

இந்து மத சாஸ்திரத்தின் படி வாழ்க்கையில் ஒவ்வொருவரின் செயல்களும் அவரவரின் கர்மா என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வினைகளுக்கும் எதிர்வினை உண்டு. ஒவ்வொரு குழந்தைகளும் பிறக்கும் போது புதிதாகவே பிறக்கிறார்கள். பிறகு வாழ்க்கையும், அந்த சூழலுமே அவர்களின் செயல்களுக்கு காரணமாக மாறுகின்றன.
நம் செயல்களே நம் மனநிலையை தீர்மானிக்கும். சில செயல்கள் நம் மனதை போட்டு வருடி கொண்டே இருக்கும். காரணம் அனைவருக்கும் மனதோரம் ஒரு ஈரம் இருக்கும்.
மனநிலையை பாதிக்காத செயல்கள் அவசியமாகும். அடுத்தவர்களை காயப்படுத்தாமல் வாழ வேண்டும். அது நம்மையும் காயப்படுத்தும் என்று அறம் கூறுகிறது. அதிலும் நீங்கள் செய்யும் சில செயல்கள் மற்றவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், அவர்களால் செய்யப்பட்டவைகளாக கூட இருக்கலாம். ஆனால் இது உங்களின் மனநிலையையே பாதிக்கும். எனவே தனியாக சில முடிவுகளை எடுப்பது வாழ்க்கையில் அவசியமானதாகும்.
வாழ்க்கையில் நாம் தனியாக வந்தாலும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என வாழ்க்கை முழுவதும் நாம் நமக்கென்று ஒரு குழுவை உருவாக்கி கொண்டு நம் சுக, துக்கங்களை பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோம். இதனால் நம் பல செயல்கள் குழுவாகவே செய்வதாக உள்ளது. ஆனால் தனியாக சில விஷயங்களை செய்வது அவசியமானதாகும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். 20ஆம் நூற்றாண்டின் சிறந்த ஞானியாகவும் அறியப்படுகிறார். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். அப்படி அவரின் கூற்றுப்படி சில விஷயங்களை தனியாக செய்வது அவசியமானதாகும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அது என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தனியாக படிக்க வேண்டும்:
சாணக்கியரின் அறிவுறுத்தலின் படி ஒரு நபர் தனியாக படிக்க வேண்டுமாம். பலர் இருந்தால் படிப்பில் கவனம் சிதறும் என்பதால் படிக்கும் போது தனியாக இருப்பது கட்டாயமாகும்.
தியானம்:
தியானம் என்பது வாழ்க்கையில் தேவையான ஒன்றாகும். நாம் மனம் பதறும் போதும், தடுமாறும் போது நம்மை நாமே ஒருநிலைப்படுத்துவதற்கு தியானம் ஒன்றே சிறந்த தீர்வாகும். இதற்கு அமைதியான இடமும், தனிமையும் தான்ம் மிக அவசியம். இதனாலேயே தியானத்தை தனியாக செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. தியானத்தின் போது நீங்கள் ஏதேனும் பிரார்த்தனை மேற்கொண்டால் அதை யாரிடமும் சொல்லக்கூடாதாம்.
பணம் தொடர்பான வேலைகள்:
சாணாக்கியரின் கூற்றுப்படி பணம் தொடர்பான வேலைகளை தனியாக செய்ய வேண்டியது அவசியமானதாகும். இது பண இழப்பை குறைக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
தனியாகதான் சாப்பிட வேண்டும்:
ஒரு நபர் தனியாக சாப்பிடுவதே சிறந்ததாகும். அப்போ தான் அந்த உணவு அதன் வேலையை சரியாக செய்யும். கூட்டமாக சாப்பிட்டால், நாம் சாப்பாட்டில் கவனம் செலுத்தாமல் பேச்சில் கவனம் செலுத்துவோம் என்பதால் நிம்மதியாக சாப்பிட தனியாக சாப்பிடுவது அவசியமானதாகும்.