உங்க ஃப்ரீசர் முழுவதும் ஐஸ்கட்டி உருவாகுதா? இதுதான் காரணம்! 

Freezer
Freezer
Published on

நாம் அன்றாட வாழ்வில் உணவுப் பொருட்களைப் பாதுகாக்க பயன்படுத்தும் ஃப்ரீசர்கள், சில சமயங்களில் முழுவதும் ஐஸ் கட்டிகளால் நிரம்பிவிடும். இது ஃப்ரீசரின் செயல் திறனைக் குறைத்து உணவுப் பொருட்களின் தரத்தை பாதிக்கக்கூடும். இது எதனால் நிகழ்கிறது என்பதையும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

ஃப்ரீசரில் ஐஸ்கட்டி உருவாவதற்கான காரணங்கள்: 

ஃப்ரீசரின் தெர்மோஸ்டாட் சரியாக செயல்படாவிட்டால், ஃப்ரீசர் சரியான படி வேலை செய்யாமல் போகலாம். இதனால், ஃப்ரீசர் உள்ளே வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டு, ஐஸ் கட்டிகள் உருவாகும். சில நேரங்களில் ஃப்ரீசர் கதவை மூடும் டோர்சீல் சேதமடைந்தால், வெளிப்புற வெப்பம் ஃப்ரீசரின் உள்ளே செல்லும். இதனால், ஃப்ரீசர் உள்ளே ஈரப்பதம் அதிகரித்து ஐஸ் உருவாகும். 

ஃப்ரீசரில் அதிகப்படியான உணவுப் பொருட்களை வைத்தால், காற்று சுழற்சி சரியாக நடைபெறாது. இதனால், ஃபிரீசரின் உள்ளே வெப்பம் தேங்கி ஐஸ் உருவாகும். காய்கறிகள், பழங்களை மூடி வைக்காமல், ஃப்ரீசரில் வைத்தால் அவை ஈரப்பதத்தை வெளியிட்டு ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகளை உருவாக்கும். 

ஃப்ரீசரில் ஐஸ் கட்டி உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகள்: 

ஃப்ரீசரின் தெர்மோஸ்டாடை சரியாக அமைத்து அது தேவையான குளிரை உற்பத்தி செய்யும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஃப்ரீசரின் டோர்சீல் சரியாக இருக்கிறதா என சரி பார்க்கவும். அடிக்கடி ஃப்ரிட்ஜை திறக்காமல் இருப்பது நல்லது. 

ஃப்ரீசரில் வைக்கக்கூடிய உணவுகளை மட்டுமே வைக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உணவுப் பொருட்களை திணிக்க வேண்டாம். காய்கறி, பழங்களை மூடி வைத்து ஃப்ரீசரில் வைக்கவும். வாரத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரீசரை சுத்தப்படுத்தி பராமரிக்கவும். ஃப்ரிட்ஜை சூரிய ஒளி படும் இடத்திலோ அல்லது வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்திலோ வைக்கக்கூடாது. 

இதையும் படியுங்கள்:
வெயிலில் சென்று வீட்டுக்கு வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க… மீறி குடிச்சா? 
Freezer

ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் உருவாவது ஒரு சாதாரண பிரச்சனைதான். ஆனால், மேற்கண்ட காரணங்களைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதன் மூலம், இந்த பிரச்சினையை எளிதாகத் தீர்க்கலாம். இது தவிர உங்களது ஃப்ரிட்ஜை சரியாகப் பராமரிப்பதன் மூலம், நாம் நமது உணவுப் பொருட்களை நீண்ட காலம் பாதுகாத்துக் கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com