கார் சைடு மிரரைப் பார்த்து வண்டியை திருப்பினால் ஆபத்தா? ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

"Objects in mirror are closer than they appear" - இதன் பின்னணியில் உள்ள இயற்பியல் உண்மை மற்றும் பாதுகாப்பு ரகசியம்!
சைடு மிரர்
சைடு மிரர்Gemini image
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

எனக்கு கார், பைக் ஓட்டிய நல்ல எக்ஸ்பிரியன்ஸ் இருந்தாலும், வண்டி ஓட்டும்போது ‘சைடு மிரர்’ அடியில இருக்குற "Objects in mirror are closer than they appear" என்ற வார்த்தையை நான் இதுவரைக்கும் பெருசா கண்டுகாமல் இருந்தேன். ஆனா, ரீசண்டா இதப்பத்தி தெரிஞ்சப்போ செம ஷாக்கா இருந்துச்சு! நாம தினமும் பார்க்குற அந்த ஒரு சின்ன வரியில எவ்வளவு பெரிய சயின்ஸ் ஒளிஞ்சிருக்கு தெரியுமா?

நாம வண்டி ஓட்டும்போது சைடு மிரர் பார்த்துட்டு, பின்னாடி வர்ற வண்டி ரொம்ப தள்ளிதான் இருக்குன்னு நினைப்போம். ஆனா அதுதான் பெரிய தப்பு! உண்மையில, அந்த வண்டி நமக்கு ரொம்ப பக்கத்துல வந்திருக்கும். இப்படி இந்த ஆபத்தான கண்ணாமூச்சி ஆட்டத்துக்குப் பின்னாடி ஒரு செம அறிவியல் காரணம் இருக்கு. காரோட லெஃப்ட், ரைட் மிரர்ஸ்(Left & Right) எல்லாமே ‘வெளிப்புறமா வளைந்த கண்ணாடிகள்' (Convex mirrors) டைப்ப சேர்ந்தது. சாதாரண வீட்டு முகம் பார்க்கும் கண்ணாடியை விட, இந்த மாதிரி வளைஞ்ச கண்ணாடியில தான் பின்னாடி இருக்குற ஏரியாவை ரொம்ப அகலமா பார்க்க முடியும்.

இதனால, பயங்கர டிராஃபிக் இருக்குற ரோட்டில வண்டி ஓட்டும்போது, கண்ணாடியில நார்மலா தெரியாம இருக்கும் இடங்கள்(Blind spots) இதனால கொஞ்சம் குறையும். அதாவது, ‘டக்குனு வண்டிங்க நம்ம கண்ணுக்குத் தெரியாம சைடுல கிராஸ் பண்ணி போறத முன்னாடியே பார்த்திருவோம்’.

ஆனா, இந்த வெளிப்புறமா வளைந்த கண்ணாடிகளோட ஒரு மைனஸ் பாயிண்ட் என்னன்னா, அதுல தெரியுற வண்டிங்க எல்லாமே ‘அதோட ஒரிஜினல் சைஸை விட ரொம்ப சின்னதா தெரியும்’. நம்ம மூளை எப்பவுமே சின்னதா இருக்குற பொருளை ரொம்ப தூரத்துல இருக்குறதா தப்பா நினைக்கும். இதனால தான் கண்ணாடியில கார் தூரமா தெரிஞ்சாலும், நிஜத்துல அது நமக்கு ரொம்ப பக்கத்துல; ‘சில நேரம் வேகமா கிட்ட வந்து நிக்கும்’.

சைடு மிரர்
சைடு மிரர்Gemini image

ஆனா, வண்டிய நேரா ஓட்டும்போது சைடு மிரர் பார்த்த நமக்கு எந்த வித்தியாசமும் தெரியாதுங்க. பட், டக்குனு வண்டியத் ரைட்டோ, லெப்டோ திருப்பும் போதுதான் அது பெரிய விபத்துல கொண்டு போய் விட்ருலாம்! காரைத் தயாரிச்ச இன்ஜினியர்ஸே வேணும்னுதான் இந்த கண்ணாடியை இப்படி மாத்தி டிசைன் பண்ணியிருக்காங்க.

