'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்பது போல் உணர்கிறீர்களா?

weight comparison
weight comparison
Published on

சில காலங்களுக்கு முன்பு நல்ல உடல் தேகத்துடன் இருந்த சிலர் சமீப காலங்களில் உடல் மெலிந்த நிலையில் காணப்படுவர். என்னதான் அவர்கள் நன்றாக இருப்பது போல் உணர்ந்தாலும் சில பிரச்னைகள் அவ்வளவு எளிதில் அதன் தீவிரத்தை வெளிக்காட்டுவதில்லை. ஏன் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்வோம்.  

என்னென்ன காரணங்களாக இருக்கலாம்?

ஒரு காலத்திற்கு முன்பு உடல் அளவில் நல்ல தேகத்துடன் இருந்த சிலர்  காலப்போக்கில் மெலிந்தவர்களாக மாறுவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள்தான். அதனால் அதிக மன அழுத்தம் ஏற்படுவதோடு பரபரப்பான அட்டவணைகளால் உடல் செயல்பாடு விஷயங்களில்  மாற்றங்களையும் எதிர்கொண்டு வருவோம்.

குறிப்பாக, மன அழுத்தம் எல்லா நேரமும் பசியின்மையை  உணரவைக்கும். இதுவே சற்றும் எதிர்பாராத எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, சிலருக்கு வயதாகும்போது  ​​​​அவர்களின் வளர்சிதை மாற்றம் (Metabolism), தசை நிறை (Muscle mass) இயற்கையாகவே குறைகிறது. இதுவும் அவர்களின் மெலிந்த உடலமைப்பிற்கு பங்களிக்கிறது.

சிலர்  நன்றாக சாப்பிட்டாலும் பல்வேறு காரணங்களால் அவர்களின் உடல் தேக வளர்ச்சி தடுக்கப்படலாம். அவர்கள் மற்றவர்களை விட அதிக அளவிலான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். இதனால் என்னதான் ஆரோக்கியமான உணவு முறை இருந்தாலும் அவர்கள் மெலிந்த தோற்றத்திலே காணப்படுவர்.

இதையும் படியுங்கள்:
'இன்னும் கொஞ்சம் சாப்பிட்டால்தான் என்ன?' - இதுதான் பிரச்னையே!
weight comparison

இது போக  ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyroidism), நீரிழிவு நோய் (Diabetes), இரைப்பை குடல் கோளாறுகள் (Gastrointestinal disorders) மற்றும் நாள்பட்ட நோய்த்தொற்றுகள் போன்ற மருத்துவ நிலைகளும் சிலரின் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

மேலும், சில மருந்துகள் மற்றும் தனிப்பட்ட சிகிச்சைகள் பசியின்மையை வரவழைத்து ஊட்டச்சத்து பெறுதலை பாதிக்கலாம். இறுதியில் அதுவே ஒரு மெலிந்த நிலைக்கு பங்களிக்கும்.

மேலே சொன்ன எந்த காரணமும் இல்லை; ஆனாலும் ஏன்?
பொதுவாக சிலர் நன்றாக இருப்பது போல் உணர்ந்தாலும் மெலிந்து இருப்பதற்கு இன்னும் சில காரணங்கள் உள்ளன. குறைந்த கலோரி அல்லது ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எல்லா நேரமும் உட்கொள்வது, அவர்கள் எதிர்கொள்ளும் கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் காரணங்கள் அவர்களின் உணவு முறைகளில் மாற்றம் உண்டாக்கி பார்ப்பதற்கு உடல் மெலிந்தது போல் தோற்றத்தைக் கொடுக்கும்.

இதை எப்படி கையாளலாம்?

மெலிந்த நிலை தொடர்பான பிரச்சினைகள் அல்லது சிக்கல்களை கண்டறிய  தனிநபர்கள் தங்கள் எடை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

உங்களாலேயே யூகிக்க முடியாத எடை இழப்பு, தொடர்ச்சியான சோர்வு அல்லது இரைப்பை குடல் (Gastrointestinal) பிரச்சனைக்கான அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு சுகாதார நிபுணரை சந்திக்க வேண்டும். அங்கு மேற்கொள்ளும் இரத்த பரிசோதனைகள் உங்கள் நிலைமைகளை அடையாளம் காண உதவும்.

இதையும் படியுங்கள்:
இறந்தவரின் மூளையிலிருந்து நினைவுகளை மீட்டெடுக்கலாம்?
weight comparison

அதே நேரத்தில் நாம் மேற்கொள்ளும் ஒரு முழுமையான உணவு மதிப்பீடு நெடுநாள் இழந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் புதிரை வெளிக்கொண்டுவரும். கூடுதலாக தேவைப்பட்டால் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது உணவியல் நிபுணருடன் கலந்தாலோசிப்பது சிறந்த பலனைத் தரும்.

 ஆக, நீங்களோ அல்லது பிறரோ சமீப காலங்களில் இது போல் உடல் மெலிந்து காணப்படுவது போல் உணர்ந்தால் சற்றும் யோசிக்காமல் ஒரு விழிப்புணர்வுடன் மேலே குறிப்பிட்ட வழிகளை பின்பற்றி அதன் காரணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com