகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டின் வாஸ்து தோஷம் நீக்கும் கல் உப்பு: எந்த மூலையில் வைத்தால் என்ன பலன்?
living room vastu photos

அனுமன் நெஞ்சை பிளந்து ஸ்ரீ ராமர்-சீதா தேவியரின் உருவத்தை காண்பிக்கும் படம். அனுமன் நெஞ்சை பிளந்து ஸ்ரீராமர் சீதாதேவி உருவத்தை காண்பிக்கும் இந்த தெய்வக் காட்சி பக்தியின் சின்னமாக இருப்பதால் வரவேற்பு அறையில் வைப்பதற்கு உகந்த மிகச் சிறப்பான படமாகும்.

ஸ்ரீ கிருஷ்ணர் - குசேலனை கட்டி தழுவி நிற்கும் படம் ஸ்ரீ கிருஷ்ணர் குசேலனை கட்டி தழுவி நிற்கும் படத்தை வீட்டில் வைப்பதன் மூலம் ஐஸ்வர்யம் பெருகி, மன நிறைவு ஏற்பட்டு உறவினர்களுடன் நட்பு மேம்படும்.

பதினெண் சித்தர்கள் சூழ நடுவில் முருகன் நின்றிருக்கும் படம் பதினெண் சித்தர்கள் சூழ நடுவில் முருகன் நின்றிருக்கும் படத்தை வரவேற்பு அறையில் வைப்பதன் மூலம் மன அமைதி ஏற்பட்டு, நோய்கள் நீங்கி, ஞானம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

குபேரன் செல்வ வடிவங்களுடன் இருக்கும் படம் செல்வத்தின் அதிபதியாக இருக்கும் குபேரன் செல்வ வடிவங்களுடன் இருக்கும் படத்தை வீட்டின் வரவேற்பு அறையில் வடக்கு திசையில் வைக்க வீட்டின் நிதிநிலை மேம்பட்டு செல்வவளம் பெருகி நேர்மறை ஆற்றலை ஈர்த்து பொருளாதார நிலை மேம்படுவதாக நம்பப்படுகிறது.

மேற்கூறிய படங்களை வரவேற்பு அறையில் வைப்பதன் மூலம நம்பிக்கை தைரியம் சுபிட்சம் அன்பு ஐஸ்வர்யம் அறிவு கிடைக்கும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com