வீட்டின் வாஸ்து தோஷம் நீக்கும் கல் உப்பு: எந்த மூலையில் வைத்தால் என்ன பலன்?

vastu-tips
vastu-tips
Updated on

ன்றாட வாழ்வில் எளிதாக கிடைக்கும் கல் உப்பு வாஸ்து சாஸ்திரத்தில் பெரும் முக்கிய இடத்தை பெறுகிறது. வீட்டின் அமைப்பு, திசைகள், பொருட்கள் எதிர்மறை ஆற்றலை விலக்கச் செய்ய இந்த வாஸ்து வழிகாட்டுகிறது.

கல் உப்பு ஒரு சட்டி வாய்ந்த சுத்திகரிப்பு பொருளாக கருதப்படுகிறது. வாஸ்துவில் உப்பு ஒரு சக்தி வாய்ந்த கருவி. கெட்ட அதிர்வுகளைப் போக்கவும், நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், உங்கள் குடும்பத்தை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வைத்திருக்க உப்பு உதவுகிறது. இப்படி எங்கெல்லாம் வைக்கலாம் என்பதை பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரத்தில் உப்பு என்பது கட்டிடத்தில் எதிர்ப்பு சக்தியை நீக்கும் ஒரு மந்திர மூலப்பொருள். அதை சரியான மூலைகளில் வைப்பது, அதிக பணத்தை ஈர்க்கவும், அமைதியாக இருக்கவும், உதவும். உங்கள் வீட்டில் உப்பை பயன்படுத்துவது நல்ல காற்றை தெளிவுபடுத்தவும், உங்கள் இடத்தை புத்துணர்ச்சியுடனும், மிகவும் நேர்மறையாகவும் உணரவைக்கும் ஒரு எளிய வழியாகும்.

வீட்டில் நுழைவாயில்

வீட்டின் பிரதான நுழைவாயிலில் உப்பை கண்ணாடி பாத்திரம் மண் பாத்திரத்தில் வைப்பதன் மூலம் கெட்ட சக்திகளை வெளியே வைத்திருக்கவும், ஒரு கேடயம் போல செயல்படுகிறது.

இதனால் எதிர்மறை அதிர்வுகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுத்து உள்ளே இருக்கும் சக்தியை மிகவும் சுத்தமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்

குளிக்கும் அறை மூலை

குளிக்கும் அறைகள் பெரும்பாலும் வீட்டின் மிகப்பெரிய ஆற்றைலை சேகரிக்கும் இடமாகும். அதனால் மூலைகளில் உப்பை வைப்பதன் மூலம் அந்த வாஸ்து தோஷத்தை சரி செய்யலாம்.

அதற்கு ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் உப்பை வைப்பதால் ஈரமான எதிர்மறையான அதிர்வை உறிஞ்சி கொள்வதால் அதிக சுமையை ஏற்படுத்தி உங்கள் மீதமுள்ள வாழ்க்கை இடத்தை மிகவும் இலகுவாகவும், துடிப்பாகவும் உணர வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
கேசரோலில் சப்பாத்தி ஏன் ஈரமாகிறது? சூடாகவும் 'டிரை' ஆகவும் வைத்திருக்க இதோ சிறந்த வழிகள்!
vastu-tips

வரவேற்பறை

வரவேற்பு அறையில் மையத்தில் கல் உப்பு வைப்பதன் மூலம், குடும்ப அமைதி காக்கவும் குடும்பத்தினர் அமர்ந்திருக்கும் இந்த இடத்தில் மனஅழுத்தத்தை குறைக்கவும் ,சண்டைகளை நிறுத்தவும் உதவுகிறது. இது உங்கள் வீட்டில் உள்ளோரின் இதயத்தை மிகவும் அமைதியாகவும் இருக்கவும் வைக்கிறது.

வீட்டின் வட கிழக்கு மூலை

உங்க வீட்டிற்குள் வட கிழக்கு மூலையில் கல் உப்பை வைப்பதன் மூலம் செல்வம் வருவதை தடுக்கும் எந்த தடைகளையும் நீக்கும். இது உங்கள் சேமிப்பு மற்றும் நிதி வரும்அதிர்ஷ்டத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும்.

படுக்கையறை

படுக்கை அறையில் நன்றாக தூங்க விரும்பினால் கட்டிலின் அடியில் கிண்ணத்தில் சிறிது கல் உப்பை வைத்தால் கெட்ட கனவுகள் வராமல் தடுக்கும் சக்தியும், ஒரு நாள் புத்துணர்ச்சியுடன், சோர்வு இல்லாமல் எழுந்திருப்பதை க உணரலாம்.

சமையல் அலமாரியில்

கல் உப்பை வைப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சமைக்கும் உணவு நல்ல ஆற்றலால் நிறைந்து யும் உறுதி செய்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சூழ்நிலையில் பராமரிக்க ஒரு கண்ணாடி ஜாடியில் உப்பை வைக்கலாம்.

ஜன்னல் அருகே

வீட்டில் ஜன்னல் ஓரங்களில் உப்பை வைப்பதால் அறைகளுக்குள் வீசும் காற்றை சுத்தம் செய்ய உதவுகிறது .வெளியில் இருந்து வரும் தூசி, கெட்ட அதிர்வுகளை தள்ளி உங்கள் வீட்டில் ஒரு நல்ல ஆற்றல் மட்டுமே வருவதை உறுதி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
சமையலறை இனி ‘ஸ்மார்ட்’ ஆகும்! இடத்தை மிச்சப்படுத்தும் 10 சூப்பர் அலமாரி டிசைன்கள்!
vastu-tips

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டில் வாரம் ஒரு முறை தரையை சுத்தம் செய்யும்போது தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து தரைகளில் தேங்கிய அழுக்கை சுத்தம் செய்யவும், எதிர்மறை ஆற்றலையும், வீட்டை புத்தம் புதிதாக்கவும் இந்த உப்பு உதவுகிறது.

அலுவலகத்தில்

அலுவலகத்திலும் மேஜை அடியில் சிறிய ஒரு கிண்ணத்தில் உப்பு வைத்திருந்தால் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்தலாம். இதனால் வரும்மன அழுத்தத்தை நீக்கவும் தெளிவாக சிந்திக்கவும் உப்பு உதவும்.

logo
Kalki Online
kalkionline.com