வலிப்பு வந்தவர் கையில் இரும்புப் பொருட்களைக் கொடுக்கலாமா?

Epilepsy
Epilepsy
Published on

லிப்பு ‌நோயை நம்மில்‌ பலரும் ஒரு மனநோயாக புரிந்து கொள்கிறோம். மேலும். வலிப்பு நோயை காக்காய் வலிப்பு என்று கருதி சுயமாக மருத்துவம் செய்து கொள்கிறார்கள். இது தவறான கருத்து. வலிப்பு நரம்பியல் சார்ந்த பிரச்னை. குழந்தை பிறக்கும்போது மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடைபட்டு, அதன் அளவு குறையும்போது, மூளையில் சில தழும்புகள் ஏற்படும்.

இதுவே வலிப்பு நோய்க்கான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோன்று பச்சிளம் குழந்தைகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போதும் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சையை தொடர்ந்தால் மட்டுமே இந்த பாதிப்புகளை குறைக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். காய்ச்சலின்போது குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு இதில் வராது என்கின்றனர்.

80 சதவிகித வலிப்பு நோய்களை மருந்துகளால் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். முதலில் ஒருவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளதா என்பதை ஈ.ஈ.ஜி. மற்றும் சி.டி., எம்.ஆர்.ஐ., பெட் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்துவார்கள். அறுவை சிகிச்சை தேவையெனில் தயங்காமல் செய்துகொள்ள, நோயாளியை குணப்படுத்த முடியும். உரிய நேரத்தில் சரியான சிகிச்சை மேற்கொள்ளும் எந்த ஒரு வலிப்பு நோயாளியும், சராசரி மனிதர்களை போல தங்கள் வாழ்நாளை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.

வலிப்பு ஒருவருக்கு வந்தால், அருகில் இருப்பவர்கள் பதற்றமடையவோ, பயப்படவோ வேண்டாம். வலிப்பு வந்தவரை, தரையில் விழுந்து விடாமல் பிடித்து ஒரு பக்கமாக படுக்க வைக்க வேண்டும். அவரை கட்டுப்படுத்த முயல வேண்டாம். சாவியையோ, வேறு இரும்பு பொருட்களையோ கையில் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் நோயாளி தன்னை காயப்படுத்திக்கொள்ள நேரிடும்.

இதையும் படியுங்கள்:
இந்து கடவுளர் சிலர் வாகனமும் அவற்றின் வரலாறும்!
Epilepsy

நோயாளிக்கு நினைவு திரும்பும் வரை தண்ணீரோ, வேறு திரவமோ தரக் கூடாது. அப்படிக் கொடுத்தால் அது மூச்சுக்குழாய்க்குள்  சென்று சுவாசத் திணறலை ஏற்படுத்தி விடும். சில நிமிடங்களில் வலிப்பு தானாகவே நின்று விடும். பிறகு நோயாளி ஆழ்ந்து உறங்கி விடுவார். மருந்துகளைத் தவறாமல் கொடுக்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

தலையில் லேசாக மோதிக்கொண்டு ஏற்படும் சிறிய காயங்கள் கூட மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானமானது என்பதால் தலைப்பகுதியை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com