
ஆடி மாதம் பிறந்து விட்டாலே, அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசையாக வரும். அதற்கான பொதுவான பண்டிகை டிப்ஸ்கள் சில:
1. பண்டிகைக்கான செலவு, வாங்க வேண்டிய துணிமணிகள், மளிகை பொருட்கள் முதலியவற்றை பட்டியல் போட்டு வையுங்கள். வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்ப, அவசியமான செலவுகளைச் செய்யுங்கள்.
2. பண்டிகைகளுக்கான வேலைகளை நாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை விட, குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் பங்கேற்கச் செய்தால் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நமக்கும் நல்லது. அவரவர் முடிந்த வேலைகளைச் செய்யலாம்.
3. பண்டிகைகள் வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே வீடு சுத்தம் செய்தல், பொருட்கள் வாங்குதல் போன்ற வேலைகளை முடித்து விட்டால், கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம்.
4. ஸ்மார்ட் ஃபோனிலேயே மூழ்கிக் கிடக்கும் இந்தக் காலக் குழந்தைகளுக்கு பண்டிகைகளின் மகத்துவங்களையும், மதிப்புகளையும் எடுத்துக் கூறி, அவர்களையும் பண்டிகையில் முழு மனதோடு கலந்து கொள்ள செய்யுங்கள்.
5. பண்டிகை காலங்களில், உணவு மற்றும் பானங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
6. நம் வீட்டில் வயதானவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இருந்தால், அதற்கு ஏற்ற வகையில், பட்சணங்கள் செய்து கொடுங்கள்.
7. பண்டிகை நாட்களில் டிவி, ஸ்மார்ட் ஃபோன் ஆகிய இரண்டையும் தவிர்த்து, நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை செலவிட்டுப் பாருங்கள். பண்டிகை டபுள் கொண்டாட்டமாக இருக்கும்.
8. பண்டிகைகள் வரும் முன், அதாவது இரண்டு நாட்களுக்கு முன், பட்சணங்கள் செய்யத் தேவையான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
9. பண்டிகை நாட்களில் வீடு சுத்தம் ஆவது போல, நாமும் நல்ல உடையுடன், பளிச்சென்ற தோற்றத்துடன் இருக்க வேண்டும்.