புதுவிதமான 5 மார்டன் ஊஞ்சல்களை பற்றித் தெரிந்துகொள்வோம்!

Different types of modern swings for home
Different types of modern swings for homeImage Credits: Her Zindagi
Published on

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடுவது என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விஷயமாகும். ஊஞ்சல் என்றதும் பழைய போரான ஊஞ்சல்களையே வீட்டிற்கு வாங்குவதை நிறுத்திவிட்டு, தற்போது மார்க்கெட்டில் வந்திருக்கும் மார்டனான ஊஞ்சல்களை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. Hammock swing: Hammock என்பது ஸ்பேனிஷ் வார்த்தை, இதன் அர்த்தம் Stretch of fabric என்பதாகும். இந்த ஊஞ்சலை வீட்டின் வாயிற்பகுதியான Terrace அல்லது Gardenல் போட்டால் நன்றாக இருக்கும். இந்த ஊஞ்சல் படுத்துக்கொண்டு ரிலாக்ஸ் செய்வதற்கு வசதியாக இருக்கும். இந்த Hammock swingல் படுத்துக்கொள்வதால் உடலில் உள்ள பிரஷர்களைப் போக்குகிறது என்று சொல்லப்படுகிறது.

2. Porch swing: இந்த ஊஞ்சலை வீட்டில் உள்ள Porch பகுதிகளில் பயன்படுத்துவார்கள். இந்த ஊஞ்சல் பெரும்பாலும் மரத்திலே ஆனதாக இருக்கும். இது ரிலாக் செய்வதற்காக அமைக்கப்படாமல், உடையாடல் நிகழ்த்துவதற்கு ஏற்ற இடமாக இருக்கும். இது பார்ப்பதற்கு ஊஞ்சல் போன்று இல்லாமல் ஒரு குட்டி சேர் போன்ற ஊஞ்சலாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஊஞ்சலை Steel chain அல்லது கயிற்றை பயன்படுத்தி அமைத்திருப்பார்கள்.

3. Canopy swing: உங்களிடம் பெரிய Garden போன்று Outer space இடங்கள் இருக்கிறது. ஆனால், ஊஞ்சல் வைப்பதற்கு இடமில்லை என்று நினைத்தால், இந்த வகை ஊஞ்சலை வாங்கி வைக்கலாம். இது Standalone ஊஞ்சல் என்பதால், எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இதை வெளியே வைக்க வேண்டும் என்பதால், குடை போன்ற அமைப்புடன் சேர்ந்தே வரும். அதனால் மழை வந்தாலும் இந்த ஊஞ்சலை பயன்படுத்த முடியும்.

4. Standing jhula: Canopy swing எப்படி வீட்டிற்கு வெளியில் உள்ள இடங்களில் பயன்படுத்துகிறோமோ அதேபோல, வீட்டின் உள்ளே ஊஞ்சல் மாட்ட இடமில்லாதபோது பயன்படுத்தப்படுவதுதான் Standing jhulaவாகும். இதை பால்கனி போன்ற இடங்களில் அமைப்பது வீட்டிற்கு மேலும் அழகைக்கூட்டும். உங்கள் வீட்டிற்கு உடனடியாக ஊஞ்சல் வேண்டும் என்று நினைத்தால், இந்த Standing jhula வாங்கலாம்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் பயன்படுத்தும் Perfume நாள் முழுவதும் இருக்கணுமா? இந்த 9 டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
Different types of modern swings for home

5. Macrame swing: Macrame என்பது கயிற்றை பின்னி செய்யக்கூடிய ஒருவகை ஊஞ்சல். இந்த வகை ஊஞ்சல் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கலைநயத்துடனும் இருக்கும். Macrame swing 120 கிலோ வரை உள்ள எடையை தாங்கக்கூடியதாகும். இந்த ஊஞ்சலை லிவிங் ரூம், பால்கனி போன்ற இடங்களில் அமைக்கலாம்.

இந்த 5 விதமான அழகழகான ஊஞ்சல்களில் ஏதேனும் ஒன்றை நீங்களும் உங்கள் வீட்டிற்கு ஊஞ்சல் வாங்கும்போது மறக்காமல் தேர்வு செய்து வாங்குங்கள். உங்களுடைய வீட்டிலேயே ரிலாக்சேஷன் ஸ்பாட்டை உருவாக்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com