பிள்ளைகளின் நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? பலன் தரும் எளிய உணவு முறைகள்!

brain-development
brain-development
Updated on

னைவருக்கும் சமச்சீரான உணவு அவசியம். அதிலும் வளர் இளம் பருவத்தினருக்கு உடலோடு, மூளை நரம்புகள், தசைகள் வலிமை பெறுவது அவசியம். உடற்பயிற்சியோடு நம் அன்றாட சமையலில் இவற்றை சேர்த்துகொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

தாமரை மலரை நீரில் போட்டு கொதிக்கவிடவும். ஆறியதும் காலை, மாலை என இரு வேளைகளில் அருந்திவர மூளை அதிக பலம் பெறும்.

தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்ய உடல், மனம் இரண்டுக்கும் மிகவும் நல்லது. தியானம், யோகா பயிற்சி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

மாதுளம்பழம் மூளைக்கு நல்ல பலம் தரும்.சோம்பை உணவில் சேர்த்துக் கொள்ள மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

வெள்ளைப் பூண்டு, வெங்காயம் உணவில் சேர்த்துக் கொள்ள மூளை நன்கு தெளிவடையும். அரைக்கீரை மூளை வளர்ச்சியையும், ஊக்குவிக்கிறது.மார்புவலியை போக்கும் வல்லமை கொண்டது.

வேப்பம் பழம் மூளைக்கு பலத்தை கொடுக்கும். சிறுகீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள நினைவாற்றல் மற்றும் அறிவுக்கூர்மை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கும்,இதயத்தின் ஆற்றலுக்கும் கொத்தமல்லிச் சாறு பருகலாம்.

பலாக்காய் மூளைக்கு வலுவையும்,உடலுக்கு வீரியத்தையும் தர வல்லது.அகத்திப்பூவை பாசிப்பயறு சேர்த்து சாப்பிட இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

வெண்டைக்காய், குப்பைமேனி இலையைப் பொடித்து பாலில் கலந்து தொடர்ச்சியாக சாப்பிட்டு வர நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் சரியாவதோடு மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

பாதாம்பருப்பு ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து குடிக்கக் கொடுக்க பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. நினைவாற்றல் வளர வல்லாரை இலையை நீரிலிட்டு பாதியானதும் ஆறவிட்டு காலையில் மட்டும் சாப்பிட்டு வரலாம்.

இதையும் படியுங்கள்:
இன்டக்ஷன் குக்டாப் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய 'அந்த' 7 விஷயங்கள் என்னென்ன?
brain-development

தயிர், தேங்காய், பாதாம்பருப்பு, மீன் உணவுகள் முட்டை பால் போன்றவை மூளையை குளிர்ச்சியாகவும், எலும்புகளை வலுவாக்கும் உதவும். கால்சியம் சத்துள்ள இவை ஞாபக மறதியை போக்க வல்லது.

பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவை அனைவராலும் எடுத்துக் கொள்ள முடியும். எனவே இவற்றை கொடுத்து வர இளம் வளர் பருவத்தினரின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

இவை யாவும் நான் வழக்கமாக வீட்டில் என் பிள்ளைகளுக்கு கொடுத்து பலன் அடைந்ததை தொகுத்து எழுதியுள்ளேன்.

logo
Kalki Online
kalkionline.com