டெட்ரா பேக் பால் வாங்குவது புத்திசாலித்தனம்: ஏன் தெரியுமா?

Buying Tetra Pak Milk Is Smart: Know Why
Buying Tetra Pak Milk Is Smart: Know Why

ன்றைய நவீன உலகில் டெட்ரா பேக் பால் மிகவும் நல்லது. ஏனெனில், அது ஜீரோ பாக்டீரியா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பதப்படுத்த ஃபிரிட்ஜ் தேவையில்லை. இதை ஃபிரிட்ஜில் வைக்கவும் கூடாது. ஏனெனில் இந்த 'பாக்'கின் உள்ளே காற்றே இல்லை என்பதால் அதிகக் குளிர்ச்சியினால் வெடித்து விடலாம். ஓரளவு குளிர்ச்சியில் வைக்கலாம்.

சாதாரண பாலை விட இது 'திக்'காக இருக்கும். அதிகத் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாம். மேலும், அதிகம் இதைக் காய்ச்சத் தேவையில்லை. தேவையான அளவு சூடுபடுத்திக்கொண்டாலே போதும்.

டீக்கடை வியாபாரத்துக்கு மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு இது மிகவும் ஏற்றது. மளிகைப் பொருட்கள் மாதிரி இதில் தேவையான பாக்கெட்டுகளைப் பிரித்து உபயோகிக்கலாம். மீதியை அப்படியே வைத்து விடலாம். பாக்கெட்டை கட் பண்ணிய பாக்கெட்டிலுள்ள பால் கூட பத்து மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

டெட்ரா பேக் பாலோ அல்லது பழ ரசமோ வாங்குபவர்கள் சில அம்சங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

பாக்கெட்டை வாங்கியவுடன் அதை ஆட்டிப் பார்க்க வேண்டும். உள்ளே உள்ள பொருள் ஆடக் கூடாது. அப்படிச் சத்தம் கேட்டால் அது கெட்டுப்போய்விட்டது என்று முடிவெடுத்துக் கொள்ளலாம். 'பேக்' செய்யும்போது, வண்டிகளில் கொண்டுவரும்போது மிகச் சிறிய துளை விழுவதற்கும் சாத்தியமுண்டு. அப்படித் துளை விழும்போது அதன் வழியே காற்றுப் புகுமானால் உள்ளே உள்ள பொருள் கெட்டுப்போக வாய்ப்பு உண்டு.

இதையும் படியுங்கள்:
கணவன் - மனைவிக்குள் அன்பும், காதலும் பெருக அசத்தலான டிப்ஸ்!
Buying Tetra Pak Milk Is Smart: Know Why

நிறைய பேருக்கு டெட்ரா பேக் பானத்தில் ஸ்டிராவைக் குத்தியவுடன், ஸ்ட்ரா வழியே உள்ளிருக்கும் பானம் வெளியே வழிந்துவிடும். இதற்குக் காரணம், நாம் அதன் உடல் பாகத்தில் விரல்களை வைத்திருப்போம். நாம் கொடுக்கும் சிறிய அழுத்தமும், பாக்கெட் வழியே பானம் வெளியே வர ஏதுவாகிறது. அதன் பக்கங்களில் பிடித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அதன் மூலைகளைப் பிடித்துக்கொள்வது சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com