
பெப்பர் ஸ்ப்ரே
தண்ணீருடன் மிளகு பொடி கலந்து எங்கெல்லாம் பல்லி தொந்திரவு இருக்கிறதோ அங்கெல்லாம் இதைத் தெளியுங்கள். மிளகின் நெடி பல்லிக்கு அலர்ஜி என்பதால் அவை ஓடிவிடும்.
வெங்காயம் பூண்டு
வெங்காயம் மற்றும் பூண்டு வாசனை பல்லியை விரட்டி விடும்.பூண்டு பல்லும், வெங்காயத்தையும் அரிந்து ஆங்காங்கு வைக்கலாம். ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வெங்காயம் பூண்டு துண்டுகள் சேர்த்து வைக்க அவை ஓடிவிடும்.
நாஃப்தலீன் உருண்டைகளை பல்லி புழங்கும் இடங்களில் வைக்கலாம். இதன் வாசனை பல்லியை விரட்டும். ஆனால் இந்த உருண்டைகளை உணவுப் பண்டங்கள் அருகே வைக்காதீர்கள்.
உங்கள் வீட்டை எப்போதுப் குளிர்ச்சியாக வையுங்கள். அதிக வெப்பத்தில்தான் பல்லிகள் வாழும். எனவே ஜன்னல் கதவுகளைத் திறந்து வைப்பது மற்றும் ஏ.சி ஏர்கூலர்களை பயன்படுத்தி கூலாக வைக்கவும்.
நீங்கள் உணவுப்பண்டங்களை திறந்து வைக்காதீர்கள். நீங்கள் சமைக்கும்போது அடுப்பிலோ அல்லது மேடையிலோ உணவுப் பொருட்கள் சிந்தியிருந்தால் உடனே சுத்தம் செய்யவும். கிச்சன் அலமாரி மேடை இவற்றை சுத்தமாக வைத்தால் பல்லி அண்டாது.
எப்போதும் அடைசலான ஈரமான இடங்களில் பல்லி புழங்கும். எனவே கிச்சன் சிங்க் மற்றும் அலமாரிகளை காற்றோட்டமாகவும் காய்ந்த நிலையிலும் வையுங்கள்.
பல்லி உலவும் இடங்களில் மயில் இறகை வைப்பது நல்ல பலன்தரும். பல்லியை விரட்ட இது சிறந்த இயற்கை முறையாகும்.
எலுமிச்சை புல்லை வைத்தால் அதன் வாசனையில் பல்லி ஓடிவிடும்.
முட்டை ஓடுகளை வைப்பதும் சிறந்தது.
ஃபினைல் டாப்லெட்டுக்களை ஆங்காங்கே வைத்தாலும் பல்லி ஓடிவிடும். இதன் வாசனை அதை விரட்ட வைக்கும்.
மிளகாய்ப்பொடியை கரைத்து சுவர்களில் பொட்டு மாதிரி வைக்க பல்லி குறையும்.
காபி பௌடர் மற்றும் மிளகாய் பொடி கரைத்து சுவர்களில் பல்லி வரும் இடங்களில் கொஞ்சம் வைக்க பல்லி ஓடிவிடும்.
யூகலிப்டஸ் எண்ணை மிளகுக்கீரை எண்ணை மற்றும் கிராம்புகள் பயன்படுத்தி பல்லியை விரட்டலாம். கிராம்பு வாசனைக்கு பல்லி ஓடிவிடும்.
எலுமிச்சை மற்றும் வினீகர் கலந்து அதை பயன்படுத்தும்போது பல்லிக்கு எரிச்சல் ஏற்பட்டு ஓடிவிடும்
புதினா மற்றும் துளசி இவற்றை பல்லிகள் காணப்படும் இடத்தில் போட்டு வைக்கவும்.
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் டெட்டால் விட்டு தண்ணிருடன் கலந்து சேர்த்து அதை ஸ்ப்ரே செய்ய அவை மறையும்.