இதையும் படியுங்கள்:
வீட்டை சுத்தம் செய்யும் போது இந்த முட்டைகளை பார்த்தால் உடனே ஓடி விடுங்கள்!
சைடு மிரர்

ஏன்னா, தூரம் கொஞ்சம் தப்பா தெரிஞ்சாலும் பரவாயில்லை, பின்னாடி இருக்குற ஏரியா ரொம்ப அகலமா தெரிஞ்சா நிறைய விபத்துக்களைத் தடுத்துடலாம்னுதான் அவங்க இத டிசைன் பண்ணாங்க. சோ, வண்டிய ஓட்டுற டிரைவர்தான் இத புரிஞ்சி ரொம்ப அலர்ட்டா இருக்கணும்.

அமெரிக்காவோட ‘FMVSS 111 பாதுகாப்பு சட்டப்படி’, கார் கண்ணாடியோட வளைவு, சைஸ், ஏன்... அந்த எழுத்துக்களோட அளவு வரைக்கும்னு பக்காவா ரூல்ஸ் இருக்கு!. அதனால தான் அமெரிக்கா, இந்தியாவுல இந்த எச்சரிக்கை வார்த்தையை கண்டிப்பா கண்ணாடியில எழுதணும்னு சட்டம் சொல்லுது. ஆனா, யூரோப் நாடுகள்ல இந்த ரூல்ஸ் கிடையாது, அங்க இருக்குறவங்க' இந்த வார்த்தைகளோட லேபிள் இல்லாமலேயே’ ஓட்டப் பழகிட்டாங்க.

இதையும் படியுங்கள்:
காரில் ஸ்கரெட்ச் ஆனா பயப்படாதீங்க! தப்பிக்கவும் இழப்பீடு பெறவும் எளிய வழிகள்!
சைடு மிரர்

பைக், கார் கண்ணாடில வேறுபாடு இருக்கா?: 

நிறைய பேருக்கு ஒரு டவுட் இருக்கும், கார், பைக் கண்ணாடி ரெண்டும் ஒன்னுதான? ரெண்டுமே ஒரே வியூ தான் தருதான்னு கேட்டா... அங்கதான் ஒரு செம ட்விஸ்ட்டே இருக்கு! டிரைவர் சைடு பிளெயின்(Plain) கண்ணாடியும் (நம்ம வீட்டு கண்ணாடி மாதிரி), லெப்ட் சைடு வளைந்த கண்ணாடியும்(Convex) வைக்கிற முறை இப்போ அமெரிக்காவுல மட்டும்தான் கட்டாயமா இருக்கு.

ஆனா இந்தியா, யூரோப்(Europe) நாடுகள்ல இந்த முறை 1980களிலேயே முழுசா மாறிருச்சு. இப்போ நம்ம ஊர்ல (கார் & பைக்ல) ரெண்டு பக்கமுமே வளைந்த கண்ணாடிகள்தான்(Convex) கொடுக்குறாங்க. டிரைவர்ஸ்க்கு எது பெஸ்ட்னு பார்த்தா... பிளெயின் கண்ணாடி தூரத்தை கரெக்ட்டா காட்டும், ஆனா வளைந்த கண்ணாடிதான் நல்ல ‘அகலமான வியூவை’ காட்டி விபத்துல இருந்து நம்மைக் காப்பாத்தும்!. இப்படி ‘ஒவ்வொன்னுக்கும் ஒரு பிளஸ் இருக்கு’.  

வண்டி ஓட்டும்போது சைடு மிரர் பார்க்கும் பழக்கம் மட்டும் போதாது, அந்தக் கண்ணாடி காட்டும் தூரத்தின் பின்னால் இருக்கும் அறிவியல் ஆபத்தையும் புரிந்து கொண்டு பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம்.

logo
Kalki Online
kalkionline.com