வீட்டில் 2 கிராம்பு மற்றும் கற்பூரம் எரியுங்கள்: அதிர்ஷ்டமும் நறுமணமும் பெருகும் ரகசியம்!

கொசுக்கள், கிருமிகளை விரட்டி மன அழுத்தத்தைப் போக்கும் கற்பூரத்தின் அற்புத சக்தி!
கற்பூரம் பயன்பாடு
கற்பூரம் பயன்பாடுAI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ற்பூரம் என்பது சினமோமம் கற்போரா மரத்தின் பட்டைகளில் இருந்து பெறப்படும் இயற்கை கரிமச் சேர்மம். இந்து வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் இது, பூஜை நேரத்தில் எரிக்கும்போது எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை சூழலை உருவாக்கும் என நம்பப் படுகிறது. இயற்கை பச்சைக் கற்பூரம் சமையல், ஆயுர்வேத மருந்துகளில் பயன்படும்; செயற்கை கற்பூரம் ஆன்மீக வழிபாடு, பூச்சி விரட்டல் போன்ற பயன்பாடுகளுக்கே ஏற்றது.

கற்பூரம் (Camphor) என்பது Cinnamomum Camphora என்ற மரத்தின் பட்டைகளில் இருந்து பெறப்படும் ஒரு இயற்கை கரிமச் சேர்மம் (Terpenoid Ketone) ஆகும். கற்பூரம் என்பது இந்து மதத்தின் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறுக்க முடியாது. வீடுகளில், கோவில்களில், பூஜைகளில் என கற்பூரம் தினம் தினம் நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.

குறிப்பாக பூஜையின்போது கற்பூரத்தை எரிப்பது எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறையான சூழ்நிலையை உருவாக்குகிறது. வீட்டில் தென்கிழக்கு திசையில் கற்பூரத்தை எரிப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வ வளத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. 2 கிராம்புகளுடன் சேர்த்து அதை எரிப்பது அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

கற்பூரம் என்பது பொதுவாக கற்பூர மரத்தின் வேர் மற்றும் மரப் பட்டைகளில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் சந்தைகளில் இரண்டு வகையான கற்பூரங்கள் கிடைக்கின்றன. இயற்கை கற்பூரம் எனப்படும் பச்சைக் கற்பூரம் கற்பூர மரத்தின் பாகங்களை நீராவி வடித்தல் (Steam distillation) செய்வதன் மூலம் பெறப்படுகிறது. இது சுத்தமானது, நச்சுத் தன்மையற்றது என்பதால் சமையல், லட்டுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை கற்பூரம் என்பது வணிக ரீதியாக நாம் பயன்படுத்தும் வில்லைக் கற்பூரங்கள். இவை டர்பென்டைன் எண்ணெயிலிருந்து ரசாயன முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய் பைன் (Pine) மரங்களிலிருந்து பெறப்பட்டு, பின்னர் பல்வேறு வேதியியல் செயல்முறைகள் மூலம் கற்பூரமாக மாற்றப்படுகிறது. இது முக்கியமாக ஆன்மீக வழிபாட்டிற்கும், பூச்சிகளை விரட்டுவதற்கும் பயன்படுகிறது.

வீட்டில் கற்பூரம் வைப்பதாலோ அல்லது எரிப்பதாலோ காற்று தூய்மை அடையும். பூச்சிகள் ஒழிப்பு, நரம்பு மண்டல அமைதியைத் தருவதுடன் இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படும். இவற்றை வீட்டில் வைப்பதாலோ அல்லது எரிப்பதாலோ பல அறிவியல் பூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன.

இது ஆன்மீக நம்பிக்கைகளைத்தாண்டி சில யதார்த்தமான நன்மைகளையும் வழங்குகிறது. ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகளுடன் கற்பூரம் காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.

கற்பூரம் பயன்பாடு அறிவியல் கூறும் மாற்றங்கள்:

காற்று தூய்மை:

கற்பூரம் வேகமாக ஆவியாகி, காற்றில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கி நறுமணத்தைத் தருகிறது.

நுண்ணுயிர் அழிப்பு:

கற்பூரத்தின் வாசனைப் புகை காற்றில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன.

