கத்தி இல்லாம தேங்காய் எடுக்கணுமா... இந்த சீக்ரெட் ட்ரிக் உடனே ட்ரை பண்ணுங்க!

சமையல் வேலையை மிகவும் சுலபமாக்கி உணவின் சுவையை அதிகரிக்க உதவும் 7 அட்டகாசமான சமையலறை குறிப்புகள் மற்றும் ரகசிய தந்திரங்கள்.
Cooking hacks சமையலறை குறிப்புகள்
Cooking hacks சமையலறை குறிப்புகள்
Updated on

சமையலைப் பொறுத்தவரை சில நாட்களுக்குச் மிக அருமையாக இருக்கும், சில நாட்களிலோ நாம் செய்த உணவை நமக்கே சாப்பிடப் பிடிக்காது. குறிப்பாகப் புதிதாகச் சமையல் கற்றுக்கொள்ளும் பேச்சுலர்கள், புதுமணத் தம்பதிகளுக்குச் சமையலறை என்பது பல நேரங்களில் ஒரு போர்க்களமாகவே மாறிவிடும். 

ஆனால் ஒரு சில சிறிய தந்திரங்களை நாம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டால், சமையல் வேலையை மிகவும் சுலபமாக முடித்துவிடலாம். உங்களுடைய சமையலறையை ஒரு மாஸ்டர் செஃப் கிச்சன் போல மாற்றும் 7 அட்டகாசமான சமையலறைக் குறிப்புகள் பற்றி இப்போது பார்ப்போம்.

குழம்பைச் சுவையாக்கும் சமையலறை குறிப்புகள்!

சில சமயங்களில் நாம் ஆசையாக வைக்கும் சாம்பாரில் கைத்தவறிப் புளியை அதிகமாக ஊற்றிவிடுவோம். அதை நினைத்துப் பதற வேண்டிய அவசியமே இல்லை. ஒரு சிறிய வெல்லக்கட்டி அல்லது சிறிது நாட்டுச் சர்க்கரையை அதில் போட்டுக் கொதிக்க வைத்தால், அந்த அதீத புளிப்புச் சுவை உடனடியாக மாயமாகிவிடும். 

அதேபோலச் சாம்பாரை இறக்கும் போது கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி மூடி வைத்தால், அதன் சுவையும் மணமும் அக்கம் பக்கத்து வீடுகளைக் கூடச் சுண்டி இழுக்கும்.

தேங்காய் மற்றும் பூண்டு உரிக்கும் சமையலறை குறிப்புகள்!

கத்தியை வைத்துத் தேங்காயைத் துருவுவது பலருக்கும் ஒரு மிகக் கடினமான வேலையாகும். உடைந்த தேங்காய் மூடியைக் குறைந்த நெருப்பில் ஒரு இரண்டு நிமிடம் காட்டிவிட்டு எடுத்தால், ஓட்டில் இருந்து தேங்காய் மிக எளிதாகத் தனியாகக் கழன்று வந்துவிடும். 

Cooking hacks சமையலறை குறிப்புகள்
Cooking hacks சமையலறை குறிப்புகள்
இதையும் படியுங்கள்:
சமையலறையில் எந்த பொருளை எங்கே வைப்பது? சீக்ரெட் டிப்ஸ் இதோ!
Cooking hacks சமையலறை குறிப்புகள்

இதேபோலப் பூண்டு உரிப்பதற்கும் ஒரு மாஸ் ட்ரிக் உள்ளது. தனித்தனியாகப் பிரித்த பூண்டுப் பற்களை வெதுவெதுப்பான நீரில் சுமார் மூன்று நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு உரிக்கத் தொடங்கினால், அதன் தோல்கள் மிகச் சுலபமாக வெளியே வந்துவிடும்.

டீ தூள் மற்றும் சாதம் தொடர்பான சமையலறை குறிப்புகள்!

டீக்கடையில் குடிப்பது போன்ற அதே சுவையான டீ நமது வீட்டிலும் கிடைக்க வேண்டும் என்றால், உங்களுடைய டீத்தூள் டப்பாவில் கொஞ்சமாக காபி தூளைக் கலந்து வையுங்கள். டீயின் நிறமும் சுவையும் செம மாஸாக இருக்கும்.

அதேபோல மீதமான சாதம் மறுநாள் காலையில் காய்ந்து போயிருந்தால், அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் சுடுநீரை ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து வடிகட்ட வேண்டும். இப்போது பார்த்தால் அந்தப் பழைய சாதம், புதிதாக வடித்த சாதம் போல ஆவி பறக்க மிகப் பிரெஷ்ஷாக மாறிவிடும்.

பிஸ்கட் மற்றும் வெண்டைக்காய் சமையலறை குறிப்புகள்!

டப்பாவில் வைக்கும் பிஸ்கட்டுகள் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, அதனுள் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் சில கிராம்புகளைப் போட்டு வைப்பது மிகவும் சிறந்தது. இது பிஸ்கட்டுகளை பல நாட்களுக்கு மொறுமொறுப்பாகவே வைத்திருக்கும்.

அதேபோல வெண்டைக்காயை நறுக்குவதற்கு முன்பு அதைக் கழுவி ஒரு சுத்தமான துணியில் பரப்பி நன்றாகக் காய வைக்க வேண்டும். ஈரம் போன பிறகு நறுக்கினால் எவ்விதப் பிசுபிசுப்பும் கட்டாயம் இருக்காது.

இதையும் படியுங்கள்:
உதட்டுக்கு மட்டும் இல்ல... வாஸ்லின் செய்யும் 10 ரகசிய வேலைகள் இதோ!
Cooking hacks சமையலறை குறிப்புகள்

சமையலில் இது போன்ற சிறு சிறு ட்ரிக்ஸ்களை நாம் சரியாகப் பயன்படுத்தினால், நமது வேலை பல மடங்கு மிச்சமாகும். உங்களுடைய சமையலறையிலும் இந்த அட்டகாசமான ஐடியாக்களை இன்றே முயற்சி செய்து பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com