வெயிலில் சென்று வீட்டுக்கு வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க… மீறி குடிச்சா? 

Man Drinking Ice Water
Avoiding Ice Water After Sun Exposure
Published on

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாம் நமது நீரேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். வெயிலில் நீண்ட நேரம் இருந்து விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஐஸ் வாட்டர் குடிக்க ஆசையாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சரி வாருங்கள் இந்த பதிவில், வெயிலில் சுற்றித்திரிந்த உடனேயே ஐஸ் வாட்டர் குடிப்பது நமக்கு எதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி பார்க்கலாம். 

  1. Temperature Shock: நீங்கள் கொளுத்தும் வெயிலில் அதிகமாக நேரம் செலவிட்டால் உடல் வெப்பநிலை இயற்கையாகவே உயர்கிறது. அந்நேரத்தில் திடீரென ஐஸ் வாட்டர் குடித்தால் வெப்பநிலை சமநிலையின்மையால் அதிர்ச்சி ஏற்படலாம். குளிர்ந்த நீர் மற்றும் உங்கள் உடலின் உயர்ந்த வெப்ப நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு, தலைவலி தலைச்சுற்றல் போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக உங்கள் உடல் வெப்பநிலை ரூம் வெப்பநிலைக்கு வந்ததும் குளிர்ந்து நீர் குடிப்பது நல்லது. 

  2. செரிமான பாதிப்பு: செரிமான அமைப்பு நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தீவிர வெப்பநிலை மாறுபாடுகளால் இதன் செயல்பாடு சீர்குலையலாம். அதிக உடல் வெப்பத்தின்போது ஐஸ் தண்ணீர் குடிப்பது வயிற்றில் உள்ள ரத்த நாளங்களை சுருங்கச் செய்து செரிமான செயல்முறையை மெதுவாக்கும். இது வீக்கம் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். 

  3. குறைந்த நீர் உறிஞ்சும் தன்மை: வெயில் காலத்தில் தண்ணீர் குடித்து நம்மை நீரேற்றத்துடன் வைத்திருப்பது முக்கியமானது என்றாலும், ஐஸ் தண்ணீரை உங்கள் உடல் உறிஞ்சுவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே அதிக குளிர்ச்சியான தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும். 

  4. தொண்டை எரிச்சல்: சூரிய வெப்பத்தில் இருந்த பிறகு குளிர்ந்த நீரை குடிப்பது, உங்கள் தொண்டையில் உள்ள மென்மையான திசுக்களை சேதப்படுத்தலாம். திடீர் வெப்பநிலை மாற்றம் தொண்டை தசைகளை சுருங்கச் செய்து, வலி மற்றும் புண்கள் ஏற்பட வழிவகுக்கும். 

  5. ஆற்றல் இழப்பு: பொதுவாகவே வெயிலில் அதிகமாக சுற்றினால் உடல் அதன் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஆற்றலை செலவிடுகிறது. இத்துடன் நீங்கள் ஐஸ் தண்ணீர் திடீரென பருகும் போது, உடல் வெப்பநிலையை சமன் செய்ய வேகமாக இயங்குவதால், கூடுதல் ஆற்றல் இழப்பு ஏற்படும். இதனால் சோர்வு மற்றும் மந்தமான உணர்வு ஏற்படலாம். எனவே உங்கள் ஆற்றலை பாதுகாத்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வெயிலில் சென்று விட்டு வந்ததும் சாதாரண நீரை தேர்ந்தெடுத்து குடிக்கவும். 

இதையும் படியுங்கள்:
அதிர்ஷ்டம் தரும் குதிரை லாடம்... வீட்டு வாசலில் மாட்டினால் என்ன ஆகும் தெரியுமா?
Man Drinking Ice Water

இனி வெயிலில் சென்று வீட்டுக்கு வந்தால் உடனடியாக ஐஸ் வாட்டர் கொண்டு வரும்படி கேட்காதீர்கள். சிறிது நேரம் கழித்து உடல் ஆசுவாசமடைந்த உடன், மிதமான குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. இது உங்கள் உடலை பல்வேறு விதமான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com