கற்பூரம் பயன்பாடு
கற்பூரம் பயன்பாடுAI image

பூச்சிகள் விரட்டி:

இயற்கையான பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. கற்பூரத்தின் காரமான வாசனை மற்றும் அதில் உள்ள ஆவியாகக் கூடிய வேதிப்பொருட்கள் கொசுக்கள், ஈக்கள், கரப்பான் பூச்சிகள் மற்றும் சிறு பூச்சிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து விரட்டுகிறது. ரசாயனம் கலந்த கொசுவர்த்திகளுக்குப் பதிலாக கற்பூரத்தை அறையில் வைப்பது சிறந்த மாற்று வழியென ஆய்வுகள் கூறுகின்றன.

மன அழுத்தம் குறைவு:

கற்பூரத்தின் தனித்துவமான நறுமணம் மூளையின் நரம்புகளைத் தளர்த்தி மன அமைதியைத் தர வல்லது. இதன் வாசனை மூளையில் உள்ள நரம்புகளை அமைதிப்படுத்தும் (sedative effect) நறுமணச் சிகிச்சை (aroma therapy) பண்புள்ளது. இதன் மணம் தூண்டப்படுவதால் மன அழுத்தம், கவலை மற்றும் சோர்வு நீங்கி, மனம் அமைதி பெறுவதுடன் கவனக்குவிப்பும் அதிகரிக்கிறது. அதேபோல் படுக்கை அறையில் லேசான கற்பூர வாசனையைப் பரப்புவது மனதை அமைதிப்படுத்தி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகளைத் தடுக்கிறது. நரம்புகள் தளர்வடைந்து, நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் கிடைக்க உதவுகிறது.

சுவாசப்பாதை சீரமைப்பு:

லேசான கற்பூர வாசனை மூக்கடைப்பு மற்றும் மூச்சுக்குழாய் எரிச்சலில் இருந்து தற்காலிக நிவாரணத்தை அளிக்கிறது.

பூஞ்சைத் தொற்று தடுப்பு:

காற்றில் உள்ள ஈரப்பதத்தால் உண்டாகும் பூஞ்சைக் காளான் வளர்ச்சியை இதன் ஆவி கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் காற்றில் பரவும் கிருமிகளின் அளவைக் கணிசமாக குறைத்து வீட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல அடிக்கடி சண்டை வருதா... அப்போ இந்த இலையை வச்சு இப்படி செய்யுங்க!
கற்பூரம் பயன்பாடு

நேர்மறை சூழல்:

ஆன்மீக ரீதியாக இது எதிர்மறை ஆற்றலை நீக்குவதாக கூறப்பட்டாலும், அறிவியலின்படி கற்பூரத்தின் நறுமணம் மனித உடலில் நேர்மறை ஹார்மோன்களை (Endorphins) சுரக்கச் செய்து, வீட்டின் ஒட்டுமொத்த சூழலையும், மனிதர்களின் மனநிலையையும் (mood uplifting) உடனடியாக மாற்றி அமைக்க உதவுகிறது. சுத்தமான மற்றும் நறுமணம் நிறைந்த காற்று மனிதர்களின் மனநிலையை உடனடியாகப் புத்துணர்ச்சி அடையச்செய்கிறது.

செயற்கை முறையில் ரசாயனங்கள் மூலம் தயாரிக்கப்படும் கற்பூரத்தை விட இயற்கை மரத்தில் இருந்து பெறப்படும் பச்சைக் கற்பூரம் அல்லது தூய கற்பூரத்தை பயன்படுத்துவதே உடலுக்கு நல்லது. ஆஸ்துமா அல்லது கடுமையான சுவாசக்கோளாறு உள்ளவர்கள் கற்பூரப் புகையை நேரடியாக சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும். கற்பூரத்தை குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் விழுங்கி விடாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைப்பதும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
ஜீரோ பட்ஜெட் ஹோம் டெக்கோர்: மன அழுத்தத்தைப் போக்கி வீட்டைப் பசுமையாக்கும் எளிய ரகசியம்!
கற்பூரம் பயன்பாடு

கற்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ என்று ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் கண்ணனின் செவ்வாய் உதடு கற்பூரம் போல மணக்குமா? அல்லது தாமரை மலர்போல மணக்குமா? தேன்போல தித்திக்குமா? என்று கண்ணனின் வாயோடு எப்போதும் தொடர்பில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற சங்கிடம் ஆண்டாள் வியந்து விசாரிப்பாள்.

ரசாயனப் பொருட்கள் இல்லாமல் கற்பூரத்தைக் கொண்டு இயல்பான முறையில் வீட்டைப் பூச்சிகளற்ற, துர்நாற்றமற்ற மண்டலமாக மாற்றுவதுடன், நிம்மதியான உறக்கம் மற்றும் மன அமைதியைப் பெற உடனடி தீர்வுகளைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com