
செல்போன் பயன்பாடு தற்போது மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பல விளைவுகளையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் செல்போன் குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வில் கண்றியப்பட்ட தகவலை இந்த பதிவு விளக்குகிறது.
பொதுவாகவே மக்கள் சிறிது நேரம் ஓய்விற்காக நேரம் கிடைத்தாலும் கூட, அதை செல்போனில் தான் செலவிடுகின்றனர். விடுமுறை நாட்களில் படுத்துக்கொண்டு செல்போனை பாத்தவண்ணம் தான், இன்றைய இளையதலைமுறைகள் நேரத்தை செலவிடுகின்றனர்.
அதுமட்டுமா? சாப்பிடும்போது, கழிவறைக்கு செல்லும்போது என எந்தநேரம் பார்த்தாலும் செல்போனுடன் தான் காலத்தை கழிக்கின்றனர். தற்போது பெரியவர்களும் இந்த காலத்திற்கு ஏற்றார்போல் மாறவேண்டும் என நினைத்து செல்போன் பக்கம் படையெடுத்து வருகின்றனர். அதோடு, விபரம் தெரிவதற்கு முன்னே குழந்தைகளும் கூட செல்போன் வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். அந்த அளவிற்கு செல்போன் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆனால், இவ்வாறு மனிதர்கள் செல்போன் பயன்படுத்துவதால், பல்வேறு விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த வகையில், செல்போன் பயன்படுத்தினால் முகப்பரு வருவதாக ஒரு ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் செல்போனின் பயன்பாடும், முகப்பருக்கு காரணம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
செல்போன் உபயோகிப்பதால் முகப்பரு
செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால், அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, முகப்பரு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என ஆய்வு குறித்து, ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவைப்படும் நேரங்களில் மட்டும் உபயோகப்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுதுக்கின்றனர்.
செல்போன் பயன்படுத்துவதால், கண்கள், காதுகள் போன்றவை பாதிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது செல்போன் பயன்பாட்டால் முகப்பருவும் வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. பொதுவாகவே முகப்பருக்கள் வருவதற்கு எண்ணெய் சருமம், முகத்தில் அதிகப்படியான அழுக்குகள், அதிக எண்ணெய் கலந்த உணவுகள், சுத்தமற்ற தலையணை போன்ற காரணங்கள் இருக்கிறது. தற்போது மேலும் புதிய காரணமாக செல்போன் பயன்பாடு என்று கூறப்படுவது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியாகவே இருக்கும்.
முகப்பரு
முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள நினைக்கும் மக்கள் இது போன்ற தவறுகளால் அதை பெற முடியாமல், போகலாம். அதனால் பல அழகுசாதன பொருட்களை பயன்படுத்தினாலும், நம்முடைய தினம்தினம் செல்போன் பயன்பாடு அதை கெடுத்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் முகப்பரு வராமல் தடுப்பதற்கு, வைட்டமின் A அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தியானம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுப்படுவதோடு, செல்போன் போன்றவற்றை குறைத்துக் கொள்வதும் நல்லது.
முடிந்தஅளவு செல்போன் பயன்பாட்டினை குறைத்துக்கொள்வது நம் ஆரோக்கியத்தை சீராக வைப்பதற்கு பெரிய உதவியாக இருக்கும்.
நாம் செல்போனுக்கு அடிமையானால்; நோய்களுக்கும் அடிமையாக வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